தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 14: 23

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஆசாரியத்துவ பணி மகா பரிசுத்தமானது என்பதை உணர வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரிடத்தில் கடன்பட்டவர்களாக இருக்கக்கூடாது என்றும், அவ்விதம் நாம் கடன் பட்டால் உடனே அதனை தீர்க்க வேண்டும் என்றும், அவ்விதம் நாம் தீர்க்காமல் இருப்போமனால் கர்த்தர் நம்மை சத்துருக்களின் கைக்கு ஒப்புக் கொடுப்பார் என்றும் அதனால் நாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் நாம் வழியில் இருக்கும் போது சீக்கிரத்தில் நல்மனம் பொருந்தும்படியாக கர்த்தர் சொல்கிறார் என்பதனை தியானித்தோம்.  

அல்லாமலும் நாம் அடுத்தபடியாக தியானிப்பது என்னவெனில் 

எண்ணாமம் 4:1-16  

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில்,

ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக.

ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது.

பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி,

அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத்துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது.

அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி,

அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,

பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி,

பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,

பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து,

அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள்துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள்.

பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.

ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.

மேற்கூறிய வசனங்கள் சொல்கிறது என்னவென்றால் கர்த்தர்  மோசேயையும் ஆரோனையும் நோக்கி லேவிப்புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரரின் வம்சங்களில் ஆசரிப்புக் கூடாரத்திலே வேலை செய்யும்  சேனைக்கு உட்பட்ட முப்பது வயது முதல் ஐம்பது வயது வரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி தொகையிட்டு, அவர்களின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது என்கிறார்.  ஆனால் பாளயம் புறப்படும் போது  கர்த்தர் ஆரோனும், அவன் குமாரரும் செய்யவேண்டிய காரியங்கள் கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்றால் நம்முடைய விசுவாச யாத்திரையில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர் நம்மளில் வாசம்பண்ணுவதும், அல்லாமலும் அவருடைய வசனங்களும், கற்பனை, கட்டளை, நியாயப்பிரமாணங்கள் எல்லாம் நம் உள்ளத்தில் நாம் ஏற்றுக்கொண்டவர்களாகவும்,  நம்முடைய உள்ளத்தில்  இருக்கிற பொல்லாத எண்ணங்களை எல்லாம் விட்டு விட்டு, நம் உள்ளமாகிய பலிபீடத்தை  சாம்பலற விளக்கி இரத்தாம்பற துப்பெட்டியை விரிக்க வேண்டுவது என்னவென்றால், நம் உள்ளான சரீரம் கிறிஸ்துவின் அடிக்கப்பட்ட சரீரத்தோடு நாம் ஒப்புரவாகி, பின்பு நம் கர்த்தரை ஆராதிக்கும் ஆராதனைமுறைப்படி நம்முடைய உள்ளத்தை கர்த்தரின் வார்த்தைகளால் நிரப்ப வேண்டும். 

அப்படி நாம் கர்த்தரை ஆராதிப்போமானால் கர்த்தர் நம்முடைய உள்ளத்தை அபிஷேகத்தால் நிரப்பி, சுகந்த தூபவர்க்கமாகிய ஜெப ஆவியினாலும், தினந்தோறும் தேவனுக்கு பலியையும், நாம் செலுத்தவும், கர்த்தர் நம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை விசாரிக்கிறவராகவும் இருக்கிறார். 

அப்படி நாம் இருப்போமானல் நம்முடைய ஆத்துமா சாகாதபடி பாதுகாப்பார்.  இவ்விதமாக கர்த்தரின் சமூகத்தில் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.