தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 119: 128

எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய நம்முடைய உள்ளான மனுஷன் சேதப்படாமல் பாதுகாப்பதின் திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை கர்த்தர் கிறிஸ்துவின் மூலம் எப்படி முதற்பேறானவர்களாக மாற்றினார் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அல்லாமலும் இந்த நாளில் நாம் தியானிக்கப் போகிற கருத்துக்கள் என்னவென்றால் 

எண்ணாகமம் 3: 43

ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்று பேராயிருந்தார்கள்.

இவைகள் என்னவெனில் கர்த்தர் மோசேயை நோக்கி சீனாய் வனாந்தரத்தில் வைத்து சொல்வது என்னவென்றால்  லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின் படி ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளை எல்லாம் எண்ணும் படி கட்டளையிடுகிறரர். ஒரு மாதம் என்று சொல்லும் போது கழிந்த நாட்களில் வயது குறித்து தியானித்தோம்.  என்னவெனில் ஆட்டுகுட்டியின் இரத்தத்தால் நாம் மீட்கபடுவது தான் நாம் தேவனாலே பிறந்த தியதி.   அதிலிருந்து ஒரு மாதம் முதல்  அதற்கு மேற்பட்ட வயதை கர்த்தர் எண்ணும்படி சொல்ல, மோசே கர்த்தர் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.  அவ்விதம்  எண்ணும் போது லேவியின் குமாரரின் நாமங்கள் கெர்சோன், கோகாத்,  மெராரி , இவர்கள் தங்கள் வம்சங்களின்படியே எண்ணபட்டவர்கள்  ஏழாயிரத்து ஐந்நூறு பேராயிருந்தார்கள்.  

இதில் கெர்சோனின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும்.  கெர்சோன் புத்திரரின் காவல், வாசஸ்தலமும்,  கூடாரமும், அதின் மூடியும்,  ஆசரிப்புக்கூடார வாசல் மறைவும், வாசஸ்தலத்தண்டையிலும், பலிபீடத்திலும், சுற்றிலும் இருக்கிற பிரகாரத்தின் தொங்குதிரைகளும், பிரகார வாசல் மூடுதிரையும்,  அவைகளின் வேலைகளுக்குரிய கயிறுகளுமே.  இவைகளெல்லாம் கிறிஸ்துவின் சரீரத்திற்கு திருஷ்டாந்தம்.  

அடுத்தது கோகாத்தின் வம்சங்கள் வழியே எண்ணப்பட்டவர்கள் வாசஸ்தலத்தின் தென்புறத்தில் பாளயமிறங்க வேண்டும்.   அவர்களுக்கு கொடுத்த காவலாவது பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும்,  பீடங்களும்,  ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும்,  தொங்குதிரையும் அதினுடைய சகல வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே. இவைகள் ஆராதனைக்குரியப் பொருட்கள், இவற்றை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால்  இவைகள் கிறிஸ்துவின் உபதேசங்களும், கற்பனைகளும், அவருடைய நற்கிரியைகளுமே.  ஆனால் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் லேவியருடைய தலைவனாகிய எலியாசாப்புக்கும்,  எல்சாபானுக்கும் பரிசுத்த ஸ்தலத்தை காவல் காக்கிறவர்களுக்கு விசாரிப்புகாரனாயிருக்க வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.  

அல்லாமலும் மெராரின் வம்ச வழியாய் எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறு பேராயிருந்தார்கள்.மெராரியின் வம்சத்தார் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்க வேண்டும் அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த காவலாவது வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லா பணிமுட்டுகளும், சுற்றுபிரகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே, இவற்றை எதற்கு திருஷ்டாந்த படுத்துகிறாரென்றால், கர்த்தர் எவ்விதத்தில் நம்மை கிறிஸ்துவோடு கூட இணைத்து,  அவரோடு முதற்பேறாக்கும் வரையிலும் நாம் தேவனுடைய காவலுக்குள் இருக்க வேண்டும் என்பதை கர்த்தர் நமக்கு விளக்குகிறார்.  

அல்லாமலும் நாம் எப்போதும் நம் எஜமானாகிய கிறிஸ்துவை நாம் காத்துக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.  அதனால் கர்த்தருடைய வசனம் சொல்கிறது 

நீதிமொழிகள் 27:18   

அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். ஆதலால் நாம் எப்போதும் கர்த்தருடைய கற்பனை, கட்டளைகளை  நியாயங்களை காத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.  

பின்பு மோசேயும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்பு கூடாரமாகிய வாசஸ்தலத்திற்கு முன்பாக சூரியன் உதிக்கும் திசைக்கு கீழ்புறத்தில் கூடாரங்களை போட்டு, கர்த்தருக்குரியவைகளை காவல் காக்கும் படியாகவும், அந்த காவல் என்பது நம்முடைய உள்ளான மனுஷன் பெலனடைந்து சோர்ந்து போகாமல் இருக்கும்படியாக நாம் யாவரும் ஜாக்கிரதையாக இருந்து கர்த்தரை கிறிஸ்துவோடு ஆராதித்து மகிமைபடுத்த வேண்டும் என்பதற்குரிய திருஷ்டாந்தத்தோடு கர்த்தர் நமக்கு விளக்குகிறார்.  இவ்விதம் லேவியரில்  ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்டவர்களில் எண்ணப்பட்டவர்கள் இருபத்தீராயிரம் பேராயிருந்தார்கள்.  

இதனை தியானிக்கிற அன்பானவர்களே நாம் யாவரும் கிறிஸ்துவுக்குள்ளாக கிருபையில் வளர்ந்து பரிசுத்தம் பெற்றுக்கொள்ளும்படி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.