தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மல்கியா 1: 10

உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மனவாட்டி சபை கூலிக்காக கர்த்தருடைய பணியை செய்யக்கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்த குலைசசலாக்காதபடி, கர்த்தருடைய கட்டளைகளின்  பிரகாரம் நடக்க கற்றுக்கொள்வோம்.  மணவாட்டி சபை கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதையும்,  பரிசுத்த குலைச்சலாக்காதபடி எப்படியெல்லாம் நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கப் போகிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 22: 10-16  

அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.

ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம்.

ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.

விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.

ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டி பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன்.

அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும்,

அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. அந்நியன் என்றால் விக்கிரகாரதனைகாரனாகிய கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்படாத புறஜாதியான்.  மற்றும் ஆசாரியன் வீட்டில் தங்குகிறவனும், கூலிவேலை  செய்கிறவனும்,  பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. இதன் பொருள் என்னவென்றால் கர்த்தருடைய வேலையை கூலிக்காகச்  செய்கிறவர்கள் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது.  எப்படியென்றால் கர்த்தரின் வேலைக்கு விலைப்பேசக்கூடாது.  

அதனால் தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்வது 

மத்தேயு 10: 5-10

இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும்,

காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.

வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.

உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,

வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.

அல்லாமலும் 1கொரிந்தியர் 9:13,14

ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

இதிலிருந்து நமக்கு தெரிகிறது என்னவென்றால் கர்த்தரின் வேலையை,தேவன் அழைத்த அழைப்புக்கு தக்க வண்ணம், விசுவாசத்தோடு செய்தால், அந்த வேலையினால் நமக்கு ஜீவனத்திற்கு உரிய சகல ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.  ஆனால் கூலிக்காக வேலைசெய்தால் நம்மிடம் பரிசுத்தம் இல்லை என்பது விளங்குகிறது. ஆசாரியனால் பணத்துக்கு கொள்ளபட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும், அவன் ஆகாரத்தில் புசிக்கலாம்.  

மற்றும் ஒரு ஆசாரியனுடைய குமாரத்தி, அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது.  விதவையாய் போன அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி, பிள்ளையில்லாமலிருந்து தன் தகப்பனுடைய வீட்டில் இளம் வயதில் இருந்தது போல் அவன் குமாரத்தி இருந்தாளேயாகில் அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்.  அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது.  அறியாமல் அந்நியனாகிய ஒருவன் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால் அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக கூட்டி பரிசுத்தமானவைகளோடுக்கூடக் ஆசாரியனுக்கு கொடுக்கவேண்டும். 

எதற்க்கென்றால் பரிசுத்தமானவைகளை பரிசுத்த குலைச்சலாக்காமலும், அவைகளை புசிக்கிறதினால்  அவர்கள் மேல் குற்றமான அக்கிரமத்தை சுமரப்பண்ணாமலும்  இருக்கும்படியாக ஐந்தில் ஒரு மடங்கு கூட்டி கொடுக்கும் போது கர்த்தர் அக்கிரமம் தவறு செய்தவர்கள் மேல் விழாமல் அதனுக்கு ஈடாக உள்ளதை வாங்கிக்கொண்டு அந்த அக்கிரமத்தை மன்னித்து நம்மை பரிசுத்தமாக்குகிறார்.  

மேலும் இதனை தியானிக்கிற அன்பானவர்களே நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குறைகளை அறிக்கை செய்து தாழ்த்தி ஒப்புக்கொடுத்து பரிசுத்தம் அடைவோம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.