தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 67: 6, 7 

பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.

தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஏற்ற காலத்தில் பலனை பெற்றுக்கொள்ள வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் புறஜாதிகளாகியவரை மட்டும் தான் அடிமைகளாக வைக்கலாம் என்றும், பின்பு கர்த்தருக்காக அவர்களை ஆவிக்குரிய சந்ததிகளாக்கி,  தேவனுடைய சுதந்தரராக்கலாம் என்றும் தியானித்தோம்.  

அதெப்படியெனில் எபிரெயர் 9:14,15

நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!

ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது  பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம்,  நம்முடைய மனசாட்சியை செத்த கிரியைகளற சுத்திகரித்து,  யாவரும் நித்திய சுதந்தரத்தை அடைந்துக்கொள்வதற்காக புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.  அவற்றை குறித்து கர்த்தர் ஆபிரகாமிடத்தில் சொல்கிறது 

ஆதியாகமம் 17:6-9

உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள்.

உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.

நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.

அல்லாமலும் நித்திய சுதந்தரராக்கபட்ட நாம் அனுதினம் தேவனுடைய கட்டளைகளை கருத்தாய் கைக்கொள்ள வேண்டும்.  

லேவியராகமம் 26:1-4

நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர்.

நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,

நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.

இதன் கருத்துகளை நாம் தியானிக்கும் போது தேசம் என்பது  நாம் ஒவ்வொருவரும் என்பதை திருஷ்டாந்தப்படுத்தி மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு சொல்கிறது.  நமக்குள்ளாக எந்த விக்கிரகங்களோ, சுரூபங்களையும்  உண்டாக்கக்கூடாது, சிலைகளை நிறுத்தக்கூடாது, சித்திரந்தீர்ந்த கல்லை  நமஸ்கரிக்கும்படி , நம்முடைய  உள்ளத்தில் அதற்குரிய செயற்பாடுகள் எதனையும் சிந்திக்காதபடி இருக்க வேண்டும். நம்முடைய உள்ளம் தான் பரிசுத்த ஸ்தலம்.  பரிசுத்த ஸ்தலமாகிய நம்முடைய உள்ளத்தில்  மிகவும் பயபக்திக்குரிய காரியங்கள் உண்டாயிருக்க வேண்டும் மேலும் விக்கிரகங்கள, சுரூபங்கள், சிலைகள் எல்லாம் என்னவென்றால் கல்லாலும், மண்ணாலும், களிமண்ணாலும், மரத்தாலும், பொன்னாலும், வெள்ளியாலும், செய்யப்பட்டதை நமஸ்கரிக்கிறது மட்டுமல்ல, நம்முடைய உள்ளத்தில் நீங்காத நினைப்புகளோடு கூடிய தீய நோக்கமாகிய உலகத்தின் ஆசை இச்சைக்குரிய காரியங்கள். 

ஆதலால் இவ்விதமான காரியங்கள் நம் உள்ளத்தை அருவருப்புகளுக்குள்ளாக்காதபடி நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் கர்த்தராகிய தேவன் சொல்வது என்னவென்றால் என் கட்டளைகளின் படி நடந்து, என் கற்பனைகளை கைக்கொண்டு அவைகளின் படி செய்தால்,  நான் ஏற்றகாலத்தில் மழைபெய்யப்பண்ணுவேன், பூமி தன் பலனை தரும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும்.  இதன் விளக்கம் என்னவென்றால் நம் உள்ளமானது கர்த்தருடைய வார்த்தைகளை கருத்தாய் கைக்கொண்டு நடப்போமானால், பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியானவர் அங்கு வெளிப்படுகிறார்.   அப்போது நம் ஆத்துமாவில் நல்ல பலனை நாம் பெற்றுக்கொள்வோம். கிறிஸ்துவின் சுதந்தரராகாதவர்கள் தாங்களும் கர்த்தருக்காய் கனிக்கொடுக்கிறவர்களாவார்கள்.  

இவ்விதமாக மேற்க்கூறப்பட்ட காரியங்களை கருத்தாய் சிந்தித்து, ஞானமாய் நடந்து, கர்த்தரிடத்திலிருந்து அதற்குரிய  பலனை பெற்றுக்கொண்டு  ஆசீர்வாதத்தை சுதந்தரிப்போம். இவற்றிற்காக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.