தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 80: 17, 18

உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக.

அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை தேவனுடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி தங்களை பாதுகாத்தல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை தேவனை விட்டு தூரமாய் விலகி உலககாரியங்களிலோ, மற்றும் எந்த அந்நிய காரியங்களிலோ தலையிட்டு பலி செலுத்தி விட்டால் அவர்கள் சோரமார்க்கமாய் போய் தாங்கள் பேய்களுக்கு பலிச்செலுத்துகிறார்கள் என்று தியானித்தோம்.   மற்றும் எந்த மிருகத்தின் இரத்தமோ அல்லது பட்சியின் இரத்தமோ அதன் மாம்சத்தோடே புசிக்கக்கூடாது என்றும் தியானித்தோம்.    

இன்றைக்கு நாம் தியானிக்கப்போகிற வேத வசனம் என்னவென்றால் 

லேவியராகமம் 18:1-6

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.

ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.

இதன் கருத்துகள் என்னவெனில் இஸ்ரவேலரை கர்த்தர் எகிப்தின் அடிமைதனத்திலிருந்து மீட்டுக் கொண்டுவந்து கானானுக்குள் பிரவேசிக்கும் படியாக சொல்கிறதை பார்க்கிறோம்.  ஆனால் கர்த்தர் மோசேயை நோக்கி சொல்கிறார் இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும்,   நான் அழைத்து செல்கிற கானான் தேசத்தாரின் செய்கையின்படி செய்யாமலும்  என்னுடைய நியாயங்களின் படியும்,  என்னுடைய கட்டளைகளையும் கைக்கொண்டு நடவுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.   அவ்விதம் செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான் என்று கர்த்தர் சொல்கிறார்.  

அவர் இன்று நமக்கு தருகிற கட்டளையோவென்றால்  

லேவியராகமம் 18: 6-20

ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர்.

உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது.

உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.

உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது.

உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம்.

உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி.

உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள்.

உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள்.

உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.

உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது.

உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.

ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.

உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது.

ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.

பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம்.

மேற்க்கூறிய வசனங்கள் நாம் எவ்விதத்திலும் மற்றவர்களை நிர்வாணமாக்கலாகாது. தவறான நடத்தைகளோடு நடக்கக்கூடாது என்று கர்த்தர் நமக்கு கட்டளைக் கொடுத்திருக்கிறார்.  மேலும் நமக்கு நெருங்கின உறவின் முறையாரை விவாகம் பண்ணலாகாது, அது முறைகேடு என்று கர்த்தர் சொல்கிறார்.  லேவியராகமம் 18:20  பிறனுடைய மனைவியோடே சேர்ந்து  உங்களை தீட்டுப்படுத்தி கொள்ளாதேயுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.மேலும் தேவனுடைய வார்த்தை சொல்கிறது 

நீதிமொழிகள் 6:23-35  

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவ வழி.

அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும்.

உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.

வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?

தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?

பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.

திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;

அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.

ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.

வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது.

ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.

அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

இதனை நாம் தியானிக்கும் போது நாம் ஆக்கினைக்குள்ளாக தீர்க்ப்படாதபடிக்கு மேற்கூறிய வசனங்கள் நமக்கு எழுதப்பட்டிருக்கிறது. பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான். மேலும் இதன் ஆவிக்குரிய பொருளை நாம் சிந்திக்க வேண்டும்.  என்னவென்றால் அந்நிய ஆராதனையையும் இந்த வார்த்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அல்லாமலும் பத்து கட்டளைகளில் இது ஒரு கட்டளையாகயிருக்கிறது.  

யாத்திராகமம் 20:17  

பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

ஆதலால் இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் ஜாக்கிரதையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும். நாம் தீட்டுபடாதபடி நம்மை காத்துக் கொள்ள வேண்டும்.  அல்லாமலும் 

லேவியாகமம் 18:21-24  

நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.

பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.

யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.

இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சந்ததியை மோளேகுக்கென்று  தீக்கடக்கும்படி இடங்கொடாதே; மோளேகுக்கென்று  தங்கள் சந்ததியை தீக்கடக்கப் பண்ணினால் தேவனுடைய நாமத்தை பரிசுத்த நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்குகிறோம் என்று கர்த்தர் சொல்கிறார்.  

2 இராஜாக்கள் 16:1-5

ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான்.

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.

மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.

அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.

இவ்விதமாக இஸ்ரவேல் ராஜாக்களில் அநேகம்பேர் தங்கள் குமாரரையும் குமாரத்திகளையும் தீக்கடக்க பண்ணுகிறார்கள் என்று தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது.தீக்கடக்க பண்ணுதல் என்பது பாகால்களை சேவிப்பது.   மற்றும் 

2 இராஜாக்கள் 17:16-21  

தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.

அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று.

யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள்.

ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.

இதனை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரரில் அநேகம் பேர் தங்கள் குமாரர், குமாரத்திகளை தீக்கடக்க பண்ணுகிறார்கள். காரணம் யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள், அவனோ இஸ்ரவேலரை கர்த்தரை விட்டு பின் வாங்கவும்,  பெரிய பாவத்தைச் செய்யவும் பண்ணினான். இதனை நாம் தியானித்து எந்த சூழ்நிலைமைகள் நமக்கு வந்தாலும் கர்த்தரை விட்டு பின்வாங்கி போகாதபடி நம்மை திடப்படுத்திக்கொண்டு தேவனுடைய நாமத்தை தொழுதுக்கொள்ளும்படி ஒப்புக்கொடுப்போம்.

இதனை வாசிக்கிற அன்பானவர்களே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஆத்துமாக்களை பாவ அறிக்கை செய்து தாழ்மைப்படுத்தி ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.     கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

 -தொடர்ச்சி நாளை.