தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119: 33

கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் புறஜாதிகளை மட்டும் அடிமைகளாக கொண்டு பின் அவர்களை கர்த்தருக்கென்று சுதந்தரராக்கலாம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் யாரையும் கொடூரமாய் ஆளக்கூடாது என்றும் எகிப்தின் அடிமையினின்று புறப்படபண்ணின யாரையும் அடிமைகளாக விற்கக்கூடாது என்றும் தியானித்தோம்.  

ஆனால் இந்நாளில் நாம் தியானிக்கிற வசனம் என்னவென்றால் 

லேவியராகமம் 25: 44-51    

உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.

உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.

அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது.

உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால்,

அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம்.

அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.

அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக்கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும்.

இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன்.

மேற்க்கூறிய வசனங்கள் என்ன சொல்லுகிறதென்றால் ஆண் அடிமைகளானாலும், பெண் அடிமைகளானாலும் புற ஜாதிகளாயிருக்க வேண்டும்.   அப்படி பட்டவர்களை விலைக்கு வாங்கலாம்.  மேலும் நம்மிடத்தில் தங்கி வருகிற அந்நியரிலும்,  நம்மிடத்தில் யாராவது அவ்விதமாக பிறந்தவர்கள் இருந்தாலும் அவர்களை அடிமைகளாகக்கொண்டு  அவர்களை சுதந்தரமாக்கலாம்.  இதனை கர்த்தர் எதற்க்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால் முதலாவது நாம் எல்லாரும் முற்காலத்தில் மாம்ச இச்சைகளின் படி நடந்து மாம்சமும், மனதும் விரும்பினவைகளை செய்து, சுபாவத்தின்படி மற்றவர்களை போல கோபாக்கினையின் பிள்ளைகளாக  இருந்தோம்.   ஆனால் அவருடைய இரக்கத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அவருடைய ஆவியினாலே நம்மை உயிர்பித்து அவருடைய சுதந்தரராக்குகிறார்.  

இவ்விதமாக அடிமைகளாக நாம் யாரையாவது வைத்திருந்தால் கர்த்தர் அவர்களையும் சுதந்தரராக்கலாம். அவர்களை நமக்கும் நமக்கு பின் வரும் சந்ததியாரும் சுதந்தரிக்கும் படி , கர்த்தர் அவர்களை சுதந்தரமாக்கிக் கொள்ளலாம்,  ஆனால் அவர்கள் அடிமைகளாக இருந்தால் நாம் அவர்களை கொடுமையாக ஆளக்கூடாது என்று கர்த்தர் கூறுகிறார். 

மட்டுமல்லாமல் நம்மிடத்தில் இருக்கிற அந்நியனும், பரதேசியும் செல்வனாயிருக்க, நம்முடைய சபையாம் சகோதரர்கள் தரித்திரராகி அவர்களிடம் விலைபட்டு போனால் நாம் அவர்களுக்கு தேவையான பரலோக ஆகாரத்தைக் கொடுத்து அவர்களை மீட்கலாம். அவனுடைய பிதாவின் சகோதரனாவது, சகோதரனுடைய புத்திரனாவது  அந்த குடும்பத்திலுள்ள அந்த இனத்தாரில் யாராவது மீட்கலாம். தான் விலைப்பட்ட வருஷந்துவக்கி விடுதலையான யூபிலி வருஷமட்டும், தன்னை விலைக்கு கொண்டவனுடன் கணக்கு பார்க்கக்கடவன்.  எத்தனை வருஷம் விலைபட்டு போனார்களோ அத்தனை வருஷம் அவனுடைய விலைகிரயம் கூலிக்காரனுடைய கணக்கு போல வருஷத்தொகைக்கு ஒத்து பார்க்க வேண்டும்.  ஆனால் இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால் தன் விலைக்கிரயத்திலே அவைகளை மீட்கும் பொருளாக அவைகளுக்கு திரும்பக்கொடுக்க கடவன்.  அந்த மீட்கும் பொருளாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மளில் தோன்றுகிறார்.  

அவற்றைக் குறித்து சொல்வது என்னவென்றால் 

மாற்கு 10:45

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார்.

இதனை நாம் தியனிக்கையில் யாராவது அநேக வருஷங்களால் விலைப்பட்டிருந்தாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ஜீவனை மீட்கும் பொருளாக நமக்கு தந்து, விலைப்பட்டு அந்நியனுடைய கையில் சிக்குண்டு இருக்கிறவர்களை விடுதலையாக்குகிறார்.  அல்லாமலும் விலைப்பட்டு போனவன் தான் விடுதலையாகிற யூபிலி வருஷமட்டும் கொஞ்சமாகயிருந்தால் அவன் கணக்குப்பார்த்து தன் வருஷங்களுக்கு தக்கதை தன்னை மீட்கும் பொருளாக திரும்ப நம்முடைய ஆத்துமாவை ஒப்படைக்க வேண்டும்.  இவ்விதம் நம்மை சத்துருவின் கையிலிருந்து விடுதலையாக்குகிற தம்முடைய ஜனத்தை கர்ததர் 

லேவியராகமம் 25:55    

இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

நாம் தியானிக்கும் போது இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியகாரர் என்று கர்த்தர் சொல்கிறார்.  கர்த்தரின் ஊழியகாரராகிய இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மேற்க்கூறிய கட்டளைகள் எல்லாம் காத்து நடக்க வேண்டும். ஒப்புகொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.