தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 93: 5

உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையில் தினந்தோறும் பரிசுத்த ஆராதனையின் விளக்கம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருடைய சமூகத்தில் நம்முடைய ஆத்துமாவை அசைவாட்டும் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபிறகு, நம்முடைய ஒவ்வொரு உள்ளத்திலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுகிற அனுபவத்தையும், அதோடு பெந்தேகொஸ்தே நாளாக ஐம்பதாம் நாள் நம்முடைய வாழ்க்கையில்  ஒரு புதிய போஜனபலியை கர்த்தருக்கு செலுத்துகிறதை தேவன் திருஷ்டாந்தப்படுத்துவதைக் குறித்து தியானித்தோம்.  அதென்னவெனில் அந்த நாள் மணவாட்டியின் நாளாக தேவன் நமக்கு தெளிவுப்படுத்துகிறார். எப்படியென்றால் 

அப்போஸ்தலர் 2: 4-12

அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள்.

அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.

எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?

அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?

பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,

பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும்,

கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.

எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

இதனை நாம் தியானிக்கையில்  பற் பல இடங்களிலிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் எல்லாரும் எருசலேமில் வாசம் பண்ணினார்கள். கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பிறகு அந்த இடத்தில் கூடினது அவர்களுடைய வாழவில் ஒரு விசேஷித்த நாளாயிருந்தது.  இவை நம்முடைய வாழ்விலும் நடந்தேறுகிறது.  அந்த நாள் மணவாட்டியின் நாள், புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகிற நாள்.  சமுத்திரம் இல்லாமற் போகும் நாள்.  இதன் அர்த்தம் என்னவென்றால் நம்முடைய பாரம்பரியத்தை உடைக்கிற நாள்.  அந்த நாள் கிறிஸ்து வெளிப்படுகிற நாள்.  

ஒரு மனுஷன் இதனை பெற்றுக்கொள்ளும்போது அவன் மனுபுத்திரன் ஆகிறான். அந்த நாள் ஒருவரிடத்தில் வருமானால் அவர்களுடைய வாழ்வில் எல்லா நாளும் கிறிஸ்து.  மற்றபடி நாட்களில் வித்தியாசங்கள் தோன்றுவதில்லை. அவற்றைக் குறித்து தான் 

2 பேதுரு 3: 9-14

தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்.

இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!

தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.

அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.

ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

பிரியமானவர்களே இதன் கருத்துகளை நிதானித்து அறிந்துக்கொள்ளுங்கள்.   அல்லாமலும் 

லேவியராகமம் 23:17-25

நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,

வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் இடக்கடவீர்கள்.

அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.

அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாயிருப்பதாக.

அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார்.

இதனை நாம் தியானிக்கையில் பெந்தேகொஸ்தேயின் அனுபவம் நம்மிடத்தில் வந்ததிலிருந்து நாம் கர்த்தருக்கு புதிய போஜனபலியை செலுத்துகிறோம். அதோடு மெல்லிய மாவாகிய கிறிஸ்துவின் புதிய கற்பனையில், புளிப்பாக பாகம்பண்ணப்பட்ட  அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை  உங்கள் வாசஸ்தலத்திலிருந்து கர்த்தருக்கு காணிக்கையாக கொண்டு வர வேண்டும் என்று எழுதப்பட்டிருப்பது என்னவென்றால் தேவனுடைய வார்த்தையாகிய பிரமாணங்களோடு தேவனுடை சமூத்தில்  போய், அதோடுக்கூட நாம் பெற்றிருக்கிற கிருபைக்கு தக்கதாக தேவனுக்கு துதி ஸ்தோத்திரமும் செலுத்தி அதோடுக்கூட , நம்முடைய ஆத்துமாவையும் எல்லாவற்றோடுங்கூட  சமாதான பலியாக தேவனுக்கு செலுத்த வேண்டும் என்றும், இவ்விதமாக நாம் செய்யும் போது  கிறிஸ்து அதனை ஏற்றுக்கொண்டவராக  நம் உள்ளத்தை பரிசுத்தப்படுத்துவார். 

அவ்விதம் நம் உள்ளம் சபைகூடும் பரிசுத்த நாளாக மாறுகிறது. அவ்விதம் மாற்றம் வருவது தான் தினம்தோறும் பரிசுத்த ஆராதனை செய்வது.  பிரயமானவர்களே, இவ்விதமான ஆசீர்வாதங்களுக்காக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.