தேவனுக்கே மகிமையுண்டாவதாக
தீத்து 3: 14
நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை தங்களை பேய்களுக்கு பலிச்செலுத்தாமல் பாதுகாத்தல்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், நாம் நம்முடைய பாவங்களுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவ பிராயசித்தம் செய்து, அதற்கு பின் நாம் அவரவர் ஆத்துமாக்களை மிகவும் தாழ்மைபடுத்த வேண்டும் என்று தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
லேவியராகமம் 17:1-7
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்:
இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,
பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான்.
ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
இதன் கருத்துக்களை கர்த்தர் மொசேயிடமும், ஆரோனிடமும், இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிடுகிறது என்னவென்றால், இஸ்ரவேல் குடும்பத்தாரில் யாராவது மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்பு கூடார வாசஸ்தலத்துக்கு முன்பாக கர்த்தருக்கு செலுத்தும்படி கர்த்தரின் சந்நிதியில் கொண்டு வராமல் பாளயத்துள்ளாகிலும், பாளயத்துக்கு புறம்பாகிலும் அதை கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தபழியாக எண்ணப்படும். என்னவென்றால் நம்முடைய ஆத்துமாவுக்கு தான் தேவன் திருஷ்டாந்த படுத்துகிறார். நாம் செய்த பாவத்துக்காக நம் பழைய ஆத்துமா சாக வேண்டும். புதிய ஜீவன் பெற்று கிறிஸ்துவின் வசனத்தால் உயிர்பிக்கபட வேண்டும். இவை கர்த்தரின் சந்நிதியில் ஒப்புக்கொடுத்து புதிய சாயல் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் பாளயத்துக்கு வெளியே உள்ள காரியங்களில் தன் ஆத்துமாவை கெடுக்துக் கொண்டால் தன் ஜனத்தில் இராதபடி அறுப்பண்டு போவான். ஆகையால்
லேவியராகமம் 17:5-7
ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதான பலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.
அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன்.
தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை ஆசரிப்பு கூடார வாசலுள் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வந்து அங்கே அவைகளை கர்த்தருக்கென்று சமாதானபலிகளாக செலுத்த கடவர்கள். மேலும் லேவயராகமம் 17:7 நாம் தேவனை விட்டு தூரமாய் இருதயத்தை உலகத்திற்கு நேராய் செலுத்துவோமானால் சோர மார்க்கமாய் பின்பற்றுகிற பேய்களுக்கு தங்கள் பலிகளை செலுத்துகிறோம், அவ்விதம் பேய்களுக்கு பலிச்செலுத்தாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.
நாம் தேவனை விட்டு தூரம் போய் பலிச் செலுத்துவோமானால் பேய்களுக்கு பலி செல்த்துகிறோம் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். மேலும் கர்த்தர் சொல்லுகிற காரியம் என்னவென்றால், நம்மளில் தங்குகிற அந்நியரில் யாராவது பலி செலுத்தினால் கர்த்தரின் சமூகத்தில் கொண்டு வந்து பலி செலுத்த வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் அவன் தன் ஜனத்தில் இல்லாதபடி அறுப்புண்டு போவான்.
அல்லாமலும் இஸ்ரவேல் குடும்பத்தாரிலோ, அங்கு தங்கும் அந்நியரிலோ யாராவது இரத்தம் புசிததால், கர்த்தர் அவனுக்கு விரோதமாக முகத்தை திருப்பி, தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார். என்னவென்றால்
லேவியராகமம் 17:11,12
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.
அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
இதனை வாசிக்கும் போது மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. ஆத்துமாவிற்காக பாவ நிவிர்த்தி செய்கிறது இரத்தமே. இஸ்ரவேல் புத்திரரிலோ, மற்றும் தங்கும் அந்நியரிலோ யாராவது புசிக்கதக்க மிருகத்தையாவது, பட்சியையாவது வேட்டையாடி பிடித்தால் அதின் இரத்தத்தை மண்ணிலே சிந்தி, மண்ணினால் மூடக்கடவன். எல்லா மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது. இரத்தம் தான் எல்லா ஜீவனுக்கு சமானம். எந்த இரத்தத்தையும் புசிக்க வேண்டாம்.ஏனென்றால் அவ்விதம் புசித்தால் எந்த மிருகத்தின் இரத்தம் புசித்தோமோ, அந்த சுபாவம் நம்மளில் விளங்கும்.
ஆனபடியால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய மாம்சத்தையும், இரத்தத்தையும் நமக்கு புசிக்க தந்து, ஆவிக்குரிய கனிகளால் நம்மை அவரோடுகூட வாழ வைக்கிறார். அல்லாமலும்
லேவியராகமம் 17:15,16
தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
இதனை தியானிக்கும் போது தானாய் இறந்து போனதையோ, பீறுண்டதையோ புசித்தவர்கள் யாராக இருந்தாலும் சுதேசியானாலும், பரதேசியானாலும், மீண்டும் தான் பெற்ற வஸ்திரத்தை முதலிலிருந்தே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யாமலிருந்தால் அவன் தன் அக்கிரமத்தை சுமப்பான்.
அதனால் பிரியமானவர்களே எல்லாரும் தங்கள் வாழ்க்கையில் பெற்ற இரட்சிப்பை தீட்டுகளால் கறைப்படுத்தாதபடி அனுதினம் தேவனுடைய பிரமாணம் காத்துக்கொண்டு தங்களை சீர்திருத்திக்கொண்டால் அவர்கள் நித்திய ஜீவன் இழந்துக்கொள்ளாதபடி தங்களை காத்துக்கொள்ள முடியும். ஒப்புக்கொடுப்போம். இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆத்துமாக்களை பாவ அறிக்கை செய்து தாழ்மைப்படுத்தி ஒப்புக் கொடுப்போம்.
ஜெபிப்போம். கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.