தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 51: 12

உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய தேவனுடைய வீட்டிற்குள் குஷ்ட தோஷம் வராதபடி பாதுகாக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், ஒரு மனிதனுடைய சரீரத்தில் தோலின் மேல் உண்டாகும் குஷ்டத்தில் ஆறாம் வகை என்னவென்றால் அரிப்பு குஷ்டத்தை குறித்து தியானித்தோம்.  இந்த அரிப்பு குஷ்டம் எவ்விதம் கண்டு பிடிக்க முடியும் என்பதையும் அதை நீக்குவதன் வழிமுறைகளையும் தியானித்தோம். 

ஆனால் இந்த நாளில் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 14: 33 – 57

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால்,

அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.

அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,

அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால்,


ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து,

ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,

தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,

வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.

கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால்,

ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.

ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.

வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்.

ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன்.

அப்பொழுது வீட்டிற்குத் தோஷங் கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,

ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,

கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,

குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,

உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.

இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும்,

வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும்,

தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம்.

குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் கர்த்தர் நமக்கு காணியாட்சியாக தரும் தேசமாகிய கானான் தேசத்தை நாம் சுதந்தரித்தப் பின்பு அங்குள்ள வீட்டிலே குஷ்டதோஷத்தை வரபண்ணினால் என்று சொல்வது என்னவென்றால் நம் உள்ளம் தேவனுடைய வீடு. அந்த வீட்டில் குஷ்டதோஷத்தை வரபண்ணினால் அவன் ஆசாரினுக்கு அறிவிக்க வேண்டும். இவை நாம் தோஷம் அடைந்து இருக்கிறோம் என்பதற்கு திருஷ்டாந்தம்.  அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டாயிருக்கும். 

நம்முடைய ஆசாரியனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அந்த வீட்டை பார்வையிட்டு அந்த வீட்டின் சுவரில் கொஞ்சம் பச்சையும் சிவப்புமான குழி விழுந்திருந்தால் அவைகள் மற்ற சுவரை காட்டிலும் பள்ளமாயிருந்தால் ஆசாரியன் அந்த வீட்டை அடைத்து விடுகிறார். இதன்பொருள் என்னவென்றால் நம்முடைய உள்ள சுவர் பரிசுத்தம் இல்லாமல் பழுதடைந்து விடுகிறது. ஆனால் தேவனுடைய வீடாகிய மணவாட்டி சபை எந்த பழுதும் இல்லாமல் காணப்பட வேண்டும்.  அதை குறித்து தான் உன்னதப்பாட்டு 4: 7 என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை என்று சொல்லப்படுகிறது. 

நம்முடைய வாழ்வில் பரிசுத்தத்தில் எந்த குறைவுகள் காணப்படாதபடி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  ஆனால் வீடானது பழுதாயிருந்தால் ஏழு நாள் அடைத்துப்போடுகிறார் என்பது நம்முடைய விசுவாச யாத்திரையை முடக்கி போடுகிறார் என்பதை திருஷ்டாந்தப்படுத்துகிறார். 

அவற்றை குறித்து எண்ணாகமம் 12: 9 – 15 

கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.

மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.

தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.

அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.

கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.

அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.

என்னவெனில் ஆரோனும் மிரியாமும்  மோசேக்கு விரோதமாக பேசினதினால் கர்த்தர் இரண்டு பேரிடமும் கோபப்படுகிறார்.  மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிற்று அப்போது மிரியாம் உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகியானாள். பின்பு கர்த்தர் மோசேயிடம்  மிரியாம் ஏழு நாள் பாளயத்திற்கு புறம்பே விலக்கப்பட்டிருந்து பின்பு அவள் சேர்த்துக்கொள்ள பட கடவள் என்றார்.  அவள் சேர்த்துக்கொள்ளபடுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.  

அல்லாமலும் ஏழு நாள் அடைத்து வைக்கப்பட்டபின்பு அதனை பார்வையிடும் போது அது படரந்திருக்க கண்டால் மீண்டும் உள்புறம் உள்ள பொல்லாத செயல்களை மாற்றி சுத்தம் செய்யவேண்டும் அதன் பின்பு அது படர்ந்திருந்தால் வீட்டை முழுமையும் இடிக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார். அதுதான் தேவ வசனம் சொல்வது அவர் கட்டுகிறவரும் இடிக்கிறவரும் என்பதை 

எரேமியா 18:6-11  

இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.

பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,

நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.

அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.

இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறாரென்று சொல்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது நம்முடைய தேவன் இடித்தாலும் மீண்டும் கட்டுகிறவராயிருக்கிறார்.  அதனால் தான் லேவியராகமம் 14: 50-53

ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று,

கேதுருக் கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து,

குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து,

உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும்.

என்னவெனில் நம்முடைய பாவம் நிறைந்த ஆத்துமாவை புறம்பே தள்ளிப்போட்டு, அவருடைய வார்த்தையினால் புதிய சிருஷ்டியை நமக்குள் சிருஷ்டிக்கிறார். அப்படி தேவன் நம்மை புதிதாக்கி சுத்திகரிக்கிறார்.  இவ்விதமாக குஷ்டரோகத்திற்குரிய   பிரமாணம் நமக்கு தந்து தீட்டுள்ளதும் தீட்டில்லாததுமாகிய காரியங்களை தேவன் நமக்கு வெளிப்படுத்தி நாம் எவ்விதம் தீட்டில்லாதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தேவன் நமக்கு அறிவுறுத்துகிறார். ஆதலால் மணவாட்டி சபைக்குள் குஷ்டமாகிய தீட்டு தொடாதபடி காத்து கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.