தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நாகூம் 1: 15

இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன்பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுதும் சங்கரிக்கப்பட்டான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய நிலமாகிய உள்ளம் அந்நியனிடத்தில் விற்கப்படாமல்  எச்சரிப்போடு காக்கப் படவேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், யூபிலி வருஷமாகிய பெந்தேகொஸ்தே நாளில் மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா எவ்விதம் சுகமாய் தங்கி குடியிருக்கும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்ததாக நாம் தியானிக்க போகிற காரியங்கள் என்னவெனில் 

லேவியராகமம் 25:20-38

ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும்.

நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.

உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.

உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.

அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,

அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.

ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.

மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.

லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.

இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.

அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.

அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.

உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

இந்த வசனங்கள் என்னகூறுகிறதென்றால், கர்த்தர் ஏழாம் வருஷம் விதை விதைக்காமல் ஒய்ந்து இருக்கவேண்டும் என்றதால்  நாம் எதை புசிப்போம் என்று உங்கள் மனதில் நினைப்பீர்களானால் கர்த்தர் சொல்கிறது ஆறாம் வருஷத்தில், உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனை அனுக்கிரகம் பண்ணுவேன் என்று கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது எதற்கென்றால், விதையாகிய தேவனுடைய வசனம் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரன் தொடர்ந்து ஆறு வருஷம் வேலை செய்து, பின்பு ஏழாம் வருஷம் கர்த்தர் நமக்குள்ளாக பரிசுத்தப்பட்டு ஓய்ந்திருக்கிறார். அப்படி ஆகும் முன்பே ஆறாம் வருஷத்தில் மூன்று வருஷத்திற்குள்ள பலனை தரும் என்று சொல்கிறார். 

ஆனால் எட்டாம் வருஷத்தில் விதைத்து ஒன்பதாம் வருஷ மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள். இவை நம்முடைய ஆத்துமாவின் பலனுக்கு கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதனால் நாம் தேவனுடையவர்களாயிருக்கிறபடியால், நம் நிலங்கள் (உள்ளம்)பிறருக்கு அறுதியாய் விற்கவேண்டாம் என்கிறார்.  நாம் சத்துருவின் கையில் சிக்கிக்கொள்ளாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.  நாம் முழுமையாக தேவனுக்கென்று நம்மை ஒப்புக்கொடாததினால் கர்த்தர் சொல்வது, நீங்கள் பரதேசிகளும், என்னிடத்தில் அந்நியருமாயிருக்கிறீர்கள்.  

அதனால் கர்த்தர் நம்மை அவருடைய சொந்த நிலமாக அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் விலைக்கிரயமாக்குகிறார். ஆனால் நாம் முழுமையாக நம்மை தேவனுக்கென்று தகனிக்காமல் இருப்போமானால் சத்துருவின் கையில் விற்கப்பட்டு விடுவோம். அதனால் கர்த்தர் சொல்கிறது 

ஏசாயா 52:4-5

 பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மேற்கூறப்படுகிற வசனங்கள் நாம் எப்படி விற்கப்படுகிறோம் என்பதையும், நாம் எப்படி விடுதலை ஆக வேண்டுமென்றால் 

ஏசாயா 52:1-3

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.

விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 52: 6-10  

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக்காண்பார்கள்.

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

வசனங்கள் நம்முடைய ஆத்துமாவை மீட்டு தேவன் எருசலேமுக்கு ஆறுதல் அளிக்கிறதையும், பின்பு 

ஏசாயா 52:11-13  

புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

இந்த வசனங்கள் மீட்கப்பட்ட நாம் எப்படி சுத்திகரிப்பு செய்து நம்முடைய விசுவாச யாத்திரை செய்ய வேண்டும் என்பதை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. விசுவாச யாத்திரை நாம் அல்ல நம்மளில் இருக்கிறவர் ஞானமாய் நடப்பார் என்றும் எல்லாமே நம்முடைய வாழ்வில் அவரே உயர்ந்திருப்பார் என்றும், அவரே மேன்மையும் மகா உன்னதராயிருப்பார்.  அதனை குறித்து உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்க கடவீர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  

பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும் உண்மையாக ஒரு ஆத்துமா மீட்கப்படுகிறதென்றால் அது தன்னை பூரணமாக தகனிக்கும்.  தான் ஒரு இடத்திலும் உயராது.  ஆனால் அநேகர் தான் தான் என்றும், தனக்கு என்றும் தன்னை தான் உயர்த்திக்கொண்டேயிருப்பார்கள்.   அப்படியிருக்கிற உள்ளம் மீட்கப்படவில்லை என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

இதனை வாசிக்கிற அன்பானவர்களே தன்னை தான் ஒரு போதும் உயர்த்தாதபடி நாம் நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்.  அப்படி நாம் நம்மை தாழ்த்தினால் மட்டுமே கர்த்தர் நமக்கு கிருபையளிக்கிறார்.  அந்த கிருபை தான் என்றென்றும் அழியாத அலங்கரிப்பாயிருக்கிற நித்திய ஜீவன்.  ஆனால் தங்களை தாழ்த்தாமல் இருப்போமானால் கர்த்தர் கிருபையின் பலனை தராமல் கிருபையை இழந்தவர்களாக தரித்திரராகி விடுவோம்.  இப்படி அநேகர் தரித்திரராகி தங்கள் காணியாட்சியாகிய நிலத்தை அந்நியனுக்கு விற்று விடுகிறதினால், கர்த்தர் சபையாம் சகோதரர்கள் அந்த நிலத்தை வாங்க வேண்டும் என்கிறார். 

இவற்றை நாம் குறிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்னவென்றால் அப்படி யாராவது அந்நியனுடைய கையில் அகப்பட்டு விட்டால் அந்த நிலம் அந்த சபையாகிய இனத்தான் கர்த்தருடைய வார்த்தையினால் விற்றதை மீட்க வேண்டும். எப்படியென்றால் சமாதானத்தை சுவிசேஷமாய் அறிவிக்க வேண்டும்.  இவ்வித ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு வாழ நாம் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.