தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 65: 8

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது: அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் கர்த்தர் எப்போது உலாவுகிறார் என்றும் அங்கு அவர் செய்கிற நன்மையான செயல்கள்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஏற்ற காலங்களில் ஆத்ம பலனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தியானித்தோம்.  ஆனால் இந்த நாட்களில் நாம் தியானிக்க போகிற காரியங்கள் என்னவென்றால் 

லேவியராகமம் 26: 5-12

திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்; விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள்.

தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன்.

போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள்.

உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை.

நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.

மேற்க்கூறிய வசனங்கள் தியானிக்கும் போது போரடுப்பு காலம்,ஒரு மனுஷனுடைய வாழ்வில் எப்போது வருகிறதென்றால் திராட்ச பழம்பறிக்கும் காலம் வரைக்கும் உண்டாயிருகும்.  திராட்ச பழம் என்றால் ஆவிக்குரிய கனிகள். இதனை நாம் தியனிக்கும் போது, திராட்ச செடி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.  கொடிகள் என்பது நாம் ஒவ்வொருவரும்.  என்னவென்றால் செடியாகிய கிறிஸ்துவின் வசனத்தோடு, கொடியாகிய நம்முடைய ஆத்துமா இணைந்து, கிறிஸ்துவுக்கேற்ற  நற்கிரியைகளை நாம் செய்து ஆவிக்குரிய கனிகளோடு நாம் வாழ்ந்து வரும் போது, நமக்கு போரடிப்பு காலம் உண்டாயிருக்கும்.  

என்னவென்றால் போரடிப்பு காலம் வந்து நாம் நல்ல பலனாகிய ஆத்துமாவின் அலங்காரம் தான் திராட்ச பழம் பறிக்கும் காலம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அலங்காரம் தான் பரிசுத்த அலங்காரம்.  அந்த பரிசுத்த அலங்காரம் பெற்றுக்கொள்வதென்றால், ஆவியின் கனிகள் ஒன்பதும் தவறாமல் நமக்கு உண்டாயிருக்க வேண்டும்.  அவைகள் நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சாத்தானுடைய கிரியையாகிய  உலகத்தோடு உள்ள ஐக்கியதை நாம் விட்டு விட வேண்டும். அப்படியானால் மட்டுமே நம்முடைய உள்ளம் பரிசுத்தமாக பாதுகாக்க முடியும். 

ஆவியின் கனிகள் கலாத்தியர் 5:22,23   

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

மேற்க்கூறிய காரியங்களை நாம் கருத்தாய் கைக்கொள்வோமானால்,அதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.  மேலும் நாம் தியானிக்கும் போது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை வைத்து நமக்கு திருஷ்டாந்தபடுத்துகிறார். என்னவென்றால் இஸ்ரவேலர்கள் கானானில் சுற்றிபார்க்க சென்றபோது எஸ்கோல் பள்ளதாக்கில் வந்த போது திராட்ச குலையை  அவர்கள் கண்டு அறுத்து எடுத்து செல்வதை பார்க்கிறோம்.  அதென்னவென்றால் நம்முடைய ஆத்துமாவின் அறுவடைக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

திராட்ச பழத்தில், நல்ல திராட்ச,கசப்பான திராட்சபழம்.  கசப்பான திராட்ச  பழத்தை கர்த்தர் விரும்ப வில்லை.  அதைக்குறித்து கர்த்தர் சொல்வது 

ஏசாயா 5:1-7

இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு.

அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது.

எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள்.

நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?

இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.

அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களை கொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.

சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.

மேலும் கர்த்தர் நியாயத்தீர்ப்பை எடுத்துக் கூறுகிறார்.  அந்த நிலமாகிய நம்முடைய உள்ளம் முட்செடியும், நெரிஞ்சிலும் முளைக்கும்.  அதின் மேல் மழைபெய்யாதபடி கட்டளையிடுவேன் என்று சொல்கிறார்.   அதென்னவென்றால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுக்கொள்ளமுடியாது.  மேலும் கர்த்தருடைய நியாயதீர்ப்பு நம்மை சுத்திகரிக்கும்.  அதனை சந்தோஷமாக நாம் ஏற்றுக்கொண்டால் பரலோக ராஜ்யம் நமக்கு சொந்தமாகும்.  அதனை குறித்து 

வெளிப்படுத்தல் 14:14-20   

பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன்.

அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான்.

அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது.

பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான்.

அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான்.

அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான்.

நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

மேலும் கர்த்தருடைய வார்த்தை சொல்கிறது என்னவென்றால் விதைப்பு காலம் வரைக்கும்  திராட்சபழம் பறிப்பு காலம் உண்டாயிருக்கும்.  இவை எதை காட்டுகிறது  என்றால் விதைப்பு உண்டானால் அறுப்பும் உண்டாயிருக்கும்.  அதனால் அப்பத்தை திருப்தியாய் சாப்பிட்டு, தேசத்தில் சுகமாய் குடியிருப்பீர்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. நாம் நல்ல பலனை கொடுப்போமானால் நம் ஆத்துமா சுகமாய் கர்த்தருடைய வீட்டில் குடியிருக்கும்.  அங்கு சமாதானத்தை கர்த்தர் கட்டளையிடுவார்.  யாரும் தத்தளிக்கபண்ண முடியாது. துஷ்ட மிருகங்கள் நம்முடைய உள்ளத்தில் இல்லாதபடி ஒழியப்பண்ணுவார்.  நியாயதீர்ப்பு நிறுத்தபடும்.  சத்துருக்கள் துரத்தப்படும். கர்த்தர் சத்துருவை  வசனமாகிய பட்டயத்தால் விழப்பண்ணுகிறார்.  

மேலும் நம்மேல் கண்ணோக்கமாயிருந்து பலுகவும், பெருகவும் பணணுகிறார்.  கர்த்தர் நம்மோடு உள்ள உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார். பிரமாணங்கள் உட்கொண்டு, புதிய கற்பனையை கைக்கொள்வோம்.  அவ்விதம் நாம் நம்மை சமர்பித்தால் நமக்குள்ளாக கர்த்தர் வாசஸ்தலத்தை ஸ்தாபிக்கிறார்.  அப்போது கர்த்தர் நம்மை தள்ளுவதில்லை.  அப்படியானால் கர்த்தர் நம் நடுவில் உலாவி, நம்முடைய தேவனாயிருப்பார்.  நாம் அவருடைய ஜனமாயிருப்போம்.   

பிரியமானவர்களே நாம் அவருடைய ஜனமாகும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.