தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 128: 1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் யாரையும் கொடுமையாய் ஆளக்கூடாது

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிருபையில் தரித்திரராகிய நம்முடைய சபையாம் சகோதரர்கள் பிழைத்திருக்கும் படி நாம் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களிடத்திலிருந்து வட்டியாவது, பொலிசையாவது  மீட்கப்பட்டவர்கள் வாங்கக் கூடாது என்றும் தியானித்தோம்.  ஏனென்றால் கர்த்தர் சொல்கிறார்  நான் உங்களை எகிப்தின அடிமைதனத்திலிருந்து கானானுக்கு அழைத்து வந்த உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்கிறார்.  

பிரியமானவர்களே நம்முடைய விசுவாச யாத்திரையை குறித்து கர்த்தர் சொல்கிறார், நாம் நம்முடைய சகோதரர்களாகிய யாருக்கும் எந்ந அநியாயமும் செய்யக்கூடாது என்பதும், வட்டியும், பொலிசையும் வாங்கினால் நாம் கர்த்தருடைய கட்டளையை மீறுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.  இவற்றை தேவன் எதற்கு திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் நம்முடைய சபையாம் சகோதரர்கள் தங்கள் கிருபையை இழந்து தரித்திரராக வாழ்கிறவர்களுக்கு நாம் எல்லாவிதத்திலும் உதவி செய்கிறவர்களாக காணப்பட வேண்டும்  என்று தியானித்தோம்.  

அடுத்தப்படியாக நாம் இந்த நாளில் தியானிக்கிற வசனங்கள் என்னவென்றால் 

நீதிமொழிகள் 28: 8-10

அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.

உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.

மேற்கூறியவசனங்கள் பிரகாரம் நாம் உத்தமர்களை  மோசப்படுத்தினால் நாமே அந்த குழியில் விழுவோம் என்று எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் கர்த்தருடைய வசனம் என்ன சொல்கிறது என்றால் 

சங்கீதம் 15:1-5

கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?

உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.

தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

இதனை நாம் தியானிக்கையில் தன்னுடைய பணத்தை வட்டிக்கு கொடாமலும், பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. அவற்றைக் குறித்துதான் 

சங்கீதம் 16:8   

கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.

அல்லாமலும் லேவியராகமம் 25: 39-43

உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம்.

அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன்.

பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.

அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது.

நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.

நம்முடைய சகோதரர்கள் யாராவது விலைப்பட்டு போனால் அவர்களை அடிமைபோல ஊழியஞ்செய்ய  நெருக்கக்கூடாது அவன் கூலிக்காரனை போலும், தங்க வந்தவனை போலும் நம்மோடுக்கூட இருந்து யூபிலி வருஷமட்டும் நம்மிடத்தில் சேவிக்கக்கடவன் என்று சொல்கிறார். இதன் பொருள் என்னவென்றால் சபையாம் சகோதரன் தான் பெற்றிருந்த கிருபையை இழந்து தரித்திரரானால் அவன் அவனுக்குள் பெந்தேகொஸ்தே நாள் வர காத்திருந்து சேவிக்க கடவன். பின்பு  யூபிலி வருஷத்தில் சகோதரன் தன் ஆவிக்குரிய வாழ்க்கையை புதுப்பித்து இழந்ததை பெற்றுக்கொண்டு பின்பு தன் பிள்ளைகளோடும்,குடும்பங்களோடும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கு திரும்பிபோகக்கடவன்.     தன்னுடைய ஆத்துமாவில் இழந்த அத்தனையும் திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்.    

அல்லாமலும் பாவத்தின் அடிமையிலிருந்து மீட்க பட்ட யாரும் அடிமைகளாக விற்கபடலாகாது.  ஏனென்றால் அவர்கள் எல்லாரும் என்னுடைய ஊழியகாரர் என்று கரத்தர் சொல்கிறார். அதனால் கர்த்தர் சொல்கிறார் கர்த்தருடைய ஊழியக்காரர் யாரையும் கொடுமையாய் ஆளக்கூடாது என்றும் தேவனுக்கு பயந்திருக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார்.  ஆதலால்  பிரியமானவர்களே  நாம் தேவனுக்கு பயந்திருப்போமானால்  அவர் நம்மை நோக்கி பார்க்கிறவராயிருக்கிறார்.  இவ்விதமாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.