தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 2: 44, 45

விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நாம் சகலத்தையும் கர்த்தருக்காய் கொடுத்து பொதுவாய் தேவனுடைய ஜனங்கள் அனுபவிக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கரத்தருக்கென்று முழுமையாக பொருத்தனையோடு ஒப்புப்கொடுத்து தேவனை ஆராதிக்கும் போது நாம் கர்த்தருக்கு உரியவர்கள் ஆகிவிடுகிறோம்.   அப்போது நாம் மீண்டெடுக்கப்பட்ட வயதிலிருந்து கர்த்தர் நம்முடைய ஆவிக்குரிய பலனை கணக்கிட்டு மதிப்பிடுகிறார் என்றும், அதன் பிரகாரம் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார் என்றும் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது என்னவென்றால்  

லேவியராகமம்  27: 11- 34

அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.

ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.

அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.

தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.

ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.

யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.

யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்ற வருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.

வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.

அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,

யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.

ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,

அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச்சேரும்.

உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.

தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.

சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; மீட்கப்படாதிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.

ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.

நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.

தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.

அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.

இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி, கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

இதனை நாம் தியானிக்கையில் நாம் கர்த்தருக்கென்று நம்மை கொடுக்கும் போது, எப்படி ஒப்புக்கொடுப்போமென்றால் நம் ஆத்துமா சுத்தம் இல்லாமல் இருக்கும் போது , உண்மையாக நம்மை அறிக்கை செய்து கொடுக்காவிட்டால், நாம் கொடுத்ததின் படியே கர்த்தர் அதனை கணக்கு வைத்துக்கொள்வார்.  ஆனால் அதனை நாம் மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால் நாம் செலுத்தினதை காட்டிலும், ஐந்தில் ஒருபங்கு பலியை கூட்டிக்கொடுக்க வேண்டும்.  

அதை போல உண்மையாக  தன் வீட்டை கர்த்தருக்கென்றுப் பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொண்டால் ஆசாரியன் அதன் நலத்துக்கும் இளப்பத்திற்கும் தக்கதாக அதனை மதிப்பானாக.  தன் வீட்டைப் பரிசுத்தம் என்று கர்த்தருக்காய் நேர்ந்துக் கொண்டவர்கள், மீண்டும் தங்களுக்கு  அதனை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால் , அதனை மதிக்கும் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கை கூட்டிக்கொடுத்து, அதனை பெற்றுக்கொள்ளலாம்.  

அல்லாமலும் ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கை நேர்ந்து கொண்டால் அதன் மதிப்பு அதன் விதைப்புக்கு தக்கதாக இருக்க வேண்டும்.  ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது சேக்கலாக மதிப்பிட வேண்டும்.  யூபிலி வருஷ முதல் தன் வயலை பரிசுத்தம் என நேர்ந்துக் கொண்டால் அது தன் மதிப்பின்படி  இருக்கவேண்டும்.  ஆனால் யூபிலி வருஷத்திற்கு பின் தன் வயலை பரிசுத்தம் என நேர்ந்துக்கொண்டால் யூபிலி வருஷமட்டுமுள்ள வருஷங்களின் படியே, அதன் திரவியங்களை ஆசாரியன் கணக்குபார்த்து  அதற்கு தக்கது நம்முடைய மதிப்பில் இடப்படுகிறது.  ஆனால் வயலை பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொண்டவன், அதனை தனக்கு மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கை கூட்டிக்கொடுத்து, அதனை தன்னுடையதாக்கி கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார். 

மேலும் வயலை மீட்டுக்கொள்ளாமல், வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது மீட்கப்படாமல் யூபுலி வருஷத்தில் மீட்கப்படும் போது அது சாபத்தீடான வயலாக கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது.  அது ஆசாரியனுக்கு காணியாட்சியாகும்.  ஆனால் ஒருவன் தனக்கு காணியாட்சி வயலாயிராமல், தான் விலைக்கு வாங்கின வயலை கர்த்தருக்கு பரிசுத்தம் என்று நேர்ந்துக் கொண்டால் வயலை பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொண்டவன், அதனை தனக்கு மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கை கூட்டிக்கொடுத்து, அதனை தன்னுடையதாக்கி கொள்ள வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார். 

