தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 105: 44, 45

தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும்,

அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்த குலைசசலாக்காதபடி, கர்த்தருடைய கட்டளைகளின்  பிரகாரம் நடக்க கற்றுக்கொள்வோம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் அங்கவீனங்கள் உண்டாயிருக்கக்கூடாது என்பதும், அந்த அங்கவீனம் என்பது, கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பிறகு நம்முடைய ஆத்துமா கிறிஸ்துவினால் ஜீவனடைந்து உயிர்ப்பிக்கப்பட்டப்பிறகு நாம் அனுதினம் பரிசுத்தமாக வாழவேண்டும் என்றும் எந்தவிதமான அசுத்தங்களோ தீட்டோ நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடாது என்றும் பரிசுத்தத்தில் ஆத்துமா குறைவாக கணப்பட்டால்  அவர்கள் அங்கவீனம் உள்ளவர்கள் என்று தியானித்தோம்.  

இந்த நாளில் நாம் தியானிக்கப்போகிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 22:1-3

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.

அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.

கர்த்தர் மோசேயிடம் சொல்வது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று செலு்துகிற பரிசுத்த வஸ்துகளை குறித்து ஆரோனும், அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்ககாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடு சொல் என்றார். அவர்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தீட்டுபட்டிருந்தால், இஸ்ரவேல் புத்திரர் நியமித்துச்செலுத்துகிற  பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால் அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராதபடி அறுப்புண்டு போவான் என்று கர்த்தர் சொல்கிறார்.  

லேவியராகமம் 22:4-10

ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும்,

தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும்பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,

சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது.

சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம்.

தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

ஆரோனின் சந்நதியாரில் ஆசாரியத்துவ பணி செய்கிறவர்களில் யார் பாவத்தினாலாகிய குஷ்டரோகியோ அல்லது பிரமியம் உள்ளவனோ அவன் சுத்தமாகுமட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகது.  ஏனென்றால் பரிசுத்த மான பாத்திரத்தில் பானம்பண்ணுகிறவர்கள் ஆட்டுகுட்டியானவரின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டவர்கள்  தான் புசிக்கமுடியும்.  

அல்லாமலும் எவனாகிலும் பிரமியமுள்ளவனாக காணப்பட்டால், அவன் சுத்தமாகுமட்டும் புசிக்கலாகாது.  மற்றும் பிணத்தினால் தீட்டுப்பட்டாலோ, இந்திரியங்கழிந்தவனும், தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும், தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டால், அவன் ஜலத்தினால் ஸ்நானம் பண்ணும்வரையிலும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. சூரியன்  அஸ்தமித்த பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்.  அது அவனுடைய ஆகாரம்.  

பிரியமானவர்களே இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் கழுவி சுத்திகரித்த பின்பு நம்முடைய வாழ்வில் நாம் செய்த சகல பாவங்களுக்காக நாம் கிறிஸ்துவோடு கூட மரித்து,அவருடைய ஆவியினால், ஜல ஸ்நானத்தினால் அவரோடு கூட எழும்புகிறோம்.  அதனால் அதற்கு பின்பு நாம் மேற்க்கூறப்பட்ட கட்டளைகளை காத்துக்கொண்டு தீட்டுபடாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டியது  முக்கியமாக இருக்கிறது.  

ஆனால் பிரியமானவர்களே இதனை வாசிக்கும் போது யாருக்காவது வாழ்வில் குறைகள் இருக்கிறது என்று தேவ ஆவியினால் உணர்த்தப்படுவோமானால் இப்பொழுதே தேவ சமூகத்தில் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுத்து அவருடைய வசனத்தினால் கழுவி சுத்திகரித்து பரிசுத்தம் பெற்றுக்கொள்வோம்.  

அல்லாமலும் லேவியராகமம் 22:8-9 

தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.

ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை தியானிக்கும் போது கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால்  ஆத்துமா செத்து கிடக்கிறவர்களை நம் வாழ்வின் ஒரு பங்காக ஏற்றுக்கொள்ளக் கூடாது.  அவர்களை ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டால் நாம் தீட்டுப்பட்டு விடுவோம்.  ஆகையால் பிரியமானவர்களே பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து நாம் சாகாதபடிக்கு கர்த்தருடைய கட்டளையை காக்கக்கடவோம். அவர் நம்மை பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.  நாம் வாசித்த கர்த்தருடைய கட்டளைகளின் பிரகாரம் நடக்க ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.