தேவனுக்கே மகிமையுண்டாவதாக
லூக்கா 12:23
ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் அப்பம் புசிக்க வாஞ்சையுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதன் திருஷ்டாந்தம்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக கலகம் பண்ணவோ, அசட்டைப்பண்ணவோ கூடாது என்று தியானித்தோம். அவ்விதம் கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினால், கர்த்தர் கோபத்தோடு நியாயந்தீர்ப்பார் என்பதையும், அவ்விதம் இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் நியாயந்தீர்த்தார் என்பதை குறித்து
எண்ணாகமம் 11:20-35 வசனங்களில் வாசிக்க முடிகிறது
ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள், உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார்.
அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒருமாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே.
ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.
அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.
கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.
அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத், மற்றவன்பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும் மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.
உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.
அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.
பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.
அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது.
அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள்.
தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.
அதெப்படியெனில் கர்த்தர் மன்னாவினால் இஸ்ரவேல் ஜனங்களை போஷித்து கானானுக்கு நேராக நடத்தி வரும் போது, வழியில் வைத்து அவர்கள் உள்ளமானது இச்சைக் கொண்டதினால் அவர்கள் புசிக்க இறைச்சி கிடைக்கவில்லை என்று கர்த்தருக்கு விரோதமாக முறையிட்டு அழுததினால் கர்த்தருக்கு அவர்கள் மேல் கோபமூண்டதினால், கர்த்தர் மோசேயிடம் நாளை ஜனங்களை பரிசுத்தபடுத்து என்றும், அவர்கள் ஒரு நாள் இரண்டு நாள், ஐந்து நாள், பத்து நாள், இருபது நாள் மாத்திரமல்ல ஒரு மாதம் வரைக்கும் புசிப்பீர்கள். அவர்கள் மூக்காலே தெவிட்டி போகும் மட்டும் புசிப்பீர்கள், காரணம் என்னவென்றால் கர்த்தரை அசட்டைப்பண்ணி , எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று கர்த்தருக்கு முன்பாக அழுதீர்கள் என்று சொல்ல சொன்னார்.
ஆனால் மோசே கர்த்தரிடம் ஆறு லட்சம் காலாட்களுக்கு எப்படி இறைச்சி புசிக்கக்கொடுப்பேன் என்று சொல்லி ஆடுமாடுகளை அடித்தாலும், சமுத்திரத்து மச்சங்களை சேர்த்தாலும் அவர்களுக்கு போதுமா என்றபோது கர்ததர் மோசேயிடம் கர்த்தரின் கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ, நடவாதோ நீ இப்பொழுது பார்ப்பாய் எனறார். அப்பொழுது மோசே மூப்பர்களாகிய எழுபது பேரை கூடாரத்தை சுற்றி நிறுத்தவும் கர்த்தர் மேகத்தில் இறங்கி அவனோடு பேசி அவன் மேல் இருந்த ஆவியை அவர்கள் எழுபது பேரின் மேலும் வைத்தார். இந்த காரியமானது மோசே ஒருவனால் இஸ்ரவேல் புத்திரரின் பாரத்தை தாங்க முடியாமல் அவர்கள் அவனுக்கு கொடுத்த உபத்திரவத்தின் காரணமாக கர்த்தர் இவ்விதம் செய்தார்.
இப்படியாக அந்த ஆவி அவர்கள் மேல் வந்து தங்கின மாத்திரத்தில் அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லி ஓய்ந்தார்கள். அதில் இரண்டு பேர் பாளயத்தில் இருந்து விட்டார்கள். அவர்கள் யாரெனில் எல்தாத், மேதாத்தும் அவர்கள் மேலும் அந்த ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அப்போது ஒரு வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழிய காரனும் நூனின் குமாரனாகிய யோசுவா என்பவன் மோசேயினிடத்தில் ஓடி வந்து பாளயத்தில் தீர்க்த்தரிசனம் சொன்ன எல்தாத், மேதாத் என்பவர்களை குறித்து அறிவித்து, என் ஆண்டவனாகிய மோசேயே அவர்களை தடை பண்ணும் என்று சொல்ல, மோசே நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ என்று சொல்லி கர்த்தருடைய ஜனங்கள் எல்லாம் தீர்க்கதரிசனம் சொல்லதக்கதாக கர்த்தருடைய ஆவி எல்லார் மேலும் இறங்கினால் நலமாயிருக்குமே என்றான்.
