தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 143: 10
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் தினமும் நம் கர்த்தர் வெள்ளி பூரிகைகளை ஊதி, பெருந்தொனிக்கேட்க செய்ய வேண்டும். திருஷ்டாந்த விளக்கம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாம் நம்முடைய விசுவாச யாத்திரையில் நாம் சோர்ந்து போகாதபடி, இளைப்படைந்து விழுந்து போகாதபடி, சத்துருவின் கையில் சிறைபட்டு போகாதபடி, கர்த்தர் நமக்கு அநேக கட்டளைகள் நாம் கைக்கொண்டு நடக்கும் படியாகவும், மோசே ஆரோன் என்பவர்களை வைத்தும், இஸ்ரவேல் புத்திரரை வைத்தும், நமக்கு திருஷ்டாந்தபடுத்தி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் விடுதலை ஆக்கப்பட்டு, நம்மை அவருடைய மேகத்தின் மறைவில் வைத்து பாதுகாக்கிறார் என்பதனை திருஷ்டாந்தத்தோடு தியானித்தோம்.
அல்லாமலும் பகலில் மேக ஸ்தம்பத்திலும் இரவில் அக்கினி தூணிலும் இருந்து நம்மை காக்கிறார் என்பது நிச்சயம். அல்லாமலும் நாம் வேத வசனம் தியானிக்குகையில் மேகம் நெடு நாளாய் வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருக்கும் போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் புறப்படாமல் கர்த்தரின் காவலை காத்துக்கொண்டிருப்பார்கள். சில நாள் மத்திரம் வாசஸ்தலத்தின் மேல் மேகம் தங்கியிருக்கும் போது, அவர்கள் பாளயமிறங்கியிருப்பார்கள். அப்படி கர்த்தரின் கட்டளைபடியே புறப்படுவார்கள். ஆனால் சாயங்காலந்தொடங்கி விடியற்காலத்தில் உயர எழும்பும் போது பிரயாணபடுவார்கள். இவ்விதம் பகலாகிலும், இரவாகிலும் மேகம் எழும்பும் போது பிரயாணப்படுவார்கள்.
அப்படியாக கர்த்தரின் கட்டளைபிரகாரம் நாம் விசுவாச வாழ்க்கையை காத்துக்கொள்ளவேண்டும் என்று கர்த்தர் நமக்கு திருஷ்டாந்த விளக்கம் காட்டுகிறார். மேலேக்கூறப்பட்டவைகள் எல்லாம் கிறிஸ்துவின் சரீரமாகிய உள்ளான மனுஷனில் கர்த்தர் செய்கிற காரியங்கள், ஆதலால் நாம் எவ்வித பாடுகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் திடனுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் திடனுள்ளவர்களை தேற்றுகிற தேவன் நம் தேவன்.
எப்படியெனில் சங்கீதம் 27:5-14
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.
என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள்.
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.
மேற்கூறிய வார்த்தைகள் பிரகாரம் நாம் திடமனதாயிருந்து கர்த்தருக்கு காத்திருக்க வேண்டும். அப்படி நாம் காத்து இருப்போமானால்
ஏசாயா 4:6
பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
இவ்விதம் நம்முடைய ஆத்துமாவை கூடாரத்தின் மறைவில் ஒழித்து வைத்து பாது காப்பார். இப்படியாக கர்த்தர் நம்மை அழைத்து எடுத்து பாதுகாக்கிறார் என்பதனை
எண்ணாகமம் 10:1-10
கர்த்தர் மோசேயை நோக்கி:
சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம்.
ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.
மேற்கூறிய வசனங்களை நாம் சிந்திக்கும்போது கர்த்தர் மோசேயை நோக்கி சொல்வது சபையை கூட்டி வரவழைப்பதற்கும், பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளை ஒரே வெள்ளி தகட்டால் செய்யப்படவேண்டும். அதனை ஊதும் போது சபையார் யாவரும் ஆசரிப்புக்கூடார வாசலில் உன்னிடத்தில் வரவேண்டும் என்று சொல்கிறார். இந்த வெள்ளி பூரிகை என்பது தேவனுடைய வசனம். தேவனுடைய வார்த்தையாகிய வசனத்தால் கர்த்தர் நம்மை அவர் பக்கமாக சேர்த்துக்கொள்கிறார். ஒரே வெள்ளி தகட்டால் செய்யப்படவேண்டும் என்பது பிதாவும் கிறிஸ்துவும் ஒன்றாயிருக்கிறார்கள் என்பதற்கு திருஷ்டாந்தம்.
ஆதலால் வசனம் உபதேசிக்கும் போது பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும் இணைந்ததாக இருக்கவேண்டும். எப்படியெனில்
யோவான் 14: 6-11
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
மேற்க்கூறிய வசனங்கள் நமக்கு பிதாவும் குமாரனும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பது விளங்குகிறது. மற்றும்
மத்தேயு 13:52
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.
இவற்றைக்குறித்துள்ள கருத்துக்கள் நாம் நன்றாக தியானிக்கவேண்டும். என்னவென்றால் அநேகர் பழைய ஏற்பாடு வேண்டாம் என்று தள்ளிவிடுகிறார்கள். பிரியமானவர்களே நாம் மிகவும் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். அநேகர் தங்கள் நடக்கையின் விருப்பத்திற்கு இணங்க வசனங்களை மாற்றி, மக்களை பாதாளம், மரணத்திற்கு நேராக நடத்துகிறார்கள். அதனால் நம் எல்லோருடைய மன கண்களும் திறக்க வேண்டும். அப்படி திறந்தால், நம்முடைய கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் போதிக்கிறவராக வெளிப்படுவார். வஞ்சிக்கப்பட்டு போகாதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இன்றைக்கும் அநேகர் விழுவதற்கு காரணம் கள்ள உபதேசம்.
பிரியமானவர்களே அவரவர் ஆத்துமாவை அவரவர் காத்துக்கொள்ள வாஞ்சையுள்ளவர்களாயிருங்கள். ஆகையால்
1யோவான் 2:22-24
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவை உடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான்.
ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
இந்த வார்த்தையானது ஆதி முதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது. இதனைக்குறித்து நமக்கு கர்த்தர் பழைய ஏற்பாட்டில் ஒரே வெள்ளி தகடு என்று எழுதப்பட்டிருக்கிறது. மேலும் பூரிகைகளை ஊதுகிறவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. அதனை குறித்து கர்த்தரின் கருத்துகளை நாளை தியானிப்போம். இவ்விதம் கர்த்தர் பூரிகைகளை ஊதும் போது நாம் தேவ சமூகத்தில் நினைப்பூட்டபட்டு, நம்மை பகைஞனாகிய சத்துருவின் கையினின்று நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
இவ்விதமாக நம்மை கர்த்தர் இரட்சிக்கும்படிக்கு ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.