தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 58:11  

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உத்தம இருதயத்தோடு தேவனை பின்பற்றுவோமானால் கர்த்தர் நமக்கு தந்த தேவ பெலன் ஒருபோதும் குறைந்து போவதில்லை என்று தியானித்தோம்.  

அல்லாமலும் அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 15:1-19   

யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன் வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை.

தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி,

தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னேயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய்,

அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான்.

கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனைதுவக்கி,

பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய்,

அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கைவிட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், ரொகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று,

அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய்,

பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாய்ப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை.

எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான்.

அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு,

அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர்.

கீரியாத்செப்பேரைச சங்காரம்பண்ணிப்பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்.

அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான்.

அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான்.

அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

யூத புத்திரருக்கு அவர்களின் வம்சங்களின் படி பங்கு வீதம் கொடுக்கப்பட்டது. நாம் புற ஜாதிகளாயிருந்த போது, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யூத மார்க்கத்தை சேர்ந்தவரென்றும், நம்மையும் அவரை போல யூதமார்க்கத்தாராக்கும்படியாக, அவர் பாடுபட்டு மரித்து, பின்பு மூன்றாம் நாளில் உயிர்தெழுந்து அநேகருக்கு காட்சி கொடுத்து, நம்மையும் அவரை போலாக்கும் படியாக பெந்தேகொஸ்தே நாளில், காத்திருந்தவர் யாவர் மேலும் இறங்கி, எல்லாரையும் அவருடைய மார்க்கத்தாராக்குகிறார்.  ஆனால் அவரை உன்னதமான தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தவர்கள் அப்படியே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.  அவரை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவரால் கைவிடப்படுகிறார்கள்., என்னவென்றால் அநேக யூதர்கள் அவர் தேவனுடைய குமாரன் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. அதனைக்குறித்த தேவனுடைய வசனம்  

ரோமர் 11:8-11  

கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது;

காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான்.

இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது.

மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது யூதர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்புக் கிடைத்தது.  ரோமர் 11:12- ல் கூறப்படுகிறது என்னவென்றால் அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாக அப்படியிருக்கும்.  

பிரியமானவர்களே குறிப்பாக நாம் சொல்லப்போனால் யூதர்கள் எல்லாரும் அந்நாட்களில், விசுவாசித்து கிறிஸ்துவை பலமாக ஏற்றுக்கொண்டிருந்தால், நமக்கு இந்த ஐசுவரியம் கிடைத்திருக்காது. மேலும் பிரியமானவர்களே, நாம் காட்டொலிவ மரமாயிருக்க, நம்மை நல்ல ஒலிவ மரமாகிய கிறிஸ்துவோடு ஒட்டப்பட்டிருக்க, ஒலிவ மரத்தின் வேருக்கும், சாரத்திற்கும் உடன் பங்காளியாயிருந்தாயானால், நீ அந்த கிளைகளுக்கு விரோதமாக பெருமைப்பாராட்டாதே.  பெருமை பாராட்டுவாயானால்; நீ வேரை சுமக்காமல், வேர் நம்மை சுமக்கிறதென்று நினைத்துக்கொள் என்று சொல்கிறார். அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்து்போடப்பட்டன. நாம் விசுவாசத்தினாலே நிற்கிறோம்;  மேட்டிமை சிந்தையாயிராமல் எப்போதும் கர்த்தருக்கு பயந்திருக்க வேண்டும். 

இவ்விதமாக கர்த்தர் நம்மை யூத புத்திரர் ஆக்குகிறார். அல்லாமலும் யூத பத்திரருக்கு பங்காக கொடுக்கப்பட்ட தேசங்கள் திருஷ்டாந்தத்திற்காக கொடுக்கப்படுகிறது.   இதன் விளக்கங்கள் என்னவெனில் கிறிஸ்துவின் முழு சரீரத்தின் அவயவங்களாக நாம் மாற வேண்டும் என்றும், அல்லாமலும் காலேபுக்கு ஏனாக்கின் எபிரோன் பங்காக கொடுக்கப்பட்டதும், அங்கேயிருந்த ஏனாக்கின் மூன்று குமாரராகிய சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை துரத்தி விட்டு, தெபீரின் குடிகளிடத்திற்கு போனான். முற்காலத்தில் தெபீரின் பெயர் கீரியாத்செப்பேர்.   

மேலும் அவன் சொன்னது கீரியாத்செப்பேரை சங்காரம் பண்ணி பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக் கொடுப்பேன் என்று காலேப் சொன்னான். ஆனால் காலேபின் சகோதரன் கேனாசின் மகன் ஓத்னியேல் அதை பிடித்தான்.    ஆகையால் தன் குமாரத்தியாகிய  அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுத்தான்.  பின்பு அவள் புறப்படும் போது தன் தகப்பனிடத்தில் ஒரு வயல் வெளியை கேட்க வேண்டும் என்று உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின் மேலிருந்து இறங்கினாள்.  அவள் தகப்பன் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, எனக்கு வறட்சியான நிலத்தை தந்தீர்; நீர்பாய்ச்சலான இடம் தர வேண்டும் என்றதற்கு; அவள் தகப்பன் மேற்ப்புறத்திலும், கீழ்ப்புறத்திலும் நீர்பாய்ச்சலான இடங்களை கொடுத்தான்.  

எப்படியெனில்  அநேக பட்டணங்களும், கிராமங்களும், சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது. இதன் திருஷ்டாந்தம் என்னவென்றால் நம்முடைய வறட்சியான ஆத்துமாவை, நிணமுள்ளதாக நம்முடைய தேவன் மாற்றுவார் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தப்படுகிறது...    ஆனால் எருசலேