தேவனுக்கே மகிமையுண்டாவதாக
கொலோசெயர் 3: 12, 13
ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் சபையாம் சகோதரர்களுக்கு விரோதமாக எழும்பாமல் பாதுகாக்க வேண்டும்
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் அப்பம் புசிப்பதில் வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவ்விதம் இல்லாமல் கர்த்தரின் வார்த்தையை அசட்டை பண்ணின இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த நியாயத்தீர்ப்பை குறித்து தியானித்தோம்.
ஆனால் இந்த நாளில் நாம் தியானிக்கிற கர்த்தருடைய வார்த்தைகள் என்னவெனில்
எண்ணாகமம் 11: 34,35
இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.
பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.
மேற்க்கூறிய வசனங்கள் என்னவெனில் இச்சித்த ஜனங்களை கர்த்தர் அழித்தார். அவ்விதம் அழிக்கப்பட்ட ஜனங்களை அடக்கம்பண்ணின இடம் கிப்ரோத் அத்தாவா. பின்பு ஜனங்கள் கிப்ரோத் அத்தாவை விட்டு, ஆஸ்ரோத்திற்கு பிரயாணம்பண்ணி, அங்கு தங்கினார்கள். மேலும்
எண்ணாகமம் 12:1-16
எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி:
கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்.
மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.
கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.
என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்.
நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார்.
கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார்.
மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான்.
அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும்.
தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான்.
அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான்.
கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார்.
அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள்.
பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
வசனங்களின் விளக்கங்கள் என்னவென்றால், இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி சென்ற மோசே எத்தியோப்பியா ஸ்திரீயை விவாகம் பண்ணியிருந்தபடியால் மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம் பண்ணின எத்தியோப்பியா ஸ்திரீயினிமித்தம் மோசேக்கு விரோதமாக பேசினதை கர்த்தர் கேட்டார். அவர்கள் பேசினது என்னவென்றால் கர்த்தர் மோசேயை கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டு பேசினதில்லையோ என்றார்கள். மோசே பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்ததினால், சடுதியில் கர்த்தர் மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் நோக்கி, மூன்று பேரும் ஆசரிப்பக்கூடாரத்தில் புறப்பட்டு வாருங்கள் என்ற போது , மூன்று பேரும் அங்கு வர கர்த்தர் மேகத்தூணில் இறங்கி கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டபோது, அவர்கள் இருவரும் அங்கே போனார்கள்.
அப்போது கர்த்தர் சொல்வது உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால் நான் அவனிடத்தில் தரிசனத்திலோ, சொப்பனத்திலோ அவனோடு பேசுவேன். ஆனால் என் தாசனாகிய மோசே அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவனாயிருக்கிறான். நான் அவனிடம் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும், பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன் என்கிறார். இவ்விதமாக அவன் கர்த்தரின் சாயலை காண்கிறான். இப்படிபட்டதான மோசேக்கு விரோதமாக பேசுவதற்கு உங்களுக்கு பயமில்லாமற் போனதென்ன என்கிறார்.
இப்படியிருக்க கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் மூண்டது,அவர் போய் விட்டார். மேகம் கூடாரத்தை விட்டு நீங்கி விட்டது. அப்போது மிரியாம் உறைந்த மழையின் வெண்மை போன்ற குஷ்டரோகியானாள். அவள் குஷ்டரோகியாயிருக்கிறதை ஆரோன் கண்டு, மொசேயை நோக்கி, ஆ என் ஆண்டவனே நாங்கள் புத்தியீனமாய் செய்த இந்த பாவத்தை எங்கள் மேல் சுமத்தாதிரும் என்று வேண்டிக்கொண்டான்.
பிரியமானவர்களே இதிலிருந்து நமக்கு தெரிய வருகிறது என்னவென்றால், கர்த்தரால் தெரிந்தெடுத்து கர்த்தருடைய வேலையை உண்மையும், நேர்மையுமாய் செய்கிறவர்ளை நாம் எவ்விதத்திலும் குற்றம்படுத்த நம்மளில் யாருக்கும் உரிமை இல்லை என்பதும், அவ்விதம் குற்ற்படுத்தி பேசினால் நாம் பலமாக தண்டிக்கபடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். அல்லாமலும்
சங்கீதம் 50:20-22 வசனங்கள் கூறுகிறதை நாம் தியானிக்கவேண்டும்.
நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவுகொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
குறிப்பாக நாம் சபையாம் சகோதரருக்கு விரோதமாக நாம் எந்த காரியத்தை குறித்தும் குற்றப்படுத்தி பேசினால் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறோம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனை கடிந்துக் கொண்டு நம்முடைய கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். தேவனை மறக்கிறவர்களே இதனை சிந்தித்து கொண்டு மனந்திரும்பும்படியாக சொல்கிறார். இல்லாவிட்டால் உங்களை பீறிப்போடுவேன் உங்களை யாரும் விடுவிப்பதில்லை என்கிறார். உங்களை தொடுகிறவன் அவருடைய கண்மணியை தொடுகிறான் என்றும், அவர்களை குறித்து
சகரியா 2: 8
பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் அவர்களை தண்டிக்கிறார். இவ்விதமாக மோசேயை குறித்து விரோதமாக பேசினதினால் மீரியாம் குஷ்டரோகமாக இருந்ததால் மோசேயை குறித்து விரோதமாக பேசினதினால் மீரியாம் குஷ்டரோகமாக இருந்ததால் ஆரோன் மோசேயினிடத்தில் தன் தாயின் கரப்பத்தில் பாதி மாம்சம் அழுகி செத்து விழுந்த பிள்ளையைப்போல் ஆகாதிருப்பாளாக என்றான். அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் அவளை குணமாக்கும் என்று கெஞ்சினான். அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில் அவள் தகப்பன் முகத்தில் காறி துப்பினதுண்டானால் வெட்கபடவேண்டாமோ, என்று சொல்லி ஏழு நாள் பாளயத்துக்கு புறம்பே விலக்கப்பட்டிருந்து பின்பு சேர்த்துக்கொள்ளபடகடவள் என்றார். அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்கு புறம்பே விலக்கப்பட்டிருந்து பின்பு சேர்த்துக்கொள்ளபடுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.
பிரியமானவர்களே முந்தின பகுதிகளை நாம் வாசிக்கும் போது தெரிந்து கொள்வது, நம்முடைய விசுவாச பயணம் மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்களாக காணப்படவேண்டும். யாரைக்குறித்தும் நாம் குற்றம் சொல்வோமானால் நம் உள்ளான மனுஷனில் குஷ்டரோகம் உண்டாகும் என்பதன் திருஷ்டாந்தத்தை தேவன் மிரியாமை வைத்து காட்டுகிறார். அதுமட்டுமல்ல ஆரோனும் மிரியாமும் மோசேக்கு விரோதமாக பேசினார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் மிரியாமுக்கோ குஷ்டரோகம் வந்தது, ஆனால் ஆரோனுக்கோ அது மிகவும் வருத்தமாகி விட்டது. மட்டுமல்ல சபை பிரயாணம் புறப்படமுடியாமல் இருந்தது.
அல்லாமலும் நாம் மற்றவர்களை குற்றம் சொல்வோமானால் கர்த்தர் நம் முகத்தில் காறி துப்பி, நம்முடைய விசுவாச யாத்திரையை முடக்குகிறார். அல்லாமலும் அந்த பாவத்திலிருந்து கர்த்தர் நம்மை விடுதலை செய்ய வேண்டுமானால், நாம் யாரை குறித்து குற்றம் பேசினோமோ, அவர்கள் கர்த்தரிடத்தில் கெஞ்சி கேட்டால் மாத்திரமே நாம் அந்த பாவத்திலிருந்து விடுதலை ஆக முடியும்.
இதனை தியானிக்கிற அன்பானவர்களே நம்மில் உள்ள குற்றங்களை அறிக்கை செய்ய வேண்டிய விதத்தில் செய்து நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போம்.
கர்த்தர் ஆசீர்வதிப்பார். கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.