மேலும் வயலை மீட்டுக்கொள்ளாமல், வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது மீட்கப்படாமல் யூபுலி வருஷத்தில் மீட்கப்படும் போது அது சாபத்தீடான வயலாக கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது.  அது ஆசாரியனுக்கு காணியாட்சியாகும்.  ஆனால் ஒருவன் தனக்கு காணியாட்சி வயலாயிராமல், தான் விலைக்கு வாங்கின வயலை கர்த்தருக்கு பரிசுத்தம் என்று நேர்ந்துக் கொண்டால்  அது யூபிலி வருஷமட்டும், அந்த மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அந்தந்த ஜனத்தோடே கணக்குப் பார்த்து, அந்த மதிப்பை கர்த்தருக்கு பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்த நாளிலே கர்த்தருக்கென்று கொடுக்கக்கடவன்.  

அப்போது யார் கையிலே அதை கொண்டானோ அந்த காணியாட்சிகாரன் வசமாய், அது யூபிலி வருஷத்தில் சேரும்.  அதன் மதிப்புகளெல்லாம் பரிசுத்த ஸ்தலத்து சேக்கல் கணக்காய் இருக்க வேண்டும்.  

தலையீற்றானவைகள் எல்லாம் கர்த்தருடையது,  ஆதலால் தலையீற்றான மிருக ஜீவனை யாரும் கர்த்தருக்கென்று பரிசுத்தம் என்று நேர்ந்துக்கொள்ளக்கூடாது.  அது மாடானாலும், ஆடானாலும்  எல்லாம் கர்த்தருடையது.  சுத்தமில்லாத மிருகத்துனுடைய தலையீற்றால், அதை அதன் மதிப்பின் படி மீட்டுக்கொண்டு, அதனோடே ஐந்தில் ஒரு பங்கை கூட்டிக்கொடுக்க வேண்டும். மீட்காவிட்டால், அதன் மதிப்பின்படி அதனை விற்க வேண்டும்.  

ஆனால் யாராவது தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருக ஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துக்கொண்டால், அதைவிற்கபடவும், மீட்கபடவும் கூடாது. நேர்ந்துக்கொண்டது கர்த்தருக்காக பரிசுத்தமாயிருக்கும்.  நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கபட்டவைகளெல்லாம் மீட்கபடாமல் அதனை கொலை செய்யபட வேண்டும்.  அல்லாமலும் நிலத்தின் வித்திலும், விருட்சத்தின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு பரிசுத்தமானது.  தசம பாகத்தில் எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு கூட்டிக்கொடுக்க கடவன். 

கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்கு பரிசுத்தமானது. அது நல்லதோ, இளப்பமானதோ என்று பார்க்க வேண்டாம். அதை மாற்றவும் வேண்டாம், அதனை மாற்றினால் அந்த இரண்டும் பரிசுத்தமாகும்.  அது மீட்கபடகூடாது என்று கர்த்தர் சொல்கிறார்.  

பிரியமானவர்களே மேற்க்கூறிய கருத்துக்கள் எல்லாமே நம்முடைய ஆத்மீக வாழ்க்கைக்கு தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   என்னவென்றால் முதலில் நம்மை கர்த்தருக்கென்று பரிசுத்தமாக நேரந்துக்கொண்டால், பின்பு நமக்கு உண்டாயிருக்கிற நிலம், காணியாட்சி நிலம்,வீடு, வயல், ஆடு மாடுகள், மிருக ஜீவன்கள், சுத்தமுள்ளது, சுத்தமல்லாத அத்தனையும் கர்த்தருக்கென்று பரிசுத்தமாக்கப்படுகிறது.  யூபிலி வருஷமாகிய பெந்தேகொஸ்தேயின் அனுபவத்தில் எல்லாமே கர்த்தருக்குரியதாக நாம் தேவனை கெம்பீர சத்தமாக ஆர்ப்பரித்து ஆராதிக்கவேண்டும்.

இதனை தியானிக்கும் போது உண்டாக்கப்பட்டது, சிருஷ்டிக்கப்பட்டது எல்லாமே கர்த்தருக்குரியது என்பதை நாம் யாவரும் புரிந்துக்கொண்டு எல்லாவற்றோடும் நம்மை கர்த்தருக்காய் கொடுத்து சமாதானத்தை பெற்றுக்கொள்வோம்.  இவை இஸ்ரவேல் புத்திரருக்கு கர்த்தர் சீனாய் மலையில் மோசேக்கு  விதித்த கட்டளைகள்.  நாம் யாவரும் கைக்கொள்ளும்படி ஒப்புக்கொடுப்போம். 

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.