தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோனா 2: 9

நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை பூரணகிருபை பெற்று கர்த்தருக்கு பொருத்தனை பலி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை கூலிக்காக கர்த்தருடைய வேலையை செய்யக்கூடாது என்றும், அப்படி கூலிக்காக கர்த்தருடைய வேலையை செய்தால் அவர்களிடத்தில் பரிசுத்தம் விளங்காது என்றும், மற்றும் தேவனுக்கு பிரியமில்லாமல் வாழ்கிறவர்கள் பரிசுத்தமானவைகளில் புசிக்கக்கூடாது என்றும், அப்படி புசித்தால், அவர்கள் தேவனுடைய பரிசுத்த  நாமத்தை பரிசுத்த குலைச்சலாக்குகிறார்கள் என்றும் தியானித்தோம்.  

மேலும் இந்த நாளில் தியானிக்கப்போகிற காரியம் என்னவென்றால் 

லேவியராகமம் 22: 17-24

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ,

அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.

பழுதுள்ள ஒன்றையும் செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை.

ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும்.

குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக.

நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.

கர்த்தர் மோசேயிடம், ஆரோனோடும், அவன் குமாரரோடும், இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால் இஸ்ரவேல் குடும்பத்தாரிலும், இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும், தாங்கள் கர்த்தருக்கு செலுத்துகிற  பொருத்தனைகளின்படியாகிலும், உற்சாகத்தின்படியாகிலும்  சர்வாங்க தகன பலிகளை செலுத்த போவார்களானால், மாடுகளாகிலும், ஆடுகளாகிலும் , வெள்ளாடுகளாகிலும், பழுதற்ற பலியாக ஆணைப்பிடித்து வந்து  செலுத்தவேண்டும்.  இதன் விளக்கம் என்னவெனில் பூரண கிருபை பெற்றுக்கொண்டு,  அதில் தங்கள் பொருத்தனைகளின்படி, தன்னுடைய ஆத்துமாவை தேவனுக்கென்று உற்சாகமாகக் கொடுக்க வேண்டும்.  ஆனால் பழுதொன்றும் செலுத்தக்கூடாது. அதன் காரணம் நாம் பாவத்தினால் நம் ஆத்துமா பழுதாக காணப்பட்டால் கர்த்தர் அதனை அங்கிகரிப்பதில்லை. 

மேலும் நாம் விசேஷித்த பொருத்தனையாவது , உற்சாகமாயாவது கர்த்தருக்காக செலுத்தும் போது, கர்த்தர் நாம் செலுத்துகிற ஸ்தோத்திர பலியை அங்கிகரிக்க வேண்டுமானல் நம்முடைய இருதயம்  சத்தியத்தின்படி உண்மையும், நேர்மையுமாய் நடக்க வேண்டும், அவ்விதம் பழுதில்லாமல் இருந்தால் கர்த்தர் நம்முடைய பொருத்தனை பலியை அங்கீகரிப்பார். அல்லாமலும் 

லேவியராகமம் 22:23,24

நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது.

விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக.

மேற்க்கூறிய வசனங்கள் பிரகாரம் பலியை கரத்தருக்கு செலுத்துவோமானால் அதனை அங்கீகரிப்பதில்லை.  மற்றும் 

லேவியராகமம் 22: 29 -33

கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக.

அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.

நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர்.

என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்.

நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

இவ்விதமாக நாம் யாவரும் வாழும் படியாக கர்த்தரின் கட்டளை பிரகாரம் நடக்க கர்த்தரின் சமூகத்தில் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.