தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எபிரெயர் 9: 11, 12 

கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும்,

வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய  நாம் கிறிஸ்துவின் கூடாரமாக மாறவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நமக்கு கர்த்தரே நித்திய சுதந்தரம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

ஆனால் அடுத்தபடியாக நாம் தியானிக்க போகிறது

எண்ணாகமம் 2: 1 – 3

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.

யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி அவரவர் தங்கள் தங்கள் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே  தங்கள் கூடாரங்களை போட்டு, ஆசரிப்பு கூடாரத்திற்கு எதிராக பாளயமிறங்கினார்கள்.  இதன் விளக்கங்கள் என்னவென்றால் கர்த்தரை ஆராதிப்பதற்கு, தங்கள் சொந்த நிலத்தில் கூடாரம் போட்டார்கள்.  அப்படி கூடாரம் போட்டு ஆசரிப்பு கூடாரத்திற்கு எதிராக பாளயமிறங்கினார்கள். இதனை கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு சொல்கிறார். நம்முடைய சொந்த நிலமிருந்தால் அதனை கர்த்தருக்கென்று கொடுத்து, நாம் நம்மையே ஆசரிப்பு கூடாரமாக்கி கர்த்தரை ஆராதிக்க வேண்டும்.  

அதிலும்  யூத கோத்திரத்து பாளயத்துக்கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும்  கீழ்ப்புறத்திலே பாளயமிறங்க வேண்டும், அதெனென்றால் நீதியின் சூரியன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.   மேலும் யூதர் என்றால், உள்ளான யூதனே யூதன் என்று எழுதப்பட்டிருக்கிறது.   எப்படியெனில் 

ரோமர் 2:28,29

ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.

உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

இந்த வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை பாவம், மரணம் என்பவற்றிலிருந்து விடுதலையாக்குகிறது.  அவ்விதம் விடுதலை ஆகிறவர்கள் தலையில் நீதியின் சூரியன் உதிப்பார்.  அவர்கள் உள்ளமானது யூதனென்று பெயர்பெறும்.  அவர்கள் கிறிஸ்துவின் நிழலின் கீழில் பாளயமிறங்கி (சபை கூடுதல் ) கர்ததரை ஆராதிப்பார்கள்.  ஆதலால் முதலில் கிறிஸ்துவுக்கு சுதந்திரராக வேண்டும்.  அதன் பின்பு  வேறு கோத்திரங்கள் ஒவ்வொரு கோத்திரமாக ஒவ்வொரு இடத்தில்  பாளயமிறங்கி ஆராதிக்கும்படி கர்த்தர் சொல்கிறார்.  இவ்விதம் யாவரும் செய்யும்போது லேவியர் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை.  

அவ்விதம் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டபடியே அவரவர் தங்கள் தங்கள் கொடிகளின் கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சங்களின் படியே பிரயாணப்பட்டு போனார்கள். என்னவென்றால் இது விசுவாச யாத்திரையில் கானானுக்கு செல்லும்போது சபையாக கர்த்தரை ஸ்தோத்தரித்து மகிமை படுத்தும்போது நம் கிருபை பெருகும் என்பதற்கு கர்த்தர் இஸ்ரவேலரை வைத்து நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால் கர்த்தர் கூடாரம் போட சொன்னது, தேவனுடைய இரகசிய செயல் எல்லாம் கூடாரத்தின் மேல் தான் இருக்கிறது.   கூடாரம் என்பது கிறிஸ்துவின் சரீரத்தைக்காட்டுகிறது.  நாம் கிறிஸ்துவின் சரீரத்துக்குள் மறைந்து வாழ்ந்து கிருபையில் காக்கப்பட வேண்டும் என்பதற்காக கர்த்தர் கூடாரம் போடும்படி இஸ்ரவேலருக்கு கட்டளையிடுகிறார்.  

அல்லாமலும் நாம் தியானிக்கும் போது கூடாரம் மணவாளனையும், ஆசரிப்பு மணவாட்டி  சபையையும் காட்டுகிறது.  அல்லாமலும் பன்னிரண்டு கோத்திரமும்  எவ்விதம் கர்த்தர் ஒன்றுகூடி ஆராதிக்க வைத்தார் என்றால் 

சகரியா 14:1-9  

இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும்.

எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.

கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.

அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.

அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள்.

அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும்.

ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்.

அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும்.

அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

இவற்றை நாம் தியானிக்கும் போது எல்லாரையும் ஒன்று சேர்க்கும்படி கர்த்தராகிய இயேசு அடிப்கபடுகிறார் என்றும் அவருடைய இரத்தம் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறது என்றும்  காட்டுகிறது.  மேலும்  அவர் கூடார பண்டிகையை ஆசரிப்பதை கர்த்தர் கிறிஸ்துவை பற்றி சொல்கிறார், அதைக்குறித்து 

சகரியா 14:16-21    

பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்.

அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை.

மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும்போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும்.

இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை.

அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும்.

அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.

மேற்க்கூறிய வசனங்கள் தியானிக்கும் போது நம்முடைய சரீரம் கிறிஸ்துவின் சரீரமாகிய  கூடாரமாக, கிருபையினால் நிறையப்படடவர்களாக தேவனை ஆராதிக்கும்படியாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.