தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 86: 12

என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்மை பொருத்தனையோடு ஒப்புக்கொடுத்து முழுமையும் கர்த்தருக்குரியவர்களாக வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், நம்முடைய அக்கிரமத்தின் காரணமாக சிறைப்பட்டு இருப்போமானால், நம்முடைய தப்பிதங்களை கர்த்தரின் சமூகத்தில் அறிக்கை செய்தால், கர்த்தர் நம்மை சுய தேசமாகிய கானானுக்குள் மீண்டும் அழைத்து வருவார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  கர்த்தர் நம்மை சுயதேசத்திற்கு கொண்டு வருகிறார் என்றால், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரை, கிறிஸ்துவோடு கூட சேர்ந்து  ஆராதனை செய்தால், அந்த ஆராதனையில் கிறிஸ்து நம்மளில் ஆளுகை செய்து நம்மிடத்தில் இருக்கிற அந்நிய ஆராதனைகளையும், அந்நிய அக்கினிகளையும் அவித்துப்போட்டு நம்மை கொஞ்சம் கொஞ்சமாக சுத்திகரித்து, நாம் தேவனுக்கு பிரியமான ஆராதனை செய்தால், தேவன் நம்மளில் கூட மகிமைபடுகிறவராயிருக்கிறார்.  

என்னவென்றால் நாம் செலுத்துகிற ஆராதனையை கர்ததர் அங்கீகரித்து அதில் அவர் பிரியபடவேண்டுமானால் நாம் நம்மை கர்த்தருக்கென்று காணிக்கையாக கொடுக்கும்படியாக 

லேவியராகமம் 27:1-7 

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.

இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,

பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.

ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,

ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,

அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.

இந்த வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தர் மோசேயிடம்,  இஸ்ரவேல் புத்திரரிடம் சொல்கிறது என்னவென்றால் யாராவது தன்னை கர்த்தருக்கென்று பொருத்தனை பண்ணிக்கொண்டால் பொருத்தனைபண்ணப்பட்டவர்கள் கர்த்தரின் மதிப்பின் படி கர்த்தருக்கு உரியவர்கள்.  இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வது என்னவென்றால் நாம் நம்மை கர்த்தருக்கென்று பொருத்தனை செய்து, ஒப்புக்கொடுத்து கர்த்தரை ஆராதித்தால், நம்மை பரிசுத்த  சேக்கல் கணக்கின்படி நம் உள்ளத்தின்  ஆத்மீக  வாழ்க்கையை வெள்ளிசேக்கலுக்கு ஒப்பிட்டு மதிப்பிடுகிறார்.    

இருபது வயது முதல் அறுபது வயதுகுட்பட்ட ஆண்பிள்ளையை பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளி சேக்கலாகவும், பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக என்று எழுதப்பட்டிருக்கிறது.  இதில் வயதாக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் தேவனால் பிறந்து சபையோடு சேருவதற்காக ஆயத்தப்படுத்துவது  தான் நம் பிறப்பின் முதல் நாள் என்பதை நாம் யாவரும் அறிந்துக்கொள்ளவேண்டும்.  அதைக்குறித்து கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் 

யாத்திராகமம் 12:1-9 

கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக.

நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத் தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளக்கடவர்கள்.

ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம்.

அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,

அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,

அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள்.

பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக.

இதன் விளக்கம் தான் நாம் ஆட்டுகுட்டியானவருடைய  இரத்தத்தால்  நாம் மீட்கப்படும் மாதம், நமக்கு பிரதான மாதம் எனப்படுகிறது.  ஆதலால் பிரியமானவர்களே நாள் மாதம் வருஷம் எல்லாமே மீட்கப்பட்ட நம்முடைய உள்ளமாகிய கிறிஸ்துவின் ஜீவன்.  அதனால் வயதை பற்றி கர்த்தர் கூறுவது நம்முடைய ஆத்துமா மீட்கப்படுகிற நாளிலிருந்து வயதை கர்த்தர் கணக்கெடுக்கிறார்.   ஐந்து வயது முதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையை பத்து சேக்கலாகவும், ஒரு மாதம் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளி சேக்கலாகவும், பெண் பிள்ளையை மூன்று வெள்ளி சேக்கலாகவும், அறுபது வயது தொடங்கி அதற்கு மேற்பட்ட  வயதுள்ள ஆண்பிள்ளையை பதினைந்து சேக்கலாவும், பெண்பிள்ளையை பத்து சேக்கலாகவும் மதிக்கக்  கடவாய். 

வயதை கரத்தர் நான்கு பிரிவாக பிரிக்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு வயதிற்கு தக்கதாய் ஆத்தும பெலன் உண்டாயிருக்கும்.  அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆத்துமாவில் பெலன் குன்றிப்போவார்கள்.  ஆகையால் அவர்களுக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின் படி அவர்களுக்கு மதிப்பு குறைகிறது.  ஏனென்றால் அவர்கள் வாழ்க்கையில் வயதில் கூடுதல் ஆகும் போது அநேகருக்கு விசுவாசத்தில் பெலன் குறைந்து விடுகிறது.  

அதனால் கர்த்தருடைய வார்த்தை மேலும் 

லேவியராகமம் 27:8-13   

உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைபண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.

ஒருவன் பொருத்தனைபண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.

அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.

அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.

ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.

அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

மேற்க்கூறிய பிரகாரம் நாம் ஆத்மீக ஜீவிதத்தில் தரித்திரனாக இருப்போமானால் ஆசாரியனுக்கு முன்பாக நிற்க கடவன் என்று திருஷ்டாந்தத்தோடு கூறுகிறார்.  நம்முடைய ஆசாரியன் மெல்கிசேதேக்கின்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து,  அப்போது அவரவர் ஆத்மீக வளர்ச்சிக்கு தக்க கர்த்தர் நம்மை,கணக்கிட்டு, நாம் செலுத்தின பொருத்தனையின் பிரகாரம் கர்த்தருக்கு முன்பாக நம் ஆத்துமா ஒப்படைக்கும் போது, அது மிருக ஜீவனானால் (கிறிஸ்துவின் ஜீவன் பெறாதவர்கள்) கர்த்தருக்கென்று பரிசுத்தமாயிருப்பதாக என்று கர்த்தர் சொல்கிறார்.

மேலும் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சிக்கேற்ற பிரகாரம் நம் ஆத்துமாவை கர்த்தருக்காய் பலியிட வேண்டும். அவ்விதம் நம்மை ஒப்புக்கொடுப்போமானால் நம்முடைய வயதிற்கேற்ற பிரகாரம் நம்மை பரிசுத்தப்படுத்துவார்.  இவ்விதம் நம்மளில் யாராவது இளப்பமானதற்கு பதிலாக நலமானதென்றும் நலமானதற்கு பதிலாக இளப்பமானதென்றும்  மாற்றி கர்த்தரிடத்தில் செலுத்தாதபடி காத்துக்கொள்ள வேண்டும். ஆனால் நம்முடைய தப்பிதங்களை நிச்சயமாக நாம் அறிக்கை பண்ணுவோமானால் கர்த்தர் நம்மை பரிசுத்தப்படுத்துவார்.  

இவ்விதமாக பரிசுத்தமாக ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.