தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 பேதுரு 5: 7

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை மாம்ச சிந்தைகளாகிய  ஜாதிகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்கக்கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், தேவனுடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி எவ்விதத்திலெல்லாம் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளும்படியாக சில காரியங்களை குறித்து தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 18:22-30  

பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது.

யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு.

இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும்.

இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று.

இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளைத் தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு,

நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.

இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள்.

ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

பெண் பெண்ணோடும், ஆண் ஆணோடும் சம்யோகம் பண்ணக்கூடாது என்பதும், அவ்விதம் பண்ணினால் அது அருவருப்பானது என்பதும் தேவ வசனம் சொல்கிறது.  அது மட்டுமல்லாமல் யாதொரு மிருகத்தோடும் புணர்ச்சி செய்யக்கூடாது என்பதும், அது அருவருப்பானது என்றும், மேலும் ஸ்திரீயானவள் அருவருப்புகளுக்கு முன்பு நிற்கக்கூடாது என்றும், அவ்விதம் வாழ்ந்தால் அது தாறுமாறான வாழ்க்கை என்றும் தேவன் நமக்கு கட்டளை தருகிறார்.  இதனை எதற்காக திருஷ்டாந்த படுத்துகிறாரென்றால் ஒரு மணவாட்டி சபையாக தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எந்த காரணத்தை முன்னிட்டும் இரட்சகராக இயேசுவை ஏற்றுக் கொள்ளாத மனுஷராகிய மிருக சுபாவம் உள்ளவர்களை விவாகம் பண்ணலாகாது என்று தேவ வசனம் நமக்கு அழகாக தெளிவுப்படுத்துகிறது. 

இப்படிபட்ட காரியங்களினால் நம்மை தீட்டுப்படுத்தாதிருங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.  ஏனென்றால் இஸ்ரவேல் புத்திரரின் முன்னின்று துரத்திவிட்ட ஜாதிகள் இவையெல்லாவற்றினாலும் தங்களை தீட்டுபடுத்தினார்கள்.  அவ்விதம் அவர்கள் செய்ததால் தேசம் தீட்டுபட்டு போனது.  இவ்விதமான ஜாதிகளின் கிரியைகள் நம்முள்ளத்தில் இருந்தால் நாமும் இப்படிபட்ட வாழ்க்கையோடு அடிமைப்பட்டிருப்போம், அதனால் இஸ்ரவேலரை வைத்து பழைய ஏற்பாட்டில் சகல காரியங்ளையும் நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். 

ஆனால் புதிய ஏற்பாடு ஆகும் போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டு மாம்சம் கிழிக்கப்படுகிறது. இவை எதற்காகவென்றால் நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் மாம்ச சிந்தைகள் அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவே தேவன் தம்முடைய சொந்த குமாரனென்றும் பாராமல் சிலுவையில் நமக்காக அவரை ஒப்புக்கொடுத்தார்.  அவ்விதமாக ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசு மரணத்தை உத்ததரித்ததினிமித்தம் மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதை காண்கிறோம். மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது, என்ற வார்த்தை நிறைவேறியது. காரணம் என்னவென்றால் மாம்ச சிந்தை மரணம். அதனால் உயிர்தெழுந்த கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் அவருடைய ஆத்மாவால் உயிர்ப்பிக்கபடுகிறோம். 

உயிர்ப்பிக்கப்பட்ட நாமும் அவரோடு இணைந்து வாழ்வோமானால் நம்மை மாம்ச சிந்தையாகிய மரணம் இனி ஆண்டு கொள்வதில்லை. ஆனால் அவரை விட்டுவிட்டோமானால் நம்மையும்  விட்டுவிடுவார். அதனால் நாம் அவரை இறுகப்பற்றி பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படியானால் நம் உள்ளத்தில் எழும்புகிற மாம்ச சிந்தைகளை அவர் அகற்றுவார்.  நம் உள்ளம் பரிசுத்தர் வாழுகிற உள்ளமாக இருக்கும். 

அதனால் லேவியராகமம் 18:27-30 வசனங்கள் பிரகாரம்  கர்த்தர் நம்மை கைவிடாதபடி, நாம் தீட்டுபட்டு அழிந்து போகாதபடி கர்த்தருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டு நடப்போமானால் அவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர். நம்மை சகல காரியங்களிலும் ஆசீர்வதிப்பார். ஒப்புக்கொடுப்போம்.

-தொடர்ச்சி நாளை.