தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 8: 48

அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை இந்திரியத்தலோ, உதிர ஊறலால் தீட்டுபடாதபடி  இரட்சிப்பை காத்துக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், பிரமியத்தால் தீட்டுபடாதபடிக்கு நம்மை பாதுகாத்துக்கொண்டு இருக்க வேண்டுமானால், நம் உள்ளத்தில் கிறிஸ்து உயிர்தெழ வேண்டும் என்றும், நாம் கிறிஸ்துவின் சரீரமாக மாற வேண்டும் என்பதையும் தியானித்தோம். 

அடுத்தபடியக இந்த நாளில் தியானிக்கிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 15:16-33  

ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பதாக.

இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம் மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.

ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.

அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.

அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள்.

எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.

ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள்.

பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக்கழிவினாலே தீட்டானவனுக்கும்,

சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்றபிரமாணம் இதுவே என்றார்.

மேற்க்கூறிய வசனங்களை தியானிக்கும் போது ஒரு மனுஷனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால் தண்ணீரில் முழுக வேண்டும், அப்படியானால் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.  அது எந்த வஸ்திரத்திலோ அல்லது தோலிலோ பட்டால் தண்ணீரினால் கழுவி சாயங்காலமட்டும் தீட்டுபட்டிருப்பான்.  மேலும் சூதக ஸ்திரீ ஏழு நாள் விலக்கத்தில் இருக்க வேண்டும்.  அப்படிபட்டவளை தொடுகிறவனும் தீட்டுப்பட்டிருப்பான். அல்லாமலும் அவள் படுக்கிற படுக்கையும், உட்காருகிற இடமும் தீட்டாயிருக்கும் . அந்த படுக்கையை தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களை தோய்த்து தண்ணீரில் மூழ்கி, சாயங்கால மட்டும் தீட்டுபட்டிருப்பான். மேலும் அவள் உட்கார்ந்த மணையை தொடுகிறவனும், தன் வஸ்திரங்களை தோய்த்து தண்ணீரில் மூழ்கி சாயங்காலமட்டும் தீட்டுபட்டிருப்பான். 

லேவியராகமம் 15:25-33 ஒரு ஸ்திரீ விலகியிருக்க வேண்டிய காலம் அல்லாமல் அவளுடைய உதிர ஊறல் ஊறிக்கொண்டிருந்தால் அதின் மீதி நாட்கள் அவள் தீட்டாயிருப்பாள். அப்படிப்பட்டவளுடைய படுக்கையும், உட்கார்ந்த மணையும் விலக்கத்தின் தீட்டைபோலவே தீட்டாயிருக்கும். அவளுடைய உதிர ஊறல் நின்று போன பிறகு அவள் ஏழு நாளுக்கு பிறகு  சுத்தமாவாள்.  

எட்டாம் நாளில் அவள் தன்னை சுத்திகரிக்கும் படியாக தன்னுடைய ஆத்துமாவை தகனபலியுமாக்கி, கர்த்தருடைய சந்நிதியில் உதர ஊறலினிமித்தம் பாவ நிவிர்த்திச் செய்ய கடவள். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தை தீட்டுபடுத்தி தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு மேற்க்கூறப்பட்ட வார்த்தைகளால் அவர்களை தீட்டுகளுக்கு விலக்கி காத்துக் கொள்ள வேண்டும். இவ்விதமாக தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளைகளை நாம் கைக்கொண்டு நடக்க வேண்டும்.  

ஏனென்றால் நாம் எல்லாவரும் தேவனுடைய வாசஸ்தலமாயிருக்கிறோம்.  அவருடைய வாசஸ்தலம் மிகவும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அந்த பரிசுத்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலம் விளங்குகிறது. அதற்கு திருஷ்டாந்த படுத்தவே தண்ணீரில் முழுக வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. 

இவை கிறிஸ்துவின் வசனமாகிய ஜீவ  தண்ணீரினால் நாம் இரட்சிக்கப்பட்டு இவ்விதமான கறைகளாகிய எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழும்பி சரீரங்கள் தீட்டுபடாதபடி காத்துக்கொள்ள வேண்டும். அதற்கு திருஷ்டாந்தப்படுத்தினது பெரும்பாடுள்ள ஸ்திரீ கிறிஸ்துவின் வஸ்திரத்தை தொட்டவுடனே அவள் சொஸ்தமானதை பார்க்கிறோம். 

இவ்விதமாக இரட்சிப்பை பெற்றுக்கொண்டு எந்த தீட்டும் இல்லாதபடி நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.