தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 26:1  

கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் உத்தம இருதயத்தோடு தேவனை பின்பற்றினால், நமக்கு தேவ பெலன் குறையாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், ஞானஸ்நானத்தினால் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம் என்று திருஷ்டந்தத்தோடு தியனித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 14: 6-15 

அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.

தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன்.

ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.

அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்.

இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன்.

மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.

ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான்.

அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான்.

ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று.

முன்னே எபிரோனுக்குக் கீரியாத் அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

 மேற்க்கூறப்பட்ட வசனங்களில் யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.  அப்போது கேனானியனாகிய எப்புன்னேயின் குமாரனாகிய காலேப், யோசுவாவை நோக்கி; கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மை குறித்தும், தேவனுடைய மனுஷனாகிய மோசேயிடம் சொன்னவைகளை நீர் அறிவீர். ஆனால் தேசத்தை வேவுப்பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே, காதேஸ்பர்னேயாவிலிருந்து என்னை அனுப்புகிற போது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளவைகளின் படியே நான் அவருக்கு  மறுசெய்தி கொண்டு வந்தேன்.  ஆனாலும் என்னோடேக்கூட வந்த என் சகோதரர்களின் இருதயத்தை கரையப்பண்ணினார்கள்.  நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினேன். 

ஆனால் கர்த்தரின் தாசனாகிய மோசே சொன்னது என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினபடியால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும், உனக்கு பின் வரும் உன் பிள்ளைகளுக்கும் என்றன்றைக்கும் சுதந்தரமாக இருக்கக்கடவது என்று ஆணையிட்டார். அதுபோல கரத்தர் என்னை உயிரோடே காத்தார்.  இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில் இந்த வார்த்தையை கர்த்தர் மோசேயோடே சொல்லி, இப்போது நாற்ப்பத்தைந்து வருஷமாயிற்று;  இப்போது நான் எண்பத்தைந்து  வயதுள்ளவனாயிருக்கிறேன்.  ஆனால் மோசே என்னை அனுப்பின நாளில் இருந்த பெலன், இப்போதும் எனக்கு இருக்கிறது.  ஆனால் இன்று வரையிலும் என் பெலன் குறைந்துப்போகவில்லை.  யுத்தத்துக்கு போக்கும், வரத்துமாக இருப்பதற்கு அந்த பெலன் இன்னும் எனக்கு இருக்கிறது.  ஆதலால் கர்த்தர் அந்த நாளில் சொன்ன மலை நாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பட்டணம் உண்டென்றும் கேள்விப்பட்டோம்.  ஆனால் கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களை துரத்துவேன் என்றார்.  அப்போது யோசுவா காலேபை ஆசீர்வதித்து எபிரோனை அவனுக்கு சுதந்தரமாக கொடுத்தான்.   

பிரியமானவர்களே மேலே எழுதப்பட்டவைகளின் விளக்கம் என்னவெனில் காலேப், கில்காலில் வந்ததை கர்த்தர் இரட்சிப்புக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவென்றால் இஸ்ரவேலரின் நிந்தைகள் நீக்கப்பட்ட இடம் கில்கால்.  அது இஸ்ரவேல் சபை தங்கள் விசுவாச யாத்திரையில், எகிப்தின் அடிமையிலிருந்து விடுதலையாகி, கர்த்தர் அவர்களை தன் தாசனால் மீட்டு எடுத்து யோர்தானை கடந்து வரும் போது, விருத்தசேதனம் இல்லாதவர்களும், வழியில்  வனாந்தரத்தில் பிறந்த தங்கள் பிள்ளைகள் விருத்த சேதனம் இல்லாமல் இருந்ததால் கர்த்தரின் சொல்படி அவர்களுக்கு விருத்தசேதனம் செய்தான்.  

பின்பு அவர்கள் குணமாகும் மட்டும் தங்கள் தங்கள் பாளயத்தில் தரித்திருந்தார்கள்.  அப்போழுது கர்த்தர் அந்த இடத்தில் வைத்து யோசுவாவிடம் எகிப்தின்  நிந்தையை உங்கள் நடுவிலிருந்து நீக்கிப்போட்டதினால் அந்த ஸ்தலம் கில்கால் என்று கர்த்தர் சொல்கிறார்.  ஆதலால் நாம் பாவத்தின் அடிமையிலிருந்து விடுதலையாக்கப்பட்டு, கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, அவரோடு நாம் உடன்படிக்கை எடுக்கிற ஸ்தலமும், ஆவிக்குரிய ஆராதனையும் நம் உள்ளத்தில் வெளிப்படும் போது, எகிப்தின் நிந்தை நம்மை விட்டு நீக்கப்படுகிறது.  அதுவுமல்லாமல் நாம் தேவனுடைய ஆவியால் நிறைந்து ஆராதிப்பதும், பரிசுத்த உள்ளத்தோடும், தேவனை உத்தம இருதயத்தோடும் பின்பற்றுகிறவர்களாகயிருக்கவேண்டும்.  அப்போது நம் உள்ளத்தை தேவ பெலத்தால் நிறைக்கிறார். 

 இவைகள் தான் காலேபுடைய வாழ்வில் நடந்தது.  கர்த்தர்  அவனுடைய நாற்பதாவது வயதில் கொடுத்த வாக்குதத்தத்தை அவன் உறுதியாய் பற்றிக்கொண்டான்.  அதற்கு காரணம் அவனுடைய உத்தம இருதயம்.  ஆதலால் அவனுடைய எண்பத்தைந்தாவது வயதிலும் அவன் பெலன் குறையாமல் காணப்பட்டது.  அப்படி பெலன் குறையாமல் இருந்ததால் அவன் ஆவிக்குரிய யுத்தம் செய்து ஏனாக்கியர்களாகிய இராட்சதரின் மலைநாட்டை சுதந்தரிக்கலாம் என்று யோசுவாவிடம் சொல்கிறான்.  இவற்றை கர்த்தர் எதற்காக திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், எப்பேர்பட்ட  இராட்சத கிரியைகள் இருக்கிற ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த தேவ பெலன்  போதும் என்பதும்.  அவ்வித பெலன் பெற்றுக்கொள்ள வேண்டுமானால்  உத்தம இருதயத்தோடு தேவனை சேவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.  அப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய யுத்தம் செய்து மேற்க்கொள்ள முடியும் என்கிறார். நம்முடைய முதிர் வயதிலும் பெலன் குன்றாமல் இருக்கும் என்பதனை காலேபை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  

அவ்விதமாக காலேபுக்கு எபிரோன் சுதந்தரமாக்கப்படுகிறது. எபிரோன் என்பது நமக்கு சமாதானமாயிற்று.   அந்த சமாதானம் கர்த்தராகிய இயேசு.  முன்பு கீரீயாத் அர்பா என்ற பேராயிருந்தது.  அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்.  யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.  

இதன் காரணம், நாம் தேவனால் இரட்சிக்கப்பட்டு, தேவ பெலன் தரித்து, அந்த பெலன் கிறிஸ்துவின் வசனம், அது நமக்கு அரணும் காவலும், கோட்டையும், கேடகமும், என்பதாகும்.  மேலும் அவருடைய வசனத்தால் இராட்சத ஆவியை ஜெயிக்க முடியும்.  அவ்விதம் இராட்சத ஆவியை, தேவ பெலன் தரித்து ஜெயிக்கும் போது தேவ சமாதானம் கிடைக்கும்.  இவ்விதம் நாம் ஜெயம்பெறும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.