தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 1: 16

அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையானது கிருபை மேல் கிருபை பெற்றுக் கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிருபையில் பரிபூரணமடைந்து மகிமையான ஆலயமாக விளங்க வேண்டும் என்றும், அப்படி விளங்குவதற்கு நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று, நம்முடைய பிதாவாகிய தேவன் மோசே, ஆரோன் என்பவர்களை வைத்து இஸ்ரவேல் புத்திரரோடு செய்ய சொல்லி திருஷ்டாந்தபடுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆட்டுக்குட்டியாக அடிக்கப்படுவதற்கு ஒப்பாக அநேக திருஷ்டாந்தங்களால் நமக்கு விளக்கி காட்டி, அவரே ஆலயமாகவும், மகிமையடைந்து மறுரூபப்பட்டு மகிமையின் ஆலயமாக நமக்குள்ளாகவும் பிரகாசிக்கிறார் என்று தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிக்க போகிற காரியங்கள் என்னவெனில்  

எண்ணாகமம் 8:1-4   

கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.

இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.

இந்த வசனங்கள் தியானிக்கையில் நாம் மகிமையின் ஆலயமாக மாற வேண்டும் என்பதற்காக கர்த்தர் மோசேயிடம் ஆரோனிடம் சொல்ல சொல்வது விளக்குகளை ஏற்றும் போது ஏழு விளக்குகளும் விளக்கு தண்டிற்கு நேரே எரிய வேண்டும் என்று சொல்கிறார்.   கர்த்தருடைய கட்டளையின் படியே ஆரோன் செய்து விளக்கு தண்டிற்கு நேரே ஒழுங்காக அந்த விளக்குகளை ஏற்றினான். ஏழு குத்து விளக்கு ஏழு சபையை காட்டுகிறது. இந்த குத்து விளக்கின் பொருளை குறித்து 

வெளி 1:1, 2  

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.

இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.

மேலும் பத்மு தீவில் கர்த்தர் யோவானுக்கு தரிசனமாகி 

வெளி 1:11-13 

அது: நான் அல்பாவும் ஒமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது.

அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும்,

அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன்.

அல்லாமலும் கண்ட தரிசனம் 

வெளி 1:20  

என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழுநட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழுபொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

மேற்க்கூறிய வசனங்களை நாம் தியானிக்கையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த பின்பு பத்மு தீவில் தரிசனமாகி மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் என்கிறார். 

இதனை வாசிக்கிற அன்பானவர்களே இயேசு கிறிஸ்து சகல அதிகாரத்தோடு உயிர்தெழுந்தார்.  ஆனால் இன்றைக்கு அவரை பூரணமாக விசுவாசிப்போமானால் நம்முடைய உள்ளத்தில் உயிர்தெழுகிறார்.  ஆனால் மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயித்தெழுகிறார்.  எப்படியெனில் அவருடைய கற்பனை கட்டளை எல்லாம் தவறாமல் கைக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும்.  உயிர்தெழுந்த கிறிஸ்து தான் அந்த ஆலயம்.  அதனை குறித்து கழிந்த நாளில் பரிபூரணத்தை குறித்து நாம் தியானித்தப்பகுதியில் பன்னிரண்டு கற்கள், பன்னிரண்டு வாசல், பன்னிரண்டு கனிகள் என்பவைகளை குறித்து 

வெளி 21:10-14

பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.

அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.

அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.

வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.

நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன.

அல்லாமலும் வெளி 21:18-22  

அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது.

நகரத்து மதிலின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,

ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.

பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது.

அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.

இதனை நாம் ஒவ்வொருவரும் கருத்தில்கொள்ளவேண்டும்.  என்னவென்றால் கிறிஸ்து உயிர்தெழுந்தபிறகு மணவாட்டியானவராக வெளிப்படுகிறார் என்பதும், அவ்விதம் நம் வாழ்க்கையில் மணவாட்டியின் அபிஷேகம் பெறும் போது நாம் அந்த ஆலயமாகவும், அவரோடு வசனங்களால் மகிமையடையும் போது மகிமையின் ஆலயமாகவும் விளங்குகிறோம்.  

அதனை குறித்து வெளி 21:23-24 

நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்

இதன் விளக்கத்திற்காக கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிடம் திருஷ்டந்தபடுத்துகிறார்.  மேலும் கர்த்தர் குத்து விளக்கானது பாதம் முதல் பூக்கள் வரைக்கும் அடிப்பு வேலையாய் செய்யப்பட்டிருந்தது என்று எழுதப்பட்டிருப்பது கிருபையின் மேல் கிருபைப்பெற்று மகிமையான ஆலயமாக விளங்குகிறார்.  இவ்விதமான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.