தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 1: 8

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

ஐம்பதாம் நாள் பெந்தேகொஸ்தேயின் அனுபவம் தான் மணவாட்டி சபையாகுதல்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை பொருத்தனையாகிய சர்வாங்க தகனபலியும், சமாதான பலிகளும் கர்த்தருக்கு செலுத்த வேண்டுமானால் கர்த்தரிடத்திலிருந்து பூரண கிருபைப் பெற்று பொருத்தனையான பலி செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிக்கபோகிற காரியங்கள் என்னவெனில் 

லேவியராகமம் 23: 9-14

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.

உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,

கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள் மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

கர்த்தர் மோசேயிடம், இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்ல சொல்வது என்னவென்றால், இஸ்ரவேல் ஜனங்களை கரத்தர் கானான் தேசத்திற்கு நேராக நடத்தி வரும் போது,  அதின் வெள்ளாண்மையை அறுக்க வரும்போது, அந்த அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டு வர வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நம்முடைய ஆத்துமா தான் கர்த்தருக்கு நாம் கொடுக்க வேண்டிய முதற்பலன், அதற்காக திருஷ்டாந்தப்படுத்தியது தான் கதிர்கட்டு என்று எழுதப்பட்டிருக்கிறது. நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் அங்கீகரிக்க வேண்டுமானால் அசைவாட்டும் காணிக்கையாக நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும்.  எப்படியென்றால் அந்த அசைவாட்டும் கதிர்கட்டு என்றால், நாம் எந்த ஒரு இடத்திற்கு போனாலும், வந்தாலும் நாம் எந்த இடத்தில் காணப்படுகிறோமோ, அதே இடத்தில் கர்த்தருக்காக நம்முடைய ஆத்துமாவை முதற்பலனாக குற்றமில்லாதபடி ஆட்டுகுட்டியாகிய கிறிஸ்துவோடுக்கூட ஒப்படைக்க வேண்டும். 

பின்பு கர்த்தருக்கு முன்பாக சுகந்த வாசனையான தகனபலியாக நாம் கர்த்தருக்கு பத்தில் இரண்டு பங்கனானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலேக் காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். இப்படி தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறது காரணம் என்னவென்றால் கிறிஸ்துவின் கிருபையும், கிறிஸ்துவின் கற்பனையும் கைகொண்டவர்களாக நம்மை தேவனிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.  நாம் நம்மை தேவனுக்கு காணிக்கையாக ஒப்படைக்கும் வரையிலும் வாட்டிய கதிரும், பச்சை கதிரும் புசிக்கக்கூடாது. இவை தேவன் எதற்கு விளக்கி கூறுகிறாரென்றால் தேவனுடைய சத்தியமாகிய  நியாயப்பிரமாணமல்லாத  எந்த ஒன்றையும் மனதில் உட்கொள்ளகூடாது என்பது தலைமுறை தோறும் செல்ல வேண்டிய நித்திய கட்டளை ஆகும்.  

அல்லாமலும் லேவியராகமம் 23:16

ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். அசைவாட்டும் கதிர் கொண்டு வரும் நாளுக்கு மறுநாள் முதல் ஏழுவாரங்கள் நிறைவேறின பின்பு  ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளாக ஐம்பதாம் நாள் மட்டும் கர்த்தருக்கு புதிய பொஜன பலியைச் செலுத்த் கடவீர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது, பெந்தேகொஸ்தே நாள் வருவதன் திருஷ்டாந்தம். 

ஆதலால் நாமும் அதற்காகயாவரும் ஒப்புக்கொடுக்கும் போது நம்மளில் கிறிஸ்து உயிர்தெழுந்து பின் ஐம்பதாம் நாளாகிய பெந்தகொஸ்தேயின் அனுபவத்தோடு மணவாட்டியின் அபிஷேகம் பெற்று யாவரும் புதுபித்துக் கொள்வோம்.   ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.