பிரியமானவர்களே இதலிருந்து நாம் முக்கியமாக தெரிந்துக்கொள்ளவேண்டிய காரியம் என்னவென்றால் நாம் ஒருவருக்கொருவர் பொறாமைக் கொள்ளக்கூடாது. மேலும் நாம் பார்க்கும் போது கர்த்தர் மோசேயை கொண்டு ஆறு லட்சம் பேரை நடத்தி வரும்போது, அவனுள்ள ஆவியை எழுபது மூப்பர்கள் மேலும் வைக்கிறார். ஆனால் யோசுவா கேட்டபோது, மோசே கர்த்தரின் ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனம் சொல்வது நல்லதுதானே என்றுக்கேட்க வேண்டுமானால் அவனிடத்தில் தயாள குணம், இருந்தது மாத்திரமல்ல, பொறாமையில்லாதிருந்தது.
ஆனால் நம்மை நாமே சிந்தித்து பார்ப்போமானால் நமக்கு கிடைத்தது, எவ்வளவு நெருக்கமும், உபத்திரம் வந்தாலும் மற்றவர்களுக்கு கிடைப்பதை விரும்ப மாட்டோம். காரணம் நம்மிடம் இரட்சிப்பு இல்லை. மேலும் பழைய ஏற்பாடு வாசிக்கும் போது எல்லாருக்கும் கர்த்தருடைய ஆவி கொடுக்கப்படவில்லை. மோசே அவ்விதமாக கூறுவதின் காரணம் தேவனுடைய ஜனங்கள் எல்லாருக்கும் அது கொடுக்கபடும் என்பதன் திருஷ்டாந்தம்.
அப்படியாக மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்தில் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்து, பாளயத்திலும் பாளயத்தை சுற்றிலும், இந்த பக்கமும், அந்த பக்கமும் ஒரு மையில் தூரமும், தரையின் மேல் இரண்டு முழ உயரமும் விழுந்துக்கிடக்க செய்தது. அப்பொழுது ஜனங்கள் பகல் முழுவதும், இரவு முழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளை சேர்த்தார்கள். கொஞ்சமாய் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான், அதனை பாளயத்தை சுற்றிலும் குவித்து வைத்தார்கள். ஆனால் காடைகளை புசித்தவர்கள் தங்கள் பற்கள் இடையே இருக்கும் இறைச்சியை மென்று தின்னும் முன்பே கர்த்தரின் கோபம் ஜனங்கள் மேல் இறங்கி, ஜனங்களை பெரிய வாதையினால் வாதித்தார். இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம் பண்ணினதினால் அந்த இடம் கிப்ரோத் அத்தாவா என்று பெயரிட்டான்.
பிரியமானவர்களே நம்மளில் எத்தனை பேர் இவ்விதமாக உலக ஆகாரங்களுக்காக கவலைப்பட்டு கலங்குகிறோம். கர்த்தருடைய வார்த்தையை அசட்டைப்பண்ணிக்கொண்டு இறைச்சி சாப்பாட்டுக்காக பொழுதுப்போக்கினோம். அவ்விதமான ஆத்துமாவை வாதையினால் வாதித்துக் கர்த்தர் கொல்லுகிறார் என்பதை நாம் சிந்தித்துக்கொண்டு கர்த்தரின் அப்பத்தை ருசித்தவர்களாக இருக்கும்படியாக, நம்முடைய குறைகளை கர்த்தரிடத்தில் அறிக்கைச்செய்து ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.