தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 யோவான் 2: 25

நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையானால் நித்திய ஜீவன் நிலைத்திருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு மனதாழ்மை மிக முக்கியம் என்பதையும், அவ்விதம் மனதாழ்மை அணிந்துக்கொண்டவர்கள், தேவனுடைய கூடாரத்தில் குடியிருந்து, தேவனால் காக்கப்பட்டு, அவர்கள் ஆத்மீக சந்ததிகளை பெற்றெடுப்பார்கள் என்றும், அவர்கள் சந்தானங்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாயிருப்பார்கள் என்றும் தியானித்தோம். 

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கப் போகிற காரியங்கள் எனென்வென்றால் 

லேவியராகமம் 24: 1-9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.

ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.

அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,

ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.

அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.

அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் மோசேயிடம், இஸ்ரவேல் புத்திரர் தேவனை சேவிக்க வரும் போது, குத்துவிளக்கு எப்போதும் எரிந்துக்கொண்டிருக்கும்படியாக, இடிந்து பிழிந்த ஒலிவ  எண்ணெயை கொண்டுவரும்படி கட்டளையிட சொல்கிறார். இது நம்முடைய ஆத்துமாவில் எப்போதும் கிறிஸ்துவின் வசனத்தால் நிறைந்த ஆவியின் அபிஷேகம்த்தான் ஒலிவ எண்ணெய், இதனால் நம் ஆத்துமாவில் கிறிஸ்துவின் ஜீவன் எப்பொழுதும் விளங்கிக்கொண்டிருப்பது தான் நித்திய ஜீவன். 

கர்த்தரின் சந்நிதியில், கர்த்தருக்கு ஆராதனை செய்ய போகிற எல்லா இஸ்ரவேலரும் நிந்திய ஜீவன் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், கர்த்தருக்கு ஜீவனுள்ள ஆராதனை செய்ய வேண்டும் என்றும் தேவன் நமக்கு நித்திய கட்டளையாக கட்டளையிட்டு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அன்றியும் மெல்லிய மாவை எடுத்து பன்னிரண்டு அப்பங்களாக சுடுவாயாக.  ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கு மாவிலே செய்யப்படவேண்டும். பன்னிரண்டு அப்பங்கள் என்பது பன்னிரண்டு சீஷர்களுக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இவை நமக்குள் கிறிஸ்துவின் கிருபையில் பரிபூரணமடைவதை காட்டுகிறது. அல்லாமலும் அவைகளை கர்த்தரின் சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின் மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் அவ்வாறு அப்பம் வைக்க வேண்டும்.  மேஜையின் மேல் அப்பம் அடுக்கிவைக்கப்பட்டிருக்கிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாக காணப்படவேண்டும். அதனை நமக்கு தெளிவுபடுத்தியது தான், கிறிஸ்துவும் பன்னிரண்டு சீஷர்களும்.  

மேலும் நாம் கிறிஸ்து மூலமாய் கர்த்தருக்கேற்ற தகனபலியாக நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அல்லாமலும் அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக பரிசுத்த நாளாகிய ஓய்வு நாள்தோறும் நாம் பரிசுத்த சந்நிதியில் அடுக்கி வைக்கக் கடவன் என்று எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்னவென்றால், நாம் தான் அந்த அப்பம். எப்படியெனில்  வசனமாகிய கிறிஸ்து நம் நடுவில் ஜீவ அப்பமாக விளங்குகிறார். அப்படியானால்  நாமும் கிறிஸ்துவாகிய ஒரே அப்பத்தில் பங்குள்ளவர்களானபடியால் அநேகராகிய நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமாயிருக்கிறோம். 

மேலும் அப்பம் என்பது ஜீவ வசனம், அப்பம் எப்போது புசித்தாலும் பரிசுத்த இடத்தில் புசிக்க வேண்டும். எப்படியென்றால் நம்முடைய நாவு, நம்முடைய உள்ளம் எல்லாம் எப்பொழுதும் பரிசுத்தமாக இருக்கவேண்டும் என்பதை கர்த்தர் பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார். அல்லாமலும் நித்திய கட்டளையாக கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகாபரிசுத்தமாயிருக்கும். இந்த இடத்தில் ஆரோனையும் அவன் குமாரரையும் சாரும் என எழுதப்பட்டிருப்பது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காக பலியானார் என்பதற்கு திருஷ்டாந்தம்.  அவர் தான் மகா பரிசுத்தர்.  அதனால் நாம் ஒவ்வொருவரும் மகாபரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.  

அதைக்குறித்து யூதா 1: 20, 21

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனம் பிரகாரம் நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கரத்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தை பெறக் காததிருப்போம். ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.