தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 107:13
தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக கலகம் பண்ணவோ, அசட்டைப்பண்ணவோ கூடாது
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அனுதினமும் கர்த்தரின் சந்நிதானத்தில் சாயங்காலத்தில் கர்த்தரை ஆராதிக்கும் போது கர்த்தர் நம் உள்ளத்தில் பனியாகிய உபதேசம் பொழிந்து அப்பமாகிய தேவனுடைய மன்னாவை நமக்கு தருகிறார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.
ஆனால் இந்த நாளில் நாம் தியானிப்பது என்றவென்றால்
எண்ணாகமம் 11:10-20
அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது.
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன?
இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?
இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சிகொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.
இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது.
உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய்.
அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன் மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார்.
நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல,
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
மேற்கூறிய வார்த்தைகள் என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த போது கர்த்தர் அவர்களை அனுதினம் மன்னாவினால் போஷித்தும், காத்தும் நடத்தி வரும் போது அவர்கள் இறைச்சி புசிக்க கிடைக்கவில்லை என்று அழுகிறார்கள். அதனை மோசே கேட்டான். கர்த்தருக்கு கடும் கோபமூண்டது. மோசேயின் பார்வைக்கு அது பொல்லாப்பாயிருந்தது.
அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் இந்த ஜனங்களுடைய பாரத்தை என்மேல் சுமத்தினதினால் உமது அடியானுக்கு உபத்திரவம் வரபண்ணினதென்ன? உமது கண்களில் எனக்கு கிருபை கிடையாதே போனதென்ன? மேலும் மோசே சொல்வது தன்னுடைய உள்ளத்தில் உள்ள வருத்தத்தை எல்லாம் சொல்லுகிறான், என்னவென்றால் இவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டு கொடுத்த தேசத்தில் இவர்களை முலையுண்கிற பாலகனை தகப்பன் சுமந்து கொண்டு போவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டு போ என்று என்னோடே சொல்ல, நான் இவர்களை கர்ப்பந்தரித்தேனோ? இவர்களை எல்லாம் பெற்றது நானோ?
இவர்கள் எல்லோருக்கும் இறைச்சிக்கொடுக்க அவை எங்கே இருந்து வரும் என்று மோசே கர்த்தரிடத்தில் கேட்க, இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனால் தாங்கிக்கொள்வது எனக்கு மிஞ்சின பாரமாயிருக்கிறது, என்று தன் வருத்தத்தை கர்த்தரிடத்தில் சொல்லி, இந்த உபத்திரவத்தை நான் பார்க்காதபடி என்னை கொன்று போடும்படி வேண்டிக்கொள்ளும் போது, கர்த்தர் மோசேயிடம் இஸ்ரவேல் தலைவர்களில் எழுபது மூப்பர்களை கூட்டிக்கொண்டு என்னிடத்தில் ஆசரிப்பு கூடாரத்தில் வந்து நிற்கும்படி செய் என்று சொல்லுகிறார்.
அதென்னவெனில் மோசே ஒருவனாய் ஜனங்களின் பாரத்தை சுமக்காமல் , அவர்களும் அந்த பாரத்தை சுமக்கும்படியாக கர்த்தர் அவருடைய ஆவியை அவர்கள் மேல் வைப்பேன் என்கிறார். பின்பு கர்த்தர் மோசேயிடம் நாளைக்காக ஜனங்களை பரிசுத்தபடுத்துங்கள். கர்த்தர் உங்களுக்கு இறைச்சி சாப்பிட கொடுப்பவர் என்றும், எகிப்திலே நாங்கள் செளக்கியமாயிருந்தோம் என்று கர்த்தரின் செவிகள் கேட்க அழுததினால் உங்களுக்கு கர்த்தர் சாப்பிடும்படி இறைச்சி கொடுப்பார், நீங்கள் ஒரு நாள், இரண்டு நாள் ஐந்து நாள், பத்து நாள், இருபது நாள், மாத்திரமல்ல ஒரு மாதம்மட்டும் புசிப்பீர்கள். அல்லாமலும் உங்கள் மூக்காலே தெவிட்டி போகும்மட்டும் புசிப்பீர்கள். உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி நாங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
இதனை நாம் தியானிக்கும்போது கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை கடுமையாக நியாயந்தீர்க்க போகிறார் என்று தெரிகிறது. ஏனென்றால் உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டை பண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று சொன்ன காரியம் கர்த்தர் கடும் கோபம் வருவதற்கான வார்த்தை வாயிலிருந்து புறப்பட்டதை பார்க்கிறோம். அதனால் தேவனுடைய வார்த்தையானது
சங்கீதம் 107:10-12
தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள்.
இந்த வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது நாம் கர்த்தர் அவருடைய வார்த்தையினால் நம்மை போஷிக்கும் போது, எந்த காரணத்தை முன்னிட்டும் நாம் தேவனுக்கு விரோதமாக கலகம் பண்ணவோ, அசட்டைபணணவோக்கூடாது என்பதை எல்லாரும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
அவ்விதம் நம் வாழ்க்கையில் ஏதாவது தவறுகள் காணப்படுகிறது என்று உணர்வு வருமானால், இப்போதே நம் பாவம், அக்கிரமம், மீறுதல் இவற்றிற்காக அறிக்கைச் செய்து ஒப்புக்கொடுப்போம். அப்போது கர்த்தர் நம்மை இக்கட்டிலிருந்து நீங்கலாக்கி இரட்சிப்பார்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.