Jan 08, 2021

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபேசியர் 6: 2, 3

உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், 

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை திருச்சபையை கனம்பண்ண வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையின் நாவின் பலன் துதியும், ஸ்தோத்திர்மும்,  பரிசுத்த உள்ளங்களிலிருந்து  எழும்பும் என்பதும், அவ்விதம் எழும்பும் என்பது கர்த்தர் அவருடைய தேசமாகிய தேவ சமூகத்தில் நம்மை ஜாதிகளுக்கிடையிலிருந்து பிடுங்கி  நட்டப்பிறகு, நாம் நல்லகனிகளைக் கொடுக்கும்படியாக அவருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், பிரமாணங்களையும் கற்று தந்து, நாம் அதற்கு கீழ்படிந்து, அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு நடக்கும் போது, அவருடைய சித்தம் நாம் செய்தால் நம்மளில் இருந்த ஜாதிகளாகிய பிசாசின் கிரியைகளை  ஒவ்வொன்றாக அகற்றும் போது, வசனமாகிய கிறிஸ்து நம் நாவினை புதுப்பித்து தேவனுக்கு துதி ஸ்தோத்திரம் செலுத்துகிறவராக வெளிப்படுகிறார் என்று தியானித்தோம்.  

அடுத்தப்படியாக நாம் தியானிக்க போகிற காரியம் என்னவென்றால், கர்த்தர் மோசேயிடம் சொல்வது   இஸ்ரவேல் புத்திரரிலோ, இஸ்ரவேல் புத்திரரில் தங்கும் அந்நியரிலோ யாராவது தங்கள் சந்ததியில்  ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால் அவன் கொலைச்செய்யப்பட வேண்டும். அந்த தேசத்து ஜனங்கள் கல்லெறிய வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை, என்னவேன்றால் மோளேகு என்பது விக்கிரகராதனை.  இந்த விக்கிரகராதனையில்  நம் ஆத்துமா பங்குப்பெற்றால்  நம்முடைய உள்ளமாகிய பரிசுத்த ஸ்தலம் தேவன் தங்குகிற ஆலயமாக இருக்கிறதினால், அது அவருடைய பரிசுத்த நாமம்.  அந்த பரிசுத்த நாமம் பரிசுத்தக் குலைச்சலாக்கப்படுகிறது.  அதனால் அந்த ஆத்துமா தேவனால் கொலைச்செய்யப்படுகிறது.  

மேலும் கர்ததர் இப்படிப்பட்டவர்களுக்கு விரோதமாக நின்று அவர்கள் தங்கள் ஜனங்களில் இராதபடி அறுப்புண்டு போக பண்ணுவேன் என்கிறார். ஆனால் கர்த்தர் சொல்வது அந்த தேசத்து ஜனங்கள், அவர்களை கொலைசெய்யாதபடி கண்சாடையாக இருப்பார்களானால், அந்த மனிதனுக்கும் அந்த மனிதனுக்கும் எதிர்த்து நின்று அவனையும் அவன் பிறகு விபச்சாரமார்க்கமாய் மோளேகைப் பின்பற்றின யாவரையும்  தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகப்பண்ணுவேன் என்கிறார்.  

அல்லாமலும் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிச்சொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து நம்முடைய ஆத்துமா அவர்களை நாடுவோமானால், அந்த ஆத்துமா கர்த்தரை விட்டு சோரம் போகிறபடியினால் அவர்களை தன்னுடைய ஜனத்தில் இராதபடி அறுப்புண்டு போகப்பண்ணுவேன் என்கிறார்.  மேலும் கரத்தர் சொல்வது தன் தகப்பனையாவது, தாயையாவது சபிக்கிற எவனும் கொலைச்செய்யப் பட வேண்டும்.அப்படி சபித்தால் அவன் இரத்தப்பழி அவன் மேல் இருக்கும்.  ஏனென்றால் தேவ வசனம் சொல்லப்படுகிறது தன் தகப்பனையும், தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்து போகும். 

அல்லாமலும் நீதிமொழிகள் 30:11

தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. இந்த வசனத்தின் விளக்கம் என்னவென்றால் கர்த்தரும் அவருடைய சரீரமாகிய சபையையும் காட்டுகிறது.  இது என்னவென்றால் கர்த்தர் அவருடைய தாசர்களை வைத்து நமக்கு ஆசீர்வாதம் சொல்லும்போது, நாமும் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். அப்போதுதான் அவருடைய ஆசீர்வாதம் நம்மளில் தங்கும். இதற்கு தான் கர்த்தர் மேற்க்கூறிய வசனம் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   அல்லாமலும் நம்மளில் அநேகர் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுமபடி தேவ சமூகத்திற்கு போவோம், ஆனால் நாம் தேவ சபையை ஆசீர்வதிக்கமாட்டோம். என்னவென்றால் நாம் எவற்றை விரும்புகிறோமோ அவற்றை நாமே செய்கிறவர்களானால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோம்.  

மேலும் நீதிமொழிகள் 30:17

தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும். நம்முடைய தகப்பனாகிய கர்த்தரை பரியாசம் பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டைபண்ணினால் நம்முடைய ஆவிக்குரிய கண்கள் சேதமடையும்.  அல்லாமலும் நீதிமொழிகள் 19:26

தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது மிகவும் எச்சரிப்போடு நம் ஆத்துமா காக்கப்பட வேண்டும் மேற்ககூறிய வசனமாகிய சத்தியத்திற்க்கு நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.