தேவனுக்கே மகிமையுண்டாவதாக

மல்கியா 3: 17

என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய பணியை எந்த இடத்தில் கர்த்தர் நம்மை அனுப்பினாலும் அதை செய்யும்படி முன்வரவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் மகிமையின் ஆலயமாக விளங்கி கிருபையின் மேல் கிருபை பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  அதெப்படியென்றால் ஆலயமானது பன்னிரண்டு வாசல்களாகவும், பன்னிரண்டு விதமான இரத்தின கற்கள் பதிந்தவர்களாகவும், பன்னிரண்டு வித கனிகளின் கிருபைகள் நிறைந்தவர்களாகவும் நாம் ஆவிக்குரிய வளர்ச்சியில் வளர்ந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்முடைய உள்ளத்திலிருந்து நமக்கு போதித்து, நாம் நடந்துக்கொள்ளவேண்டிய பரிசுத்த பாதையை நமக்கு திருஷ்டாந்தத்தின் மூலமும், இவ்வுலகில் நமக்கு மனுஷ குமாரனாக வந்தும், நமக்கு வாழ்ந்து மாதிரியோடு நடந்து காட்டியும், இவ்வுலகில் மரித்தும், பின்பு உயிர்தெழுந்தும், அவரை அனுப்பிய பிதாவாகிய வார்த்தைகளினால், நம்மிடத்தில் கிரியைகளை நடப்பித்தும், நம்மையும் அவரோடு கூட அவருடைய ஆவியால் உயிர்பித்தும், நமக்கு பாதை காட்டி பரிசுத்த ஆலயத்தை நம்மளில் எழுப்பி, மகிமைப்படுத்தி, அவருடைய கிருபையினால் நிரப்பி, அனுதினம் நம்மை அவருடைய மகிமையினால் நிரப்பி, இவ்விதம் நம்மை அவருடைய கனிகளினால் நிறைத்து ஆத்துமாவுக்கு ஆரோக்கியமடைய செய்கிறவராயிருக்கிறார். மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் மணவாட்டியாகிய பரிசுத்த ஆவியானவராக வெளிப்படுகிறார் என்பதை குறித்தும் தியானித்தோம்.  

அடுத்ததாக நாம் சிந்திக்கிற வேதபகுதி 

எண்ணாகமம் 8: 5- 15 

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.

அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள்.

அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி,

லேவியரை ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.

நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.

லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.

அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி,

லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,

இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.

இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.

கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் புத்திரரிடத்திலிருந்து லேவியரை பிரித்தெடுத்து சுத்திகரிக்கும்படி அவர்கள் மேல் சுத்திகரிக்கும் ஜலத்தை தெளித்து, சர்வாங்க சவரம் பண்ணி தங்கள் வஸ்திரங்களை தோய்த்து , தங்களை சுத்திகரிக்க கடவர்கள் என்றார். நம்முடைய தேவனாகிய கர்த்தர் லேவியரை பிரித்தெடுக்க சொன்னதின் விளக்கம் கழிந்த சில நாட்களுக்கு முன் தியானித்தோம்.  என்னவென்றால் லேவியர் கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிகிறவர்கள், அவர்களிடம் பொருளாசையில்லை, அவர்கள் கர்த்தரின் சுதந்தரம்.  ஆதலால் ஒரு காளையையும்,  அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜன பலியையும் கொண்டு வரவேண்டும் என்றும், பாவ நிவாரணபலியாக வேறொரு காளையை மோசேயிடம் வாங்கும்படி சொல்லி, லேவியரை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன் வரசெய்து,  பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் யாவரும் கூடி வரும்படி செய்து, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்.  

இவ்விதம் தான் சபைக்கூடி தங்களை முழுமையும் அறிக்கைபண்ணி, கர்த்தருடைய பணிக்காக எந்த பொறாமையும் வராமல் சகோதரர் நடுவில் கரத்தர் அவருடைய பணியை செய்யும் படி பிரித்தெடுத்து கர்த்தருடையவர்களாக்குகிறார். 

எப்படியெனில்  லேவியர் கர்த்தருடைய பணியை செய்யும்படி ஆசாரியன், இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாக கர்த்தரின் முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாக நிறுத்தக்கடவன்.  பின்பு லேவியர் தங்கள் கைகளை காளைகளின் தலையின் மேல் வைத்து, பின்பு லேவியரின் பாவ நிவிர்த்திச்செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு ஒன்றை பாவ நிவாரணபலியாகவும், மற்றொன்றை சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி லேவியரை ஆரோனுக்கும், அவன்குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி அவர்களை கர்த்தருக்கென்று அசைவாட்டபடும் காணிக்கையாக்கி, இவ்விதமாக லேவியரை கர்த்தர் மற்ற இஸ்ரவேல் புத்திரரிடத்திலிருந்து பிரித்தெடுத்து கர்த்தருடையவராக்குகிறார்.  

பிரியமானகர்களே  ஆரோனும் அவன் குமாரரும் என்று எழுதப்பட்டிருப்பது, பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம்.  அல்லாமலும் லேவியர் தங்கள் கைகளை காளைகளின் தலையின் மேல் வைப்பது என்றால் கர்த்தரின் பணியை செய்யும் போது கர்த்தரால் பிரித்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆத்துமாக்களின் தலையின் மேல் தங்கள் கைகளை வைக்கமுடியும்.  இவ்விதம் ஜனங்கள் கர்த்தரால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியகாரர்களின் உண்மையான சத்திய உபதேசத்தின் மூலம் தங்களை ஒப்புக்கொடுக்கும் போது கர்த்தராகிய இயேசுவும் நமக்காக வேண்டுதல் செய்கிறவராயிருக்கிறார்.  

அல்லாமலும் கர்த்தர் லேவியரை அசைவாட்டப்படும் காணிக்கையாக்குகிறார் என்றால் கர்த்தர் தம்முடைய ஊழியக்காரர்களை அவருடைய சித்தத்தின்படி செய்து ஒவ்வொரு இடங்களுக்கும் அனுப்பிவிடுகிறார்.  இவ்விதமாக நாமும் அவருடைய சித்தத்தின்படி செய்ய ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.