தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 33: 22

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நமக்கு வாதை வராமல் பாதுகாக்க வேண்டும் - திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கிருபைகளைப் பெற்றுக்கொண்டு கர்த்தர் அனுப்புகிற எந்த இடங்களிலும், சந்தேகங்கள் வராதபடி கர்த்தரின் வேலைகளை செய்ய  நாம் போகிறவர்களாக இருக்க வேண்டும் என்று தியானித்தோம்.   

ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்க போகிற கருத்துகள் என்னவெனில் 

எண்ணாகமம் 8: 17- 26  

இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,

பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,

லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.

அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்.

லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.

அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,

ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.

மேற்க்கூறிய வசனங்களை  நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும், மிருக ஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் கர்த்தருடையது, என்கிற விளக்கம் கழிந்த சில நாட்களுக்கு முன் தியானித்தோம். என்னவென்றால் முதற் பேறானவர் கிறிஸ்து, நம்மையும் அவருடைய இரத்தத்தினால் முதற்பேறாக்குகிறார்.  அதனை குறித்து 

கொலோசெயர் 1:12-20

ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.

அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.

அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்,

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.

இந்த வசனங்களை தியானிக்கும் போது கிறிஸ்து அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.   அவருக்குள்  சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது.  மேலும் பரலோகத்திலும், பூலோகத்திலும்  காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் எல்லாம் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.  அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர்.  எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.  அவரே சபையாகிய சரீரத்திற்கு தலையானவர்.  அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.  சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும்.  அதுபோல் அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி  பூலோகத்திலும், பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர்மூலமாய் தமக்கு ஒப்பரவாக்கிக்கொள்ளவும் அவருக்கு பிரியமாயிற்று.  

அல்லாமலும் அவரே முதற்பேறானவர் என்பதனை குறித்து 

நீதிமொழிகள் 8:22-36  

கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக்கொண்டிருந்தார்.

பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.

ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,

அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.

அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,

உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,

சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,

நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.

ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.

நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள்.

என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.

என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

இதனை நாம் தியானிக்கையிலும் அவரே முதற்பேறானவர் எனபது விளங்குகிறது.   மேலும் 

யோவான் 1:1-5

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.

இதன் கருத்துகளும் அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.  சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.  உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை என்பதை விளக்கிக் காட்டுகிறது.  இவ்விதமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய இரத்தத்தினால் நமக்கு சமாதானத்தை உண்டாக்கி அவரோடு நம்மை ஒப்புரவாக்குவதற்கு அவருக்கு பிரியமாயிற்று. ஆதலால் பிரியமானவர்களே நம்மையும் அவரை போலவே புதிய வானமும், புதிய பூமியினாலும், முதற்பேறுமாக்குகிறார் என்பது விளங்குகிறது.  

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முதற்பேறாக இருக்கிறார் என்பதற்கு திருஷ்டாந்தபடுத்தினது தான் இஸ்ரவேல் புத்திரரின் எல்லா முதற்பேறுக்கும் பதிலாக  லேவியரை கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து, எகிப்து தேசத்தின் முதற்பேறுகளை சங்கரிக்கும் நாளிலே பிரித்தெடுத்தார்.  மற்றும் லேவியர் ஆசரிப்பு கூடாத்தில்  இஸ்ரவேல் புத்திரரின் பணிவிடையை செய்யும்படியும், இஸ்ரவேல் புத்திரருக்காக பாவ நிவிர்த்தி செய்யும் படியாகவும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் வாதையுண்டாகாதபடிக்கும் லேவியரை பிரித்தெடுத்து ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் தத்தமாக கொடுத்தேன் என்கிறார்.  

இது கர்த்தராகிய இயேசு நம்மளில் பரிசுத்த ஸ்தலமாகவும், நாம் அவரிடத்தில் நேராக  விண்ணப்பத்து கொள்ளலாம் என்பதை திருஷ்டாந்தப்படுத்துவதும், நாம் கிறிஸ்துவினிடத்தில் நேரடியாக தொடர்பு வைத்துக்கொண்டால் எந்த வாதையும் நம்மை தொடாது என்பதை திரஷ்டாந்தப்படுத்துகிறார்.  அதனைக்குறித்து 

சங்கீதம் 91:1-11  

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.

அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.

அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும்,

இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.

உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது.

உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.

எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய்.

ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது.

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.

இந்த வசனங்கள் மேற்கூறிய பகுதிகளை விளக்கிக் காட்டுகிறது.    ஆனால் கர்த்தருடைய கட்டளைப்பிரகாரம் லேவியர் கர்த்தரின் பணியை செய்யும் படி பிரவேசித்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் லேவியரை குறித்து கர்ததரின் கட்டளை என்னவென்றால்  இருபத்தைந்து வயது முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் யாவரும் ஆசரிப்பு கூடாரத்தின் பணிவிடை செய்யும் வேலையை செய்யவேண்டும் என்றும்,  ஆனால் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலை செய்யாமல்  திருப்பணி வேலையை விட்டு ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்கு  தங்கள் சகோதரரோடு ஊழியஞ்செய்ய வேண்டுமேயல்லாமல் சேவகம் செய்ய வேண்டியதில்லை.  

இவ்விதம் கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு நமக்கு கட்டளை தருகிறார்.  இந்த கட்டளைக்கு நாம் யாவரும் ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.