தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 12:27
நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை துர்கிரியையாகிய பிரமியத்தினால் தீட்டுப்படாதபடி கிறிஸ்துவின் சரீரமாக மாற்றப்பட வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், வீட்டிற்குள் வருகிற குஷ்டதோஷம் எப்படி கண்டறிய வேண்டும் என்றும், அதனின்று எப்படி விடுதலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தியானித்தோம். குஷ்டதோஷம் அதிகமாக படர்ந்தால் அந்த வீட்டை கர்த்தர் இடித்து மீண்டும் கட்டுகிறார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.
கர்த்தர் இடித்த வீட்டை மீண்டும் கட்டும் போது ஆடல் பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டம் புறப்படும் என்று சொல்லப்படுகிறது. என்னவென்றால்
எரேமியா 33: 10-18
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,
இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க் கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.
அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.
தகனபலியிட்டு, போஜனபலி செலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் நம்முடைய அழுக்குகளை முழுமையும் அகற்றி புதுப்பித்து கட்டும் போது மிகுந்த பரலோக ஆசீர்வாதங்களும், கிறிஸ்துவின் சிங்காசனத்தின் மகிமையும், மேலும் தினந்தோறும் தேவனுக்கு ஆராதனை செலுத்தும் கிருபையும் உண்டாயிருக்கும்.
அல்லாமலும் லேவியராகமம் 15:1-15
பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.
அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்.
பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப்படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும்.
அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.
பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான்.
எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல சொல்வது என்னவென்றால் ஒருவனுக்கு பிரமியம் உண்டானால் அவன் தன் பிரமியத்தினால் தீட்டானவன். அவன் படுத்திருக்கிற படுக்கை தீட்டாயிருக்கும். அவன் உட்காருகிற இடம் தீட்டாகும். அவன் படுக்கிற படுக்கையை தொடுகிறவனும் தன் வஸ்திரங்களை தோய்த்து தண்ணீரில் மூழ்கி சாயங்கால மட்டும் தீட்டாயிருப்பான். பிரமியம் உள்ளவனின் சரீரத்தை தொடுகிறவன் தன் வஸ்திரங்களை தண்ணீரில் தோய்த்து, தண்ணீரில் மூழ்கி தீட்டாயிருப்பான். பிரமிய உள்ளவன் ஒருவன் மேல் துப்பினாலோ, அவன் சேணத்தில் ஏறினாலோ, அவனுடைய கீழிருந்த எதையும் தொட்டாலோ, அவன் வஸ்திரங்களை தோய்த்து தண்ணீரில் மூழ்கி சாயங்கால மட்டும் தீட்டாயிருப்பான்.
அது போல பிரமியம் உள்ளவன் தன் கைகளை கழுவாமல் ஒருவனை தொட்டால், தொடப்பட்டவன் தன் வஸ்திரங்களை தோய்த்து தண்ணீரில் கழுவி, சாயங்காலமட்டும் தீட்டுபட்டிருப்பானாக. அது போல மண் பாணடம் தொட்டால் அது உடைக்கப்படவேண்டும். மரச்சாமான்களானால் கழுவப்பட வேண்டும். ஆனால் பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கி சுத்தமானால், ஏழு நாள் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களை தோய்த்து, தன் தேகத்தை ஊற்று நீரில் கழுவினால் சுத்தமாயிருப்பான். எட்டாம் நாளில் தன் பிரமியத்தினிமித்தம் முழுமையும் தன்னை தேவனுக்கென்று பலியான காணிக்கையாக படைக்க வேண்டும்.
அல்லாமலும் மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் பிரமியம் மிகவும் தீட்டானது. இது மாம்ச இச்சைகளினால் உண்டாகிற துர்க்கிரியை. பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் , இவ்விதமான ஒவ்வொரு செயல்களுக்கும் வஸ்திரங்கள் தோய்க்கவும், தண்ணீரில் மூழ்கி தங்களை கழுவி சுத்திகரித்தால், அந்த தீட்டு சாயங்காலம் மட்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஆனால் புதிய உடன்படிக்கையின் காலத்தில் வஸ்திரம் என்பது இரட்சிப்பு, நாம் கிறிஸ்துவின் இரத்தத்தோடு உடன்படிக்கை பெற்று, அவரை வஸ்திரமாக தரித்திருக்கிறோம். அதனால் அவர் நமக்காக பாடுபட்டு ஒரே தரம் மரித்தார். மரித்த அவர் மீண்டும் நமக்குள்ளாக உயிர்ப்பிக்கப்படுகிறார். அவர் நமக்குள்ளாக உயிர்ப்பிக்கப்பட்டு இருக்கிறதினால் மேற்க்கூறிய துர்கிரியைக்கு இடமில்லை.
அவ்விதம் யாராவது பாதிக்கப்பட்டு இருப்பீர்களானால் இப்பொழுதே கிறிஸ்துவின் வசனத்தினால் சுத்திகரிக்கப்பட்டு, நம் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுமையும் ஒப்புக்கொடுத்து, கிறிஸ்துவின் சரீரமாக நாம் மாற்றப்பட்டு, ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.