தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 10: 38

நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய நசரேயர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய, இஸ்ரவேல் புத்திரரிடத்தில் கர்த்தர் மோசேயை வைத்து சொல்வது என்னவென்றால் நசரேய விரதம் காத்துக்கொள்ளும் விதத்தை கூறுகிறதை நாம் கழிந்த நாளில் தியானித்தோம்.  

ஆனால் இந்த நாளில் அதன் மீதி பகுதியை குறித்து தியானிக்கப்போகிறோம்.  அதென்னவெனில் 

எண்ணாகமம் 6:13-27

நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,

சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்.

அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி,

ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.

அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.

நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,

அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம்.

பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.

இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

விரதம் காக்கும் நாட்கள் நிறைவேறினபின்பு ஆசரிப்புக் கூடார வாசலிலே சர்வாங்க தகனபலியாக  பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவ நிவாரணபலியாக பழுதற்ற ஒரு பெண்ணாட்டு குட்டியையும், சமாதான பலியாக ஒரு ஆட்டுகடாவையும், ஒரு கூடையிலே எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும், கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்த கடவன்.  

அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நதியில் கொண்டு வந்து, அவனுடைய பாவ நிவாரணபலியையும், அவனுடைய சர்வாங்க தகனபலியை செலுத்தி  ஆட்டுகடாவை கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூட கர்த்தருக்கு சமாதான பலியாக செலுத்தி, அவனுடைய போஜனபலியையும், பானபலியையும் படைப்பானாக.  அப்பொழுது நசரேயன் ஆசரிப்பு கூடார வாசலிலே பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையை சிரைத்து பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின் கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன். 

இதன் விளக்கம் என்னவெனில் நம்முடைய வாழ்க்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நசரேயனாக வெளிப்படுகிறார் என்பதற்கு திருஷ்டாந்தபடுத்துகிறார்.  அதென்னவெனில் பழுதற்ற ஒரு வயது ஆட்டு குட்டி, பழுதற்ற ஒரு வருஷத்து பெண்ணாட்டு குட்டி, பழுதற்ற ஒரு வருஷத்து ஆட்டுகடா இவற்றை தேவன் பலியாக செலுத்துவதென்னவெனில், பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவராகிய திரியேக தேவனிடத்தில் நம்பிக்கையாகயிருந்து, அவருடைய சொற்படி நடந்து, நம்முடைய ஆவி ஆத்துமா சரீரம் இவற்றை பூரணமாக பலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதையும், தேவன் விளக்கிக்காட்டுகிறார். 

மேலும் நம்முடைய கர்த்தராகிய இயேசு நசரேயனாக நாசரேத்தூரில் வெளிப்படுமட்டும் கர்த்தர் ஒரு மனுஷன் நசரேய விரதம் காத்து நடந்துக்கொள்ள வேண்டும் எனறும், நசரேய விரதம் நிறைவேறும் நாள் வரையிலும் தலைமயிர் வளர விடவேண்டும் என்றும், அதன்முடிவில் ஆசரிப்புக் கூடார வாசலில்  நசரேயன் தலைமயிரை சிரைத்து சமாதான பலியின் கீழ் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும் என்பதை வாசிக்கிறோம்.  

நசரேய விரதம் முடியும் வரையிலும் அவன் திராட்ரசம் குடிக்கக்கூடாது என்றும், மற்றும்  கர்த்தரால் போடப்பட்ட கட்டளைகளை வாசிக்கிறோம். அதன் பின்பு 

எண்ணாகமம் 6:19-21

நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,

அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம்.

பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.

மேற்க்கூறப்பட்ட வசனங்கள் நசரேயருக்கு முக்கிய ஸ்தானம் என்பதையும், நசரேயனிடத்தில் மட்டும் பரிசுத்தம் விளங்கும் என்பதையும் நமக்கு காட்டும் படியாக கர்த்தருடைய வசனம் சொல்கிறது.

புலம்பல் 4:1-11

ஐயோ! பொன் மங்கி, பசும்பொன் மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே.

ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே.

திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.

குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.

ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.

கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப்பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது.

அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள்.

இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று.

பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள்.

இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின.

கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது.

மேற்க்கூறிய வசனங்கள் தியானிக்கும் போது இவ்வுலகத்திலிருந்துண்டானவர்கள் யாவரும் சீர்கெட்டு கரியிலும் கறுத்துப்போனார்கள்.  அல்லாமலும் அநேக நசரேயர் இருந்தார்கள். அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.  மேலும் கர்த்தருடைய தூதனால் அறிவிக்கப்பட்டு, கர்ப்பந்தரித்து, தாயின் வயிற்றினுள்ளில் வைத்தே எச்சரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட குழந்தை சிம்சோன். அவன் இஸ்ரவேலை பெலிஸ்தரின் கையிலிருந்து விடுவித்து இரட்சிப்பான் என்று தேவனால் தெரிந்தெடுத்தும் அவனும் பெலிஸ்தின் கையினாலே மாண்டுப் போகிறான்.  

இதிலிந்து பாவத்தினால் பிறக்கிற யாரும் நசரேயர் ஆகி விடமுடியாது.  அதனால் கன்னயினிடத்தில் பரிசுத்த ஆவியினால் உற்பத்தியான இயேசுவே நசரேயராக விளங்குகிறார்.  அதனை குறித்து 

மத்தேயு 2:18-23

எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று.

ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு:

நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான்.

அவன் எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான்.

ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,

நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

இவ்விதமாக இயேசுவே நசரேயராக விளங்குகிறார்.  நசரேயர் என்னப்படுவது எல்லாரிலும் மேன்மையானவர்.  நாம் இந்த சத்தியத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.