தேவனுக்கே மகிமையுண்டாவதாக
I சாமுவேல் 2: 3
இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை சாகாமல் பிழைத்திருக்க தங்கள் ஆத்துமாக்களை தாழ்மைப்படுத்த வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபைக்குள்ளாக இந்திரியத்தால் தீட்டுபடாதபடிக்கும், உதிர ஊறலால் தீட்டுப்பட்டு வஸ்திரங்கள் அழுக்காகாதபடிக்கும் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவ்விதம் தீட்டுப்பட்டவர்கள் அவரவர் வஸ்திரங்களை அவரவர் ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தில் கழுவி சுத்திகரித்து பின்பு தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தியானித்தோம்.
இன்றைக்கு நாம் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால் லேவியராகமம் 16ம் அதிகாரத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், ஆரோனின் இரண்டு குமாரர்களும் மரித்துப்போன பின்பு கர்த்தர் மோசேயிடம் கிருபாசனத்தின் மேல் ஒரு மேகத்தின்மேல் நான் காணபடுவேன். ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின் மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக சகல வேளையிலும் வரவேண்டாம் என்று கர்த்தர் ஆரோனிடம் சொல்ல சொல்கிறார்.
இவ்விதமாக கர்த்தர் ஆரோனிடம் சொல்ல சொன்னதின் காரணமோ என்னவென்றால் நம்முடைய கர்த்தாகிய இயேசு கிறிஸ்து மரித்து உயிர்தெழுந்த பின்புதான் நாம் கிறிஸ்து மூலம் கிருபாசனதண்டை சேர முடியும். இயேசு கிறிஸ்து நமக்காக மரித்து உயிர்தெழுவதற்கு முன்பு யாரும் நேரடியாக கிருபாசனத்தண்டை நெருங்க முடியாது. அதற்காக தான் இயேசு கிறிஸ்து மகா பரிசத்தராக வெளிப்படுகிறார், யாரும் அந்நிய கிரியைகளோடு அங்கு பிரவேசிக்க முடியாது. அதனை குறித்து நாம் சில நாட்களுக்கு முன்பாக தியானித்தோம்.
என்னவென்றால் ஆரோனின் குமாரராகிய நாதாபும் அகிதூபும் அந்நிய அக்கினியோடு கர்த்தரின் சந்நதியில் வந்ததினால் அவர்கள் செத்தார்கள் என்று பார்த்தோம். அதனால் தான் கர்த்தர் சொல்கிறார்; லேவியராகமம் 16:3
ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும்.
கிறிஸ்து நமக்காக பலியாகிறார் என்பதற்கு திருஷ்டாந்தம். மேலும் நாம் கிறிஸ்து தருகிற சத்திய வசனம் நாம் தரித்துக்கொள்ள வேண்டும் என்பதனை தான் லேவியராகமம் 16:4
அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப்போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு,
மேலும் நாமும் கிருபாசனத்தண்டை சேருவதற்கு, நம்முடைய பாவ நிவாரண பலிக்காக அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தால் தான் நாம் கிருபாசனத்தண்டை சேர முடியும். நம்முடைய ஆத்துமா சாகாமல் பிழைத்திருக்க வேண்டுமானால் நம்முடைய பாவத்திற்காக,அக்கிரமத்துக்காக அவருடைய இரத்தம் பிராய சித்தம் செய்தால் மட்டுமே கிறிஸ்துவோடு பிழைத்திருக்க முடியும், அதை தான்
லேவியராகமம் 16 :13-25
தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.
பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து,
இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன்.
பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது.
பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,
தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன்.
அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்த்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி,
அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்.
அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன்.
ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு,
பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,
பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்.
பின்பு ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்று, நம் ஆத்துமாக்களை கிறிஸ்துவின் இருதயம் போல் தாழ்மைப்படுத்திக்கொள்வது நித்திய கட்டளையாக இருக்கிறது. இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆத்துமாக்களை பாவ அறிக்கை செய்து தாழ்மைப்படுத்தி ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.