தேவனுக்கே மகிமையுண்டாவதாக
மத்தேயு 3: 10
இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபை மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தை பாிசுத்தக்குலைச்சலாக்காதபடி காத்துக் கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். மேலும் கா்த்தா் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளைகள் யாவையும் கருத்தாய் கைக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம். ஆனால் இந்த நாளில் தியானிக்க போகிற காாியம் என்னவென்றால்
லேவியராகமம் 19:18-26
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.
என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.
ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல.
அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
நீங்கள் அந்த தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.
மிருக ஜீவன்களை வேறு ஜாதிகளோடு பொலியவிடக்கூடாது. வயலிலே வெவ்வேறுவகையான விதைகளை கலந்து விதைக்கக்கூடாது. மற்றும் சணல் நூலும் கம்பளி நூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தி கொள்ளக் கூடாது. இதனை எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் இரட்சிக்கப்பட்ட ஆத்துமா புறஜாதிகளை விவாகம் பண்ணக்கூடாது, என்றும், நிலமாகிய இருதயத்தில் வசனமாகிய சத்தியமாகிய வசனம் விதைக்கும் போது அதோடுக்கூட உலகமாகிய விதைகள் சோ்ந்து விதைக்கக்கூடாது.
அல்லாமலும் சணல் நூலும் கம்பளி நூலும் கலந்த வஸ்திரம் உடுத்தக்கூடாது என்றால், வஸ்திரம் இரட்சிப்பை காட்டுகிறது. அதில் கிறிஸ்துவின் உபதேசம் மட்டும் இடம்பெற வேண்டும். ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலிருந்து தன்னிச்சையாய் விடபடாமலிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகம் பண்ணினால் அவர்கள் கொலைசெய்யப்படாமல் அடிக்கப்படவேண்டும். ஏனென்றால் அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. அதனால் அவர்கள் கர்த்தாின் சந்நிதியில் ஆட்டுக்குட்டியானவாின் இரத்தத்தால் நம் பாவம் போக கழுவப்பட வேண்டும். அப்பொழுது கர்த்தர் பாவத்தை மன்னிக்கிறவராயிருக்கிறாா்.
பின்பு கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் தேசமாகிய கா்த்தாின் சமூகத்தில் பலவித கனிகளை தருகிற மரங்களை நாட்டினபின்பு அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக என்று தேவ வசனம் எழுதப்பட்டிருக்கிறதென்றால், தேவ சந்நிதியில் பல தரப்பில் ஆத்துமாக்கள் பலவித எண்ணங்களில் உள்ளவர்கள் கடந்து வருவாா்கள். அப்படியானால் அவர்களுடைய உள்ளமானது மாற்றம் அடையாததினால் அவா்களை கர்த்தர் விருத்தசேதனமில்லாதவர்கள் என்று சொல்கிறாா்.
இவற்றை குறித்து இயேசு கிறிஸ்து ஒரு உவமை சொல்கிறாா் என்னவென்றால்
லூக்கா 13: 6-9
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை.
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன்,
கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
இதன் கருத்துகளை நாம் தியானிக்கும் போது நம் உள்ளமானது தேவ சந்நிதியில் நாம் வந்து தேவனை தேடியும், எந்த நற்கிரியைகளும் இல்லாத காரணத்தால் அந்த மரத்தை வெட்டி போட சொல்லுகிறான், காரணம் அந்த மரம் நாம் ஒவ்வொருவரும். அதனால் அது நிலத்தில் நின்று பிரயோஜனமில்லை என்று நம்மை குறித்து தான் அது நிலத்தை கெடுத்துப் போடுகிறது என்று உவமையாக சொல்கிறாா். அதற்கு தோட்டக்காரன் இந்த வருஷமும் நிற்கட்டும், நான் இதை கொத்தி எருபோடுவேன் கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொல்கிறதை பார்க்கிறோம்.
பிாியமானவா்களே நாம் குறிப்பிட்ட நாளில் மனந்திரும்பி நல்ல கனிகொடாவிட்டால் நம்மை தேவசமூகத்தை விட்டு நீக்கிபோடுவார். அதனால் நாம் தேவ சத்தம் கேட்டு கீழ்ப்படிந்து மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு தேவனுக்கு உகந்த கனிக்கொடுக்கிற நல்ல விருட்சங்களாக மாறுவோம். அவற்றைக்குறித்து
லேவியராகமம் 19:23-25
நீங்கள் அந்த தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.
ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
அடுத்த பகுதி அடுத்த நாளில் கர்த்தருக்கு சித்தமானால் தியானிப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.