தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியேல் 37: 14

என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய அக்கிரமத்தின் காரணமாக சிறைப்பட்டு இருப்போமானால், நம்முடைய தப்பிதங்களை கர்த்தரின் சமூகத்தில் அறிக்கை செய்தால், கர்த்தர் நம்மை சுய தேசமாகிய கானானுக்குள் மீண்டும் அழைத்து வருவார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால், அப்பம் என்னும் ஆதரவு கோலை முறித்து, கரத்தர் நம்மை தண்டிக்கிறவராயிருக்கிறார் என்றும் தியானித்தோம்.   

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கிற காரியங்கள் என்னவெனில் லேவியராகமம் 26: 40-46 

அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி,

அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,

நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.

அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

இவைகள் என்னவென்றால், கர்த்தர் சொல்வது எனக்கு விரோதமாக துரோகம் பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி, அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்த படியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, நம்மை சத்துருக்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததையும் அறிக்கையிட்டு, தாங்கள் செய்த அக்கிரமத்துக்கு கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,  கர்த்தர் யாக்கோபோடும், ஈசாக்கோடும், ஆபிரகாமோடும் செய்த உடன்படிக்கையை நமக்காக நினைத்து நம் பாழாய் கிடந்த நம் தேசமாகிய நம்முடைய ஆத்துமாவையும், மற்றும் சத்துருவானவன் இரம்மியமாய் அனுபவித்து வந்த நம்முடைய உள்ளமானது கர்த்தருடைய வார்த்தைகளை அவமதித்து, அவருடைய கட்டளைகளை வெறுத்தபடியினாலே தங்களுக்கு கிடைத்த அக்கிரமத்தின் தண்டனை என்று நாம் ஒத்துக்கொள்வோமானால், நம்மை கர்த்தர் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,  நம்மை நிர்மூலமாக்கவோ, நம்மோடு பண்ணின உடன்படிக்கையை அபத்தமாக்கதக்கதாக நம்மை கைவிடவும், வெறுக்கவும் மாட்டேன் என்று கர்த்தர் சொல்கிறார். அவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று சொல்கிறார்.  

மேலும் கர்த்தர் சொல்வது நம்மை எகிப்தாகிய பாவத்தின் அடிமையிலிருந்து புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக மீட்டு  எடுத்ததினால் நம்முடைய முன்னோர்களிடத்தில் எடுத்த உடன்படிக்கையை நமக்காக நினைவு கூர்ந்து அவர் கர்த்தர் என்பதை விளங்கபண்ணுவேன் என்னு சொல்கிறார்.  அல்லாமலும் மேற்க்கூறபட்ட வார்த்தைகளின் விளக்கம் எசேக்கியல் 36 -ம் அதிகாரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. 

அதன் கருத்துகளை தியானித்து வாசியுங்கள். அதனை நாம் வாசித்தால் நமக்கு புரிகிறது நம்முடைய அக்கிரமத்தினால், கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் ஒப்புப்கொடுக்கும் போது நாம் நம்முடைய சுய தேசமாகிய கானானை விட்டு மறு தேசத்திற்கு போய் விடுகிறோம்.  அவ்விதம் போவதை நாம் புரிந்துக்கொள்ளாமல் இருக்கிறோம்.  அது பேருந்தில் போவதையோ, கப்பலில் போவதையோ, விமானத்தில் போவதையோ தேவன் சொல்லவில்லை.  அது என்னவென்றால் நாம் தேவனுடைய வசனம் விட்டு தன்மனது விரும்பினதை செய்து, இஷ்டம்போல் நடந்து, புறஜாதிகள் செய்வதுபோல்செய்து தான் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக்கொண்டிருப்போம்.  

ஆனால் நம்மை மாற்றும்படியாக கர்ததர் நம்மை பல விதத்தில் தண்டிக்கிறார்.   அப்படி தண்டிக்கப்படும்போது சில உள்ளங்கள் தாங்கள் செய்த அக்கிரமத்தை உணர்ந்துக்கொள்வார்கள்.  அவர்கள் மேல் கர்த்தர் இரக்கம் வைத்து அவர்களை தங்கள் சொந்த தேசமாகிய கிறிஸ்துவண்டையில் மீண்டும் கொண்டு வந்து ஆத்மாவில் பாழாய் கிடந்த இடத்தை தேவ கிருபையினால் நிறைத்து சந்தோஷப்படுத்துவார்

இவைகள் எல்லாமே கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாராகிய நமக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு சீனாய் மலையின் மேல் கொடுத்த கட்டளைகள்.  ஆகையினால் கர்த்தர் நமக்கு தந்த கட்டளைகள் கைக்கொண்டு நடக்க கற்றுக்கொள்வோம் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.