தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 96: 9
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை என்றென்றும் பாிசுத்த நாளாக ஆசரிப்போம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மாம்ச சிந்தைகளாகிய ஜாதிகளுக்கு மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் இடம் கொடுக்காதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நம்முடைய உள்ளம் தீட்டுப்பட்டு, அருவருப்புகளால் நிறைந்து, ஆத்துமா மரித்து விடும் என்றும் தியானித்தோம். ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலினால் மரணத்தை ஜெயித்தவர்களாக நம்மையும் அவரோடு கூட இரட்சிக்கிறது.
ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால்
லேவியராகமம் 19: 1-5
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள்.
கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்ல சொன்ன காரியம் என்னவென்றால் நான் பரிசுத்தராயிருக்கிறது போல நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று செல்கிறார். அல்லாமலும் ஓய்வு நாட்களை ஆசாிக்க கடவா்கள் என்றும் கூறுகிறாா். ஆனால் இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்த பிறகு எல்லா நாளும் அவா்தான் என்பதும், அவா் பாிசுத்தராயிருக்கிறதினால், எல்லா நாளும் பாிசுத்த நாளாகவும் ஆசரிக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளையாக இருக்கிறது.
அதை குறித்து ஏசாயா 58: 12- 14
உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
இதனை நாம் தியானிக்கையில் இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையில் கரடுமுரடான பாதைகளை திருத்துகிறவராகவும், பாழாய் கிடந்த ஸ்தலங்களை கட்டுகிறவராகவும், திறப்பானதை அடைக்கிறவர் என்றும், குடியிருக்கும் படி பாதைகளை திருத்துகிறவராகவும் செய்கிறாா். அல்லாமலும் ஓய்வு நாளை பாிசுத்த நாளாகவும், மனமகிழ்ச்சியின் நாளாகவும், மகிமையுள்ள நாளென்றும் சொல்லி மகிமையாக எண்ணவேண்டும், அப்பொழுது கா்த்தாில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்.
இவ்விதமாக வாழ்ந்தால் உயா்ந்த இடங்களில் ஏறும்படி செய்வேன் என்றும், யாக்கோபுடைய சுதந்தரத்தால் போஷிப்பேன் என்று கா்த்தா் கூறுகிறாா். ஆதலால் கிறிஸ்துவால் மீட்கப்பட்ட நாம் தினமும் தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும். ஆனால் கா்த்தருக்கு சமாதான பலியை செலுத்துகிறவா்கள் அனுதினமும் மனோற்சாகமாக செலுத்த வேண்டும்.
சமாதான பலிக்காக, பலிச் செலுத்துகிற நாம் அன்றும் மறு நாளிலும் தான் அதனை புசிக்க முடியும். மூன்றாம் நாளில் அதனால் நமக்கு பிரயோஜனப்படாது. அது சுட்டொிக்கப்பட வேண்டும் என தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறது. மூன்றாம் நாளில் அதனை புசிக்கிறவன் கர்த்தருக்கு பாிசுத்தமானதை பாிசுத்த குலைச்சலாக்குகிற படியால், அவன் தன் அக்கிரமத்தை சுமப்பான். அப்படியிருக்கிறபடியால் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போவான் என்று கா்த்தா் கூறுகிறாா்.
மேலும் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற கட்டளைகள் கருத்தாக கைக்கொண்டு நடக்க நாம் கற்றுத்கொண்டு அதன் பிரகாரம் நடக்க சமர்ப்பிப்போம். அந்த கட்டளைகள் என்னவென்றால்
லேவியராகமம் 19: 9-18
நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.
உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
அன்பானவா்களே கா்த்தருடைய கட்டளைகள் ஏற்றுக்கொண்டு நடக்க முன்வருவோம். ஜெபிப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.