தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 32: 41
அவர்களுக்கு நன்மை செய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்த தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாச யாத்திரையில் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படிவோமானால் வாக்குதத்தம் தந்த அந்த தேசத்தின் நன்மையை காணும்படி செய்வார்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில் மணவாட்டி சபையாகிய நமக்குள் கர்த்தர் பூரிகைகளை ஊதியும், பூரிகைகளை பெருந்தொனியாய் முழக்கவும் வேண்டும் என்றும் தியானித்தோம். அவ்விதம் கர்த்தர் பூரிகையாகிய தேவ வசனத்தை நமக்குள் ஊதியும், பெருந்தொனி கேட்கவும் செய்தால் மட்டுமே நம்முடைய விசுவாச யாத்திரையில் நாம் விழுந்து போகாதபடி நம்மை காத்துக்கொள்ள முடியும். அவ்விதம் கர்த்தர் நம்மளில் இருந்து இந்த காரியத்தை செய்து, எல்லாவித சத்துருவின் கையிலிருந்து நம்மை விடுவித்து இரட்சிக்கிறார்.
இவ்விதமாக நாம் எல்லா நாளிலும் தேவனுடைய சமூகத்தில் நமக்கு இது ஒரு ஞாபக குறியாக இருக்க வேண்டும். அவ்விதம் நாம் இருப்போமானால் அவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர் என்று சொல்கிறார். இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்கள் செய்யும் போது இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியின் வாசஸ்தலத்திலிருந்து மேகம் உயர எழும்பிற்று அப்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் புறப்பட்டார்கள். அப்போது மேகம் பாரான் வனாந்திரத்தில் தங்கிற்று. இவ்விதம் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வைத்து திருஷ்டாந்தப்படுத்தினது நம்முடைய விசுவாசம் ஜீவிதம், சில நேரத்தில் நாம் மாம்சத்திற்குட்பட்டு போகிறதினால் கர்த்தர் நம்மை சத்துருவின் கையில் அடிமைபடுத்துகிறதினால் நமக்காக கர்ததர் நம்முடைய கண்கள் திறந்து தண்ணீர் துருவு இருக்கிற இடம் நம் கண்களால் காணும் படியாக சில நேரங்களில் கர்த்தர் நம்மை பரீட்சிப்பார்.
அதற்கு ஆதாரம் ஆபிரகாமின் அடிமைபெண் ஆகாரை கர்த்தருடைய சித்தத்தின் படி ஆபிரகாம் ஆகாரை வீட்டை விட்டு துரத்தியபோது முதலில் அவள் அலைந்து திரிந்த இடம் பெயர்செபா, அந்த இடத்தில் வைத்து தண்ணீர் செலவழிந்து போன போது, குழந்தைக்கு தண்ணீர் இல்லை என்று அழுதபோது கர்த்தர் அவளோடு பேசுகிறார். அப்போது அந்த இடத்தில் வைத்து அவள் கண்கள் திறக்கப்பட்டு தண்ணீர் துரவை காண்கிறாள். அந்த இடம் பாரான் வனாந்தரம். அப்படியாக இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் புறப்பட்ட போது மேகமானது பாரான் வனாந்தரத்தில் தங்கியது.
இவ்விதம் நம்முடைய விசுவாச வாழ்க்கையிலும் நம்மை நன்மைக்கு நேராக நடத்தும் போது சில சீர்திருத்துதல் நடக்கும். அப்போது நாம் சோர்ந்து போகாமல் காத்துக்கொள்ள வேண்டும். ஆனால் கர்த்தர் மோசேயிடம் கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் தங்கள் கொடிகளோடு நடத்தி வருகிறதை பார்க்கிறோம். நாம்
எண்ணாகமம் 10:11-36
இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.
பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.
அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.
அப்பொழுது மோசே: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.
நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான்.
அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.
அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.
வரையிலும் நாம் வாசிக்கும் போது விளங்குகிறது. மேலும் மோசே தன் மாமனாகிய ரெகுவேல் மீதியானனுடைய குமாரனாகிய ஓபாவை நோக்கி, கர்த்தர் உங்களுக்கு தருவேன் என்று வாக்களித்திருக்கிற தேசத்திற்கு நாங்கள் போகிறோம், நீயும் எங்களோடே கூட வா, உனக்கு நன்மை செய்வோம். கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்கு தத்தம் பண்ணிருக்கிறார் என்று மோசே சொல்லும்போது அவன் நான் உங்களோடுக்கூட வரக்கூடாது. என் இனத்தாரிடத்திற்கு போக வேண்டும் என்கிறார்.
இவ்விதமாக அநேகர் தங்கள் சொந்த ஜனத்தை விட்டு வராமல் கர்த்தருடைய வார்த்தையை புறக்கணிக்கிறார்கள். ஆனால் மோசே அங்கு வருந்தி அழைக்கிறதை பார்க்கிறோம். அவர்கள் அங்கிருந்து பர்வதத்தை விட்டு மூன்று நாள் பிரயாணம் கழித்து வரும் போது கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் இடம் தேடி காட்டும்படி அவர்களுக்கு முன்பாக சென்றது.
இவ்விதம் கர்த்தரின் சமூகம் நமக்கு முன்பாக சென்று சத்துருக்களையெல்லாம் சிதறடிக்கும். நம்மை பகைக்கிறவர்கள் எல்லாம் நமக்கு முன்பாக ஓடிப்போவார்கள். இவ்விதமாக கர்த்தர் நம் பக்கமாக திரும்புவார். யாவரும் ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.