தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 12: 21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை ஒருபோதும் நியாயப்பிரமாணம் மீறக்கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தரின் நாமத்தை எந்த சூழ்நிலைமையானாலும் நாம் தூஷிக்கக்கூடாது என்றும், அவ்விதம் தூஷிக்கிறவனுடைய ஆத்துமா கொலைச்செய்யபடுகிறதை பற்றியும் தியானித்தோம்.  

நாம் மற்றவர்களால் தூஷிக்கப்படுகிறதைக் குறித்து 

1பேதுரு 4:1-10

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.

சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.

உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.

இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.

அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கிறிஸ்து நமக்காக பாடுபட்டது போல நாமும் அப்படிப்பட்ட சிந்தையை தரித்துக்கொள்ள வேண்டும். நாம் முந்தின நாட்களில் புற ஜாதிகளின் விருப்பத்திற்கு நடந்துக்கொண்டோம்.  என்னவென்றால், காமவிகாரம், துர் இச்சை, மதுபானம்,  களியாட்டு, இவைகளை செய்து வெறிக்கொண்டு விக்கிரகாராதனை செய்து வந்தோம். ஆனால் இப்பொழுது நாம் மனந்திரும்பி அவர்களை போல துன்மார்க்க இச்சையிலே இப்பொழுது நாம் விழாதிருக்கிறதினாலே  அவர்கள் ஆச்சரியப்பட்டு பொறாமையினாலே தூஷிக்கிறார்கள்.  அதனால் தேவனுடைய வசனம் சொல்லுகிறது 

1பேதுரு 4:14   

நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

ஆதலால் பிரியமானவர்களே நம்மை யார் நிந்தித்தாலும், நம்மையல்ல, நமக்குள்ளில் இருக்கிற தேவனுடைய ஆவியாகிய மகிமையின் ஆவியானவரை நிந்திக்கிறதினால் அவர்களாலே நிந்திக்கப்பட்டு, நம்மளாலே தேவன் மகிமைப்படுகிறார்.  அல்லாமலும் 

லேவியராகமம் 24:17-22

ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.

ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.

நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.

மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.

உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கும் போது பரதேசி, சுதேசி என்று எழுதப்பட்டிருப்பது, ஆட்டுகுட்டியால் மீட்கப்படாதவர்கள் பரதேசிகளுக்கும், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் மீட்கப்பட்டவர்கள் சுதேசி என்பதற்கும் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  மேலும் மனிதனை  கொல்லுகிறவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று எழுதப்பட்டிருப்பது என்னவென்றால்,  நாம் மற்ற ஆத்துமாக்களுக்கு முன்பில் சாட்சியாக வாழாவிட்டால், நாம் இரத்தபழிகளுக்கு ஆளாகிறோம்.  அப்படியுள்ளர்வர்களின் ஆத்துமா, கொலைச்செய்யப்படுகிறது, என்பதை கர்த்தர் பழைய ஏற்பாட்டில் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அல்லாமலும் 1யோவான் 3:14-16

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.

தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

இதனை வாசிக்கிற அன்பானவர்களே நம்முடைய சகோதரரகளை நாம் பகைக்கக்கூடாது, நம் உள்ளத்தில் எப்போதும் தேவ அன்பு நிலைத்திருக்க வேண்டும்.  மேலும் நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், ஒரு மனிதனை ஊனப்படுத்தினது போல அவனையும் ஊனப்படுத்துதல் இவைகள் எல்லாம் நியாயபிரமாணத்துள்ளது .  ஆனால் அநேகர் அவைகள் கிறிஸ்துவால் மாற்றப்பட்டது என்று சொல்வார்கள்.  பிரியமானவர்களே அப்படியல்ல  நியாயபிரமாணத்தை மீறுகிறது பாவம்.  அது மட்டுமல்ல கிறிஸ்து நியாயபிரமாணத்தை நிறைவேற்றும் படியாகவே வந்தார்.  அதனால் எங்கெல்லாம் மனுஷன் அதிகாரம் மாம்சத்தில் எடுத்தானோ அங்கெல்லாம் கிறிஸ்து  ஆவியில் அதிகாரம் பெற்று யுத்தம் மேற்க்கொண்டு நியாயப்பிரமாணம் நிறைவேற்றுகிறார்.  

அதனால் மத்தேயு 5:17,18

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இவற்றை குறித்து  நானே பதிற் செய்வேன் என்கிறார் என்பது ரோமர் 12:19  ஆதலால் இதனை கருத்தில் கொண்டு நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.