தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 145: 21

என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையின் நாவின் பலன் துதியும் ஸ்தோத்திரமும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை மனந்திரும்புதலுக்கேற்ற கனிகளை கொடுக்கிறவர்களாக காணப்பட வேண்டும், எப்படியெனில் தேவ சமூகத்தில் வந்து தேவனை தேடும் போது நாம் கருத்ததோடு தேட வேண்டும், என்னவென்றால்  கா்த்தர் நம்முடைய தோட்டமாகிய உள்ளத்தில் வந்து நம்முடைய கனிகளை பாா்க்கிறவராக காணப்படுகிறார்.  ஆனால் நம்மை தேவன் அவருடைய தோட்டத்தில் நட்டபிறகு ஏற்ற நாளில் கா்த்தருக்கேற்ற நல்ல கனிகள் இருக்கிறதா என்று பார்க்கிறவராகயிருக்கிறார்.  தேவ வசனத்தை நாம் தியானிக்கும் போது மூன்று வருஷத்திற்குள்ளாக நாம் நல்ல கனிகளை கொடுக்க வேண்டும்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கும் போது 

லேவியராகமம்19:24,25

பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.

ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

நாலாம் வருஷத்தில் கனிகளெல்லாம் கர்த்தருக்கேற்ற துதிசெலுத்துதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும்.  இதிலிருந்து நாம் தெரிந்துக் கொள்வது  பரிசுத்தமாக   வாழ்கிறவர்கள் செலுத்துகிற துதி ஸ்தோத்திரம் தான் தேவன் அங்கீகாிக்கிறாா். மேலும் யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்க வேண்டாம்.    குறிக்கேளாமலும், நாள் பாராமலும் இருக்கவேண்டும்.அல்லாமலும் கர்த்தரின் கட்டளை 

லேவியராகமம் 19:26-36  

யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக.

உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,

செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.

தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.

யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.

சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது தேவன் திருஷ்டாந்தத்திலும் மற்றும் நமக்கு விளக்குகிற காரியம் என்னவென்றால் நம்முடைய ஆத்துமாவில் எந்த உலக சிந்தைகளாகிய வேசிதன செயல்பாடுகள் இருக்கக்கூடாது, அப்படியிருந்தால் நம்முடைய உள்ளமாகிய பரிசுத்த ஸ்தலம் பரிசுத்த குலைச்சலாகும்.  அதனால் பரிசுத்த ஸ்தலத்தை குறித்து எப்பொழுதும் பயப்பக்தியாயிருக்க வேண்டும். 

முதிர்வயதுள்ளவர்களை எப்பொழுதும் கனம்பண்ண வேண்டும்.  அல்லாமலும் அந்நியனை சிறுமைப்படுத்தக்கூடாது. அந்நியனிடத்தில் அன்பாயிருக்க வேண்டும். ஏனென்றால் முந்தின நாளில் நாமும் அந்நியனாயிருந்தோம்.  அதனால் கா்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்வது அந்நியரை உபசாிக்க மறவாதிருங்கள், அதினால் சிலர் தேவதூதரை உபசாித்ததுண்டு. இவற்றோடு கூட நியாய விசாரணையிலும், அளவிலும்,படியிலும், நிறையிலும் எந்த அநியாயமும் யாருக்கும் செய்யக்கூடாது. சுமுத்திரையான நிறைகல் எல்லாவிதத்திலும் நமக்கு இருக்க வேண்டும். 

இவ்விதமாக மேற்க்கூறிய கர்த்தருடைய கட்டளைகளின் படி நடந்தால், கர்த்தர் நமக்கு தருகிற பலனால் கர்த்தர் யார் என  நமக்கு அறிந்துக்கொள்ள முடியும். ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.