தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 6: 9

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சபையாம் சகோதரர்களை ஆதரிக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய நிலமாகிய உள்ளம் அந்நியனுடைய கையில் விற்கப்படாமல் நாம் எச்சரிப்போடு இருக்கவேண்டும் என்று தியானித்தோம்.  ஆனால் யாராவது விற்கப்பட்டால் 

லேவியராகமம் 25: 26 – 38

அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,

அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.

ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது.

மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும்.

லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம்.

இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும்.

அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.

உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக.

நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.

அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக.

உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

யாராவது அந்த ஆத்துமாவை மீட்காவிட்டால் தன்னுடைய முயற்சியினாலே தானே தன்னை கர்த்தரிடத்தில் தியாகமாக  ஒப்புக்கொடுத்து மீட்கப்பட வேண்டும். மேலும் எதற்காக விற்கப்பட்டாமோ அந்த காரியத்தை அப்படியே கொடுத்துவிட்டு தன் காணியாட்சிக்கு திரும்ப வேண்டும்.  திருஷ்டாந்தத்திற்குரிய காரியம்  என்னவென்றால் தேவனை விட்டு தூரம் போன காரியம் எதெல்லாம் இருக்கிறதோ அதனை எல்லாம் நம்மை சிறைப்படுத்துகிறவன் கையிலே விட்டுவிட்டு, நம்முடைய  தீமை செயல்களையெல்லாம் விட்டு விட்டு , நன்மையான கிரியைகளோடு கர்த்தரிடத்தல் நாம் சேரவேண்டும். அந்த செயல்கள் எல்லாம்  நம்மை நாமே சீர்த்திருத்திக்கொள்ள வேண்டும்.  

அல்லாமலும் நம்மை சீரதிருத்திக் கொள்ளும் வரையிலும் நாம் பெந்தேகொஸ்தே நாள் வரும்படி காத்திருந்து ஆத்துமாவின் அபிஷேகம் பெற்று ஆத்துமாவின் விடுதலைப்பெற்று தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.  மேலும் தேவனுடைய வீடாக கட்டப்பட்ட ஒரு ஆத்துமா விற்கப்பட்டால்  ஒரு வருஷத்திற்குள்ளாக மீட்டுக்கொள்ள வேண்டும்.  ஒரு வருஷத்திற்குள்ளாக மீட்கபடாமலிருந்தால் தலைமுறைதோறும்  சத்துருவானவனாகியவனுக்கே  உரியதாகும்.  மற்றும் யூபிலி வருஷத்திலும் விடுதலையாகாது.  

அல்லாமலும் மதில் சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகள், தேசத்தின் நிலங்களாகவே எண்ணப்படும்.  இவை என்னவென்றால் நம் ஆத்துமாவின் இரட்சிப்பு என்பது வசனத்தால் உண்டாயிருக்க வேண்டும்.  ஆனால் மதில் சூழப்படாத கிராமங்களில் உள்ள வீடுகள் விற்கப்பட்டால் யூபிலி வருஷமாகிய பெந்தேகொஸ்தே நாளில் விடுதலையாகும்.  அவர்கள் பட்டணங்களை சேர்ந்த வெளி நிலம்  விற்கபடலாகாது,  ஏனென்றால் திருஷ்டாந்தம் என்னவென்றால் நம்முடைய வெளி சரீரம் ஒருபோதும் ஜாதிகளுடைய அலங்காரம் இருக்கக்கூடாது.  லேவி கோத்திரத்தாருக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும்.   

மேலும் நம் சகோதரர்கள் ஆத்மீக வாழ்க்கையில் நஷ்டபட்டு கிருபையில் தரித்திரனானால் நாம் எல்லாவற்றிலும் பரதேசியை போலும், தங்க வந்தவர்களை போலும் அவர்களை ஆதரிக்க வேண்டும்.   அவர்களுக்கு நம்மால் இயன்ற மட்டும் அவர்களுக்கு உதவி செய்கிறவர்களாக இருக்க வேண்டும்.   நாம் தேவனுக்கு பயந்து சகோதரர்கள்  பிழைக்கும் படியான காரியங்களை செய்ய வேண்டும். சகோதரரிடத்தில் வட்டியோ பொலிசையோ வாங்கக்கூடாது.   ஏனென்றால் நம்மை கர்த்தர் பாவத்திலிருந்து மீட்டு கானானுக்கு செல்லுகிற விசுவாச யாத்திரையில் நானே கர்த்தர் என்று கர்த்தர் சொல்கிறார். 

ஆதலால் பிரியமானவர்களே நாம் யாரும் இஸ்ரவேலுடைய காணியாட்சிக்கு புறம்பே ஆகாதபடி கிறிஸ்துவின் இரத்தத்தினால் சமீபமாய் வந்து வாழும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.