தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சகரியா 2: 12

கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அங்கவீனங்கள் உண்டாயிருக்கக்கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தேவனுடைய சபையை கனம்பண்ண வேண்டும் என்றும். கனம் பண்ணாதவன் அவரை அலட்சியம் பண்னுகிறாறோம் என்றும், அப்படிப்பட்டவர்களுடைய உள்ளான கண்கள் நஷ்டப்பட்டு போகும், அவர்கள் தேவனுடைய சாபத்திற்க்குட்பட்டவர்களாகயிருக்கிறார்கள் என்று தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்  

லேவியராகமம் 21:6-8

தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும்.

அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.

அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக.

இந்த வசனம் நாம் தியானிக்கும் போது நாம் எந்த விதத்திலும் நம்முடைய உள்ளத்தில் எந்த விதத்திலும் தீட்டுபடுத்தாதபடி, பரிசுத்த நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்காமல் கர்த்தருக்கு எப்பொழுதும் பரிசுத்தமாயிருக்க வேண்டும். கர்த்தருக்கு தகனபலிகளையும், தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களானால்  பரிசுத்தராயிருக்க வேண்டும்.  அப்பம் செலுத்தகிறவர்களென்றால் தேவனுடைய வசனம் சொல்லுகிறவர்கள். அவர்கள் தங்கள் தேவனுக்கு பரிசுத்தமானவர்கள்.  அவர்கள் கர்த்தருடைய வேலைக்காரர்கள். அவர்கள் வேசியையோ, கற்ப்புக்குலைந்தவளையோ விவாகம் பண்ணக்கூடாது. கர்த்தர் சொல்வது நான் பரிசுத்தராயிருக்கிறது போல அப்பத் செலுத்துகிறவர்களும் எப்பொழுதும் பரிசுத்தராயிருக்க வேண்டும். 

மேலும் ஆசாரியத்துவ  வேலை செய்கிறவர்களுடைய குமாரத்தி வேசித்தனம் பண்ணி  தன்னை பரிசுத்த குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனை பரிசுத்தக்குலைச்சலாக்குகிறாள். அப்படியானால் அக்கினியால் சுட்டெரிக்கப்பட வேண்டும்.  இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால்  ஒருவருடைய உள்ளத்தில் வேசிதன ஆவி உண்டாயிருந்தால் அதனை வசனமாகிய அக்கினியால் சுட்டெரித்தால், அவள் சுத்தமாவாள்.  

லேவியராகமம் 21:10-12

தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாகத் தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும்,

பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே: நான் கர்த்தர்.

தன் சிரசின் மேல் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியத்தவ வேலை செய்கிறவர்கள் எந்த நிலமையிலும் தங்கள் தலையில் இருக்கிற பாகையை எடுக்காமலும், தங்கள் வஸ்திரங்களை கிழிக்காமலும்,  பிரேதம்  கிடக்கும் இடத்தில் போகாமலும்  தன் தகப்பனுக்காவது, தாய்க்காகவும் தன்னை தீட்டுபடுத்தாமலும், அவர்கள் இருக்கிற பரிசுத்த ஸ்தலத்தை விட்டு புறப்படாமலும், தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தை பரிசுத்த குலைச்சலாக்காமலும் இருப்பதாக. கன்னிகையாகிய பெண்ணை விவாகம் பண்ண வேண்டும்.  

மேலும் கர்த்தர் மோசேயிடம் சொல்வது என்னவென்றால், ஆரோனோடே சொல்லவேண்டுவது என்னவென்றால் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் யாரும் தேவனுடைய அப்பத்தை செலுத்தம்படி சேரலாகாது. 

லேவியராகமம் 21:18-21

அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும்,

காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும்,

கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது.

ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.

மேற்க்கூறிய வசனபிரகாரம் குறிக்கப்பட்டவர்கள் யாரும் ஆசாரியத்துவ வேலை செய்யக்கூடாது, மற்றும் அப்பம் செலுத்தக்கூடாது என்று கர்த்தர் சொல்கிறார்.  இதனை கர்த்தர் திருஷடாந்தப்படுத்தகிறது என்ன வென்றால் நம்முடைய ஆத்துமாவில் பரிசுத்தத்தில் குறைவில்லாதபடி காணப்பட வேண்டும்.  பரிசுத்தத்தில் குறைவு காணப்படுகிறவர்கள் ஊனமுற்றவர்கள் என்று தேவ வசனம் சொல்கிறது.ஆனாலும் அங்கவீனம் இருக்கும் வரையிலும் பரிசுத்த ஸ்தலங்களை பரிசுத்த குலைச்சலாக்காதபடி திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் போகாமலும் இருக்க வேண்டும். நான் அவர்களை பரிசுத்த படுத்துகிற கர்த்தர்  என்று சொல் என்கிறார்.  இவ்விதமாக கர்த்தர்  தருகிற பாதையை காத்து  நடப்போம்.

ஆரோனின் சந்ததியில் ஒருவனும் கர்த்தருக்கு தகனபலி செலுத்தும்படி சேரலாகாது.  எப்படியென்றால் 

மல்கியா 1 : 7 – 14

என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார்.

உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.

இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்.

தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துக்கொண்டு செலுத்துகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அல்லாமலும் அங்கவீனமுள்ளவர்கள் தேவனுடைய மகா பரிசுத்தமானவைகளிலும் பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம்.  

இவ்விதமாக பரிசுத்தமானவைகளை புசிக்க சொல்வது என்னவென்றால் பரிசுத்த அப்பத்தை உட்கொண்டு பரிசுத்தத்துக்கு மாறாக இருக்கிற காரியங்களை மாற்றி பரிசுத்தத்தை பெற்றுக்கொள்ளும்போது அங்கவீனம் மாற்றப்பட ஏதுவாகும்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.