தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8: 29 

தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு முதற்பேறானவர்கள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் கூடாரமாக மாற வேண்டும் என்றும், கூடார பண்டிகையை ஆசரிக்க வராத ஜனங்களை வாதையானது வாதிக்கும் என்றும் சகரியா தீர்க்கதரிசி புஸ்தகத்தில் தேவனுடைய வார்த்தையானது நமக்குக்கூறுகிறது.  அதென்னவெனில் அந்த கூடாரப்பண்டிகையை கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறது என்னவென்றால், நம்முடைய உள்ளான மனுஷன் தேவ சாயலை  அடைந்து தேவனுடைய அபிஷேகத்தால், கிறிஸ்துவின் வல்லமைப்பெற்று நாம் சபைகூடி கர்த்தரை ஆராதிப்பது தான் கூடார பண்டிகை என்பதை குறித்து தியானித்தோம்.  

அல்லாமலும் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற வேத வாக்கியம் 

எண்ணாகமம் 3:1-4  

சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது:

ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.

நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.

இந்த வசனங்களில் கர்த்தர் சீனாய் மலையில் வைத்து மோசேயோடே பேசின நாளில் மோசே ஆரோன் என்பவர்களின் வம்ச வரலாறு என்னவெனில் ஆரோனுக்கு முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூப், எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் ஆசாரிய ஊழியம் செய்வதற்காக பிரதீஷ்டை பண்ணப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள்.  அதில் நாதாபும், அபியூபும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியை கொண்டு வந்தபோது  செத்தார்கள். இதின் விளக்கங்கள் சில நாட்களுக்கு முன்பு தியானித்தோம்.  அவர்கள் இரண்டு பேருக்கும் பிள்ளைகள் இல்லை.  எலெயாசாரும், இத்தாமாரும் தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.  ஆதலால் கர்த்தர் மோசேயை நோக்கி 

எண்ணாகமம் 3:6-10

நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடைசெய்யும்படி அவர்களை நிறுத்து.

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள்.

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.

ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.

வசனத்தில் கர்த்தர் சொல்வது லேவி கோத்திரத்தாரை சேர்த்து ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் பணிவிடை செய்யும்படி நிறுத்தும்படியாகவும், ஆசரிப்பு கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும்,  சபையின் எல்லா காவலையும்  காத்து வாசஸ்தலத்தின் எல்லா பணிவிடை வேலைகளையும் செய்யக்கடவர்கள்.  இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால் கர்த்தரின் கட்டளைகள் சரியாக கைக்கொண்டு, குறிப்பாக ஆபரணங்களை தங்கள் வாழ்க்கையில் முழுமையாக வெறுத்து தள்ளிவிட்டு பொருளாசையை வெறுத்து, கர்த்தரே தங்கள் சுதந்தரம் என்று முழுமையும் ஒப்புக்கொடுத்தவர்கள் தான் ஆசாரியத்துவ வேலைக்காக கர்த்தர் அழைக்கிறார்.   

அவர்கள் தான் கர்த்தரின் எல்லா காவலையும் காக்கவேண்டும் என்றும், அவர்களிடத்தில் தான் பரிசுத்த ஆவியானவர் இறங்குகிறார் என்றும், அவர்கள் தான் ஆசரிப்புக்கூடாரத்து பணிவிடை வேலைகளாகிய ஆராதனையை நடத்துகிறவர்களாகவும்,  ஆசரிப்பு கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின்  உள்ளத்தை சத்துரு வஞ்சிக்காதபடி சத்தியத்தின்பிரகாரம் நடத்தி அவர்களுடைய இருதயத்தை எல்லா காவலோடும் காத்துக்கொள்ள வேண்டும் என்றும், வாசஸ்தலத்தின் எல்லா பணிவிடைகளை செய்ய கடவர்கள் என்கிறார்.     

ஆதலால் எல்லா லேவியரை ஆரோனிடத்திலும், அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுக்கும்படி சொல்கிறார்.   மேலும் கர்த்தர் சொல்வது அந்நியன் யாரும் ஆசாரியத்துவ ஊழியம் செய்யக்கூடாது.  அப்படி செய்தால் அவர்கள் கொலைச்செய்யபடகடவர்கள்.  எப்படியென்றால் கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்படியாதவர்கள் எல்லோரும் கர்த்தருக்கு முன்பாக அந்நியர்கள் என்பது நமக்கு தெரிகிறது.  அல்லாமலும் கர்த்தர் சொல்வது 

எண்ணாகமம் 3:12,13 

இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.

முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார்.

இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கும் முதற்பேறனைத்திற்கும் பதிலாக நான்லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன், அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள் என்கிறார்.   முதற்பேறானவவைகளெல்லாம், கர்த்தருடையவை என்பதும், கர்த்தர் எகிப்தின் முதற்பேறானதை எல்லாம் சங்கரித்த நாளில் இஸ்ரவேலில் மனிதர் முதல் மிருக ஜீவன்கள் வரையில் முதற்பேறான யாவையும் கர்த்தருக்கென்று  பரிசுத்தப்படுத்தினதினாலே எல்லாம் கர்த்தருடையதாயிற்று. அவ்விதம் செய்து நான் கர்த்தர் என்கிறார்.  

பிரியமானவர்களே மனிதர் முதல் மிருக ஜீவன்கள் என்று எழுதப்பட்டிருப்பது, திருஷ்டாந்தத்திற்காக என்று புரிந்துக் கொள்வோம்.  என்னவென்றால் ஒரு மனிதனுடைய உள்ளம் பல தோற்றங்களை காட்டும்.  அவ்விதம் ஒவ்வொரு மனிதனுடைய உள்ளங்களும் பற்பல தோற்றங்களை காட்டும். அதற்காக தான் கர்த்தர் மேற்கூறியபிரகாரம் சொல்கிறார்.  அதனால் எகிப்திலிருந்து மீட்டு எடுத்தபோது முதற்பேறனைத்தையும் பரிசுத்தமாக்கினது போல, நம்மை கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்டுக்கொண்ட போது, அவரே நம்முடைய உள்ளத்தில் முதற் பேறாக விளங்குகிறார்.  அவ்விதம் நம் உள்ளம் பரிசுத்தமாக்கப்பட்டு, நம் ஆத்துமா கிறிஸ்துவின் வசனமாகிய ஜீவனால் உயிர்ப்பிக்கப்படுகிறது.   அப்போது நாம் கரத்தருடையவர்களாகிறோம். அவரே கர்த்தர் என்பதை நாம் முழு நிச்சயத்தோடு அறிந்துக்கொள்கிறோம். 

அதனால் கர்த்தருடைய வார்த்தை எபேசியர் 1:14 

அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்.

இவ்விதமாக நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.