தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119: 4

உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால் , அப்பம் என்னும் ஆதரவு கோலை முறித்து, கர்த்தர் நம்மை தண்டிக்கிறவராயிருக்கிறார்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால் கர்த்தர் அவர்களை சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கிற விதத்தை குறித்து தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில்   லேவியராகமம் 26:26-28

உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.

இன்னும் இவைகலெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன்.

வசனங்கள் தியானிக்கும்போது கர்த்தர் சொல்கிறது என்னவென்றால் அப்பம் என்னும் ஆதரவு கோலை கர்த்தர் நம் நடுவில் முறிக்கிறார்.  அது என்னவென்றால் அப்பம் என்னும் தேவ வசனம் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இடம் பெறாதபடி தேவன் தடுக்கிறார்.  அதற்கு காரணம் என்னவென்றால் கர்த்தர் நம்மை அநேக முறை வசனத்தால் எச்சரித்தும், அந்த வசனத்தால் தண்டித்து இருந்தாலும் நாம் நிர்விசாரமாக அசட்டைபண்ணுவதால் கர்த்தர் நம்மிடம் கோபமுள்ளவராக, அப்பத்தினால் வருகிற ஆதரவை முறிக்கிறார்.  

அப்போது பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் அப்பத்தை சுட்டு,  அதனை திரும்ப நிறுத்துக் கொடுப்பார்கள்.  அதனை நாம் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டோம் என்கிறார்.  இதெப்படியெனில் நம்முடைய ஆத்துமா சரியான முறையில் வசனம் ஏற்றுக்கொண்டு செயல்படாதபடி, நமக்குள் இருக்கிற பத்துவிதமான  ஸ்திரிகள், நம்முடைய ஒரே ஆத்துமாவில் அப்பத்தை தயார் செய்து நிறுத்துக்கொடுக்கும் போது, அது நமக்கு சாப்பிட்டும் திருப்தியளிக்காது  என்பதை கர்த்தர் கூறுகிறார். 

இவையெல்லாவற்றிலும் இவ்விதம் கர்த்தர் நமக்கு செய்தாலும் இன்னும் நாம் செவிக்கொடாமல் எதிர்த்து நடந்தால், கர்த்தர் உக்கிரத்தோடே எதிர்த்து நம்முடைய பாவத்தினிமித்தம் ஏழத்தனையாய் தண்டிக்கிறவர் என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.  

மேலும் லேவியராகமம் 26:29-34  

உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள்.

நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும்.

நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன்.

நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.

ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.

நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்.

இந்த வசனங்களை ஆராய்ந்து பார்க்கும்போது குமாரரின் மாம்சத்தையும், குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள் என்று எழுதப்பட்டிருப்பது  என்ன வென்றால் நம்முடைய ஆத்துமாவின் வளர்ச்சியை காட்டுகிறது, அதெப்படியென்றால் நம்முடைய ஆத்துமாவுக்கேற்ற அப்பம் கிடைக்காத காரணத்தால்,  தங்களில் இருக்கிற  அப்பமாகிய வசனத்தை அனுதினம் உட்கொண்டு அதனை நடைமுறை படுத்துவார்கள்.  தங்களில் புதிய மாற்றத்தை வருத்தமாட்டார்கள்.   அதனால் கர்த்தர் சொல்வது நம்முடைய உள்ளத்தின் மேடைகளை அழித்து,  விக்கிரக சிலைகளை நீர்துளியாக்கி, உடல்களை நரகலான தேவர்களுடைய உடல்கள் மேல் எறிவேன் என்கிறார் என்றால் அநேகம் பேர் தங்கள் பெருமையினால், கர்த்தரை காட்டிலும் வேறு காரியங்களை இருதயங்களில் வைத்துகொள்வார்கள் .  அவர்களை தேவர்கள் போல் எண்ணிக்கொள்வார்கள்.  அதனால் கர்த்தருடைய கோபத்தினால் அந்த ஆத்துமாவை கர்த்தர் அரோசிக்கிறார்.  

அவ்விதம் தேவ கோபத்தினால் அவர்களை வெறுமையாக்கி, பரிசுத்த ஸ்தலத்தை பாழாக்கி, அப்படிபட்டவர்கள் செலுத்துகிற பலியை அங்கிகரிப்பதில்லை.  அப்போது  நம் உள்ளத்தில் வாழ்ந்துவருகிற சத்துருக்கள் பிரமிப்பார்கள்.  அல்லாமலும் நம்முடைய உள்ளமெல்லாம் சத்துருவாகிய சாத்தான் இரம்மியமாய் அனுபவிப்பான்.   அப்போது நம்முடைய உள்ளம் மிகவும் பாழ்கடிக்கப்படும். அப்போது கர்த்தர் மனதளர்ச்சியடையும்படிசெய்வார்.  அவ்விதம் உள்ளம் மனம் தளர்ந்து இருக்கும்போது , ஒரு இலை அசைந்தால் போலும் நிற்க முடியாமல் ஆத்துமா தள்ளாடி, பட்டயத்திற்கு தப்பி ஓடுவது போல், யாரும் விரட்டாமலே ஓடி விழுவார்கள்.  

இவ்விதமாக அவர்கள் ஆத்தும பெலன் இழக்க வைக்கிறார். எப்படியென்றால் கீழ்படியாதவர்களை கர்ததர் கடுமையாய் தண்டிக்கிறார்.   இவ்வித தண்டனையிலிருந்து நாம் யாவரும் தப்புவித்துக் கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.