தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லூக்கா17: 19
அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை, தங்கள் பாவத்தினால் பெலனிழந்தவர்கள் சுத்திகரிப்பு பெற்றுக்கொள்ளும்படியான பிரமாணம் திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய உள்ளான மனுஷனில் பாவத்தினால் உண்டாகிய சாபம், குஷ்டரோகம் என்ற வியாதி யாரையும் அணுகாதபடி, கர்ததருடைய கட்டளைகளுக்கும், கற்பனைகளுக்கும் கீழ்படிந்தால், யாரையும் இந்த தீங்கு தொடாது. மேலும் குஷ்டம் என்பது பல விதத்தில் சரீரத்தில் வெளிப்படுகிறது. எல்லாவித குஷ்டங்களும் சுத்திகரிக்கும் போதே சுத்தமாகிறது என்று தியானித்தோம்.
மேலும் கர்த்தர் மோசேயிடம் சொல்கிறது என்னவென்றால் குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால் குஷ்டரோகி ஆசாாியனிடத்தில் கொண்டு வரப்படவேண்டும். ஆசாாியன் பாளயத்துக்கு புறம்பே போய் குஷ்டரோகி வியாதி நீங்கி சுத்தமாயிற்றென்று கண்டால் சுத்திகரிக்கபடவேண்டியவனுக்காக
லேவியராகமம் 14: 4-9
சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டைளையிடக்கடவன்.
பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி,
உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து,
குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன்.
சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,
ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது நம்முடைய ஆத்துமா எவ்விதத்தில் ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதனையும் நாம் ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்று பாவங்களை கழுவி சுத்திகரித்து நம்முடைய பழைய அத்தனை பாவங்களையும் அடக்கம் பண்ணி புதிய சாயலை தரித்துக் கொள்ள வேண்டும் என்பதனை காட்டுகிறது. பின்பு பாளயத்தில் பிரவேசித்து கூடாரத்துக்கு புறம்பே தங்கி சுத்திகரிக்க வேண்டும். அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான்.
எட்டாம் நாளிலே பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒருவயதான பெண்ணாட்டுக்குட்டிகளையும், போஜன பலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டு வர கடவன் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதன் பொருளை நாம் கவனமாக ஆராய்ந்தறிந்தால் நம்முடைய பாவ சுத்திகரிப்புக்கு பின் ஏழு நாள் பாளயத்தில் பிரவேசித்து, கூடாரத்துக்கு வெளியே தங்கியிருக்கும் போது நம்முடைய உள்ளான மனுஷனாகிய புதிய சாயல் தரிக்கப்பட்டது.
நம்முடைய ஆத்துமா பெலனடைந்து இருக்க வேண்டும். அவற்றை பற்றி தான் இரண்டு குருவியாக இருந்தது எட்டாம் நாளில் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டியும், பழுதற்ற ஒரு பெண்ணாட்டு குட்டியாக தேவன் ஆவிக்குரிய திருஷ்டாந்தத்தை காட்டுகிறார். இது திரியேக தேவனுடைய சாயலாக காட்டப்படுகிறது.
மேலும் லேவியராகமம் 14:11
சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன். மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நாம் எந்த துஷ்ட ரோகங்களால் சிக்காதபடி தேவனுடைய வசனங்களால் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாமலும் இதனை வாசிக்கிற அன்பானவர்களே பாவங்களால் உள்ளம் இவ்வித கறைகளால் நிறைந்திருப்போமானால் தேவனிடத்தில் பாவ அறிக்கை செய்து, ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு, உள்ளான மனுஷனின் ஆத்துமாவில் எண்ணெயால் அபிஷேகிக்கப்பட்டு நம்முடைய ஆத்துமாவை சமர்ப்பிப்போமானால் கர்த்தர் நம்மை சுத்திகரிக்கிறார். அவரவர் தங்கள் தங்கள் ஆத்துமாவின் பெலனுக்கு தக்க சுத்திகரிக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்.
அதை குறித்து தான் லேவியராகமம் 14:32
தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக்கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார். அவ்விதம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.