தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 102: 12

கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கடனாளிகளாக இருந்தால் சிறைப் பட்டு போவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையாகிய நம்முடைய உள்ளான மனுஷன் சேதப்படாமல் எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதனை குறித்து சில காரியங்கள் தியானித்தோம்.   

அல்லாமலும் இந்த நாளில் நாம் தியானிக்கபோகிற காரியங்கள் என்னவெனில்  

எண்ணாகமம் 3: 41-50

இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார்.

அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான்.

ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்று பேராயிருந்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப்பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர்.

இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும்,

நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா.

லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார்.

அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில்,

ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி,

மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேல் புத்திரரில்  ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளை எண்ணி அதற்கு அவர்கள் நாமங்களை தொகையிட்டபிறகு, இஸ்ரவேல் புத்திரரில் முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும்,  அவர்களில் மிருக ஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக  லேவியரின் மிருக ஜீவன்களையும் எனக்காக பிரித்தெடு என்கிறார்.    இவ்விதமாக கர்த்தர் சொன்னது போல் மோசே பிரித்தெடுத்து எண்ணியபோது  இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்து மூன்று பேர்.  

பிரியமானவர்களே லேவியரை கர்த்தர் குறிப்பாக  கர்த்தருடைய வேலைக்காக பிரித்தெடுக்கிறது  எதனால் என்று கழிந்த நாட்களில் தியானித்தோம்.  அல்லாமலும்  பின்னும் கர்த்தர் மொசேயிடம்  இஸ்ரவேல் புத்திரரில் உள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருக ஜீவன்களுக்கு பதிலாக லேவியருடைய மிருக ஜீவன்களையும் பிரித்தெடு என்று சொல்கிறார்.  எப்படியென்றால் எல்லா லேவியரையும் கர்த்தருடையவர்களாக்குகிறார்.  அதென்னவெனில் அந்த கோத்திரத்தார், கர்த்தர் மோசே மூலம் அழைத்தப்போது எதையும் பாராமல் கர்த்தரை பின்பற்றியதால் அது அவர்கள் பரம்பரை தலைமுறை தலைமுறையான ஆசீர்வாதமாக்கி, அவர்கள் எந்த சுபாவத்தில் காணப்பட்டாலும் கர்த்தர் அவர்களை எல்லா தலைமுறைகளிலும் அவருக்கென்று பிரித்தெடுக்கிறார்.  

 மேலும் கர்த்தர் மோசேயிடம் சொன்னது போல் மோசே செய்த பிறகு இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில், லேவியருடைய தொகை அதிகமாயிருந்த அந்த இருநூற்று எழுபத்து மூன்று பேரிடத்திலும்  தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாக  பரிசுத்த சேக்கல் கணக்கின் படி கர்த்தருக்கு செலுத்த வேண்டும்.  அந்த சேக்கல் இருபது கேரா.  லேவியருடைய தொகைக்கு  அதிகமானவர்கள் மீடகப்படுவதற்கு உள்ள திரவியத்தை ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் கொடுக்க வேண்டும். அந்த தொகையாவது ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கல்.  இவ்விதமாக கர்த்தருடைய வாக்கின்படி மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் கொடுக்கும் படி கர்த்தர் கட்டளையிடுகிறார்.  

பிரியமானவர்களே கர்த்தருக்கு உரியதை கரத்தருக்கும், இராயனுடையதை இராயனுக்கும் கொடுங்கள் என்று கர்த்தர் சொல்கிறார்.  அதனை குறித்து 

மாற்கு 12:14-17  

அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவையில்லை (அக்கறையில்லை) என்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள்.

அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள்.

அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

அல்லாமலும் தங்கள் ஆஸ்திகளால் இயேசுக்கு ஊழியம் செய்து கொண்டு வந்த அநேக ஸ்திரீகளும் இயேசுவுடனே கூட இருந்தார்கள். 

லூக்கா 8: 1 – 3

பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள்.

அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,

ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள்.

இதிலிருந்து நாம் தெருந்துக்கொள்ள வேண்டுவது என்னவென்றால் நாம் கர்த்தருக்கு கடனாளிகளாக இருக்கக்கூடாது,  அப்படி யாராவது இருப்போமானால் இதனை வாசிக்கும் போது நாம் செலுத்த வேண்டிய கடனை கொடுத்து தீர்க்க வேண்டும்.  அதனை பற்றி தேவ வசனமாவது 

லூக்கா 12:56-59  

மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன?

நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன?

உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.

நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது இப்பிரகாரம் நடக்காவிட்டால் கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் சிறைப்படுத்தி விடுவார்.  அதனால் நாம் யாவரும் நம்முடைய விசுவாச வாழ்க்கையில் வழியில் வைத்தே நாம் தேவனுடைய வார்த்தை  நாம் கேட்கும்  போது  கர்த்தரிடத்தில் ஒப்புரவாகுவோம்.  அப்போது கர்த்தர் நம்மை இரட்சிப்பார். மற்றும்  

1 கொரிந்தியர் 9:13-14

ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?

அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.

ஆதலால் பிரியமானவர்களே கர்த்தருக்குரியதில் நாம் கடன் வைக்கக்கூடாது.  அல்லாமலும் நம்மை மீட்டு எடுத்த தேவனுக்கு கொடுக்கவேண்டிய காணிக்கைக் கட்டாயமாக கொடுத்து தீர்க்க வேண்டும்.  யாவரும் அறிக்கை செய்து ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.