Feb 12, 2021

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

அப்போஸ்தலர் 2: 46, 47

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபை கட்டாயமாக சபை கூடி வரவேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் புத்திரர் நசரேய விரதம் காக்கவேண்டும் என்றும்,   விரதம் காக்கும் போது கர்த்தர் சில முக்கியமான கட்டளைகள் போட்டதையும், ஆனால் இப்பூமியிலுள்ளவர்கள் நசரேய விரதம் கைக்கொண்டிருந்தாலும் எல்லாரும் வீழ்ந்து போனார்கள் என்றும், ஆனால் கர்த்தர் நசரேயனாகிய கிறிஸ்து உலகத்தில் வெளிப்படுமட்டும்  இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நசரேய விரதத்தை திருஷ்டாந்தபடுத்தியிருக்கிறார் என்பதும், மற்றும் தேவனாகிய கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசி மூலம் உரைத்த காரியம் பரிசுத்த ஆவியால் கன்னிகையில் வெளிப்பட்டு நாசரேத்தூரில் வெளிப்படுகிறது.  அதனால் பாவத்தில் பிறந்த யாரும் நசரேயராக முடியாது என்பதனை நாம் கழிந்த நாளில் தியானித்தோம்.    

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கிற காரியம் என்னவென்றால் 

எண்ணாகமம் 7:1-5

மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,

தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத்தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.

மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம் பண்ணி, அதின் எல்லா பணிமுட்டுகளையும் பலிபீடத்தையும், அதின் எல்லா பணிமுட்டுகளையும் அபிஷேகம் பண்ணி  பரிசுத்தப்படுத்தி முடிந்த  நாளில், என்று எழுதப்பட்டிருப்பது கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.   எப்படியென்றால் வாசஸ்தலம் என்பது 

யோவான்  14: 2-3

என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

இதனை நாம் தியானிக்கையில் வாசஸ்தலம் பரிசுத்த ஆவியானவரை காட்டுகிறது.  அவரைக் குறித்து சத்திய ஆவியனவராகிய தேற்றரவாளன் என்றும் சொல்கிறார்.  அதனைக்குறித்து 

யோவான் 14:15-21

நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.

இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள்.

நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்.

என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார்.

அல்லாமலும் பலிபீடம் என்பதும் நம்முடைய கிறிஸ்து (ஆராதனை ஸ்தலம்).  பலிபீடம் என்பது பலிசெலுத்துகிற இடம். நம்முடைய ஆட்டுகுட்டியானவராகிய கிறிஸ்து பலியிடப்பட்டு, பின்பு உயிர்தெழுந்து  பரிசுத்த ஆவியானவராக நமக்குள்ளே வாசம்பண்ணி , நம்மை பரிசுத்தப்படுத்தி , என்றென்றைக்கும் நம்மளில் தங்கியிருக்கும்படி, சத்திய ஆவியானவராகிய தேற்றரவாளனாக நம்மளில் தோன்றுகிறார்.  

அல்லாமலும் கர்த்தருக்கு காணிக்கை செலுத்த வாசஸ்தலத்துக்கு முன்பாக கொண்டு வந்தார்கள்.   அவர்கள் கொண்டு வந்த காணிக்கையோவெனில் ஆறு கூண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும், இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும் ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்கு செலுத்த வாசஸ்தலத்துக்கு முன்பாக கொண்டு வந்தார்கள். இவையென்னவெனில் நம்மையே கர்த்தருக்கு காணிக்கையாக ஒப்புக்கொடுப்பதும், 

எண்ணாகமம் 7:6-11

அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.

இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.

நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.

கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.

பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.

மேற்கூறிய வசனத்தின் கருத்து என்னவெனில் கிறிஸ்துவின் கீழ் சபைக்கூடி வருதலை காட்டுகிறது.  ஆதலால் பிரியமானவர்களே நாம் யவரும் சபைக்கூடி வருதலை விட்டுவிடக்கூடாது.  சபைக்கூடி வருதலை விட்டு விடுகிறவர்கள் 

எபிரெயர் 10:24-29 

 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,

நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள்.

ஆதலால் நாம் யாவரும் சபை கூடிவரும்படி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.