தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 69: 9

உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

நாம் மணவாட்டி சபையானால் கர்த்தரின் நாமத்தை தூஷிக்கக்கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபை கரத்தரின் சந்நதியில் வரும் போது தங்கள் ஆத்மாவில் ஜீவன் பெற்று தேவனுக்கு மகிமை செலுத்தவேண்டும்.  மற்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஜீவ அப்பமாகவும், அவருடைய  ஜீவன் நமக்கு தந்து நம்மையும் அப்பம் புசிக்க வைத்து, அப்பம் புசிக்கிறவர்கள் பரிசுத்த ஸ்தலத்தில் தான் புசிக்க வேண்டும் என்பது நித்திய கட்டளை என்று கர்த்தர் கூறுகிறதையும் தியானித்தோம்.  ஆனால் கர்த்தராகிய இயேசு கிறஸ்துவுக்கு நாம் செலுத்தும்  தகனபலி மகா பரிசுத்தமாயிருக்கும் என்று நாம் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால் 

லேவியராகமம் 24:11-15

அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.

மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

இதனை நாம் தியனிக்கும் போது இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும், எகிப்திய புருஷனுக்கும் பிறந்த ஒரு புத்திரன் இஸ்ரவேல் புத்திரரோடு புறப்பட்டு வந்த போது, இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் சண்டை பண்ணினபோது, இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான்.  அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள்.  அவனுடைய தாய் தாண் கோத்திரத்தினாகிய திப்ரியின் குமாரத்தி. அவன் கர்த்தரின் நாமத்தை அவன் தூஷிப்பதன் காரணம் என்னவென்றால் அவன் எகிப்தியனுடைய வித்தாகயிருந்தான். எகிப்தியனாகிய அவன் அந்நிய சேவை செய்கிறவன்.   அதனால் தான் கர்த்தர் இருளுக்கும், ஒளிக்கும் ஐக்கியமில்லை என்கிறார்.  அதைத்தான் 

2 கொரிந்தியர் 6:14-18  

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?

தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

ஆதலால் நம்முடைய ஆத்மீக வாழ்க்கை நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் துர் உபதேசமாகிய விக்கிரகராதனை இருக்கக்கூடாது. அதனால்  கர்த்தர் அந்நிய பெண்ணை விவாகம் பண்ணக்கூடாது என்கிறார். ஆனால் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீண்டெடுக்கப்பட்ட பிறகு கிறிஸ்துவினால் எல்லாரும் ஒரே பரிசுத்த ஜாதியாகிறோம். தேவன் சுத்தமாக்கினதை அசுத்தம் என்று சொல்லக்கூடாது என்கிறார்.  அதைத்தான் கர்த்தர் இஸ்ரவேல் தனித்து வாசம் பண்ணுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  

அல்லாமலும்  கர்த்தரை தூஷிக்கிறவனை பாளயத்துக்கு புறம்பே, கொண்டுபோகும்  படி கர்த்தர் மோசேயிடம் சொல்கிறார். மற்றும் சபையார் யாவரும் கல்லெறியகடவர்கள் என்று சொல்கிறார்.  இஸ்ரவேலில் யாராவது தேவனை தூஷித்தால் அவன் மேல் கர்த்தர் அக்கிரமத்தை சுமத்துகிறார்.    அவன் பரதேசியானாலும், சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்பட வேண்டும் என்கிறார் என்பதின் கருத்து என்னவென்றால் நம்முடைய ஆத்துமா கொலைச்செய்யப்படுகிறது.   அல்லாமலும் கர்த்தர் நம்மை சபைக்கு புறம்பே தள்ளிப்போடுகிறார்.  

ஆதலால் எந்த நிலமையிலும் நாம் தேவனை தூஷிக்காதபடி ஜாக்கிரதையாக கர்த்தரை பின்பற்றுகிறவர்களாயிருக்க வேண்டும். அவ்விதம் மேற்க்கூறப்பட்ட கருத்துகளை கவனத்தில் வைத்து நம்மை ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.