தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 116: 7

என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மைசெய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

யூபலி வருஷமாகிய பெந்தேகொஸ்தே நாளிலிருந்து நம்முடைய ஆத்துமா சுகமாய் வாழும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் எவ்விதம் நம்முடைய ஆத்தும பலனாகிய கிருபையை பரிசுத்த பாதையில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  

ஆனால் அடுத்தப்படியாக நாம் தியானிக்க போகிறது என்னவென்றால் 

லேவியராகமம் 25:12-34  

அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.

அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.

யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக.

பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.

உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.

நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.

உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.

உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.

அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,

அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.

ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.

மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.

லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.

இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.

அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

என்னவென்றால் யூபிலி வருஷமானது, ஒரு பெந்தேகொஸ்தேயின் அனுபவத்தோடு, உயிர்தெழுந்த கிறிஸ்து,  மணவாட்டியாம் பரிசுத்த சபையாரை சேர்க்கும் படி சொற்க்கத்திலிருந்து இறங்கிய நாள் பெந்தேகொஸ்தே நாள்.  இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும்.  இது நம் எல்லாருடைய உள்ளத்திலும் வெளிப்படும் நாள்.  நாள் என்பது கிறிஸ்து வெளிப்படுவதை காட்டுகிறது. இந்த பெந்தேகொஸ்தே நாள் நம்மிடத்தில் வெளிப்பட்டால் அது மிகவும் பரிசுத்தமாயிருக்கும். அவ்விதம் வாழுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் அந்த வருஷத்தில் விதைத்தவைகளை மட்டும் புசிக்கவும். 

மேலும் அவனவன் தன்தன் காணியாட்சிக்கு திரும்பி போக கடவன் என்று எழுதப்பட்டிருப்பது, அவரவர் சொந்த நிலமாகிய  கிறிஸ்துவண்டையில் சேர வேண்டும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். அந்த பெந்தேகொஸ்தே அனுபவம் பெற்றவர்கள் தங்கள் எதையாகிலும் விற்றாலும், வாங்கியாலும் எந்த அநியாயமும் யாருக்கும் செய்யக்கூடாது.  பெந்தேகொஸ்தேயின் அனுபவம் நாம் பெற்றுக்கொண்டதிலிருந்து நமக்கு நல்ல பலன் வருஷங்களில் கிடைக்கும் .  மற்றும் பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்ப நமக்கு பலன் கிடைக்கும். 

அதன்னவெனில் கிருபையாகிய நீதியின் பலன் நமக்கு கிடைக்கும் என்பதற்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  நாம் எப்போதும் தேவனுக்கு பயந்து, ஆத்மீக வாழ்க்கையானாலும், உலக வாழ்க்கையானாலும்  யாருக்கும் அநியாயம் செய்யக்கூடாது.  பின்னும் நாம் செய்ய வேண்டுவது என்னவென்றால் நாம் கர்த்தரின் கட்டளைப்பிரகாரம் நடந்து, அவருடைய நியாயங்களை கைக்கொள்வோமானால் அவர் நம்மை சுகமாய் குடியிருக்கப்பண்ணுவார்.  அனுதினம் நம்மிடத்தில் நல்ல கனி உண்டாயிருக்கும். 

நாம் சுகமாய் குடியிருப்போம் என்பதென்னவென்றால் நம் ஆத்துமா சுகமாய் வாழும்.  நம்முடைய ஆத்துமா சுகமாய் வாழ வேண்டுமானால் நாம் சத்தியத்தின்படி நடந்துக்கொள்ள வேண்டும். அவற்றை குறித்து 

3 யோவான் 1: 2-8  

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.

சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்.

அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சிசொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும்.

ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்.

ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ள கடனாளிகளாயிருக்கிறோம்.

மேற்க்கூறப்பட்ட  வசனங்கள் பிரகாரம் நாம் நடப்போமானால் நம்முடைய ஆத்துமா சுகமாய் குடியிருக்கும். அவற்றைக்குறித்து 

ஏசாயா 32:15-20  

உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.

வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.

நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.

என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.

ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம்.

மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதைவிதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

இவ்விதமாக நாம் சத்தியத்தின் பிரகாரம் உண்மையாயிருப்போமானால் நம் ஆத்துமா சுகமாய் வாழந்து குடியிருக்கும். இவ்விதமாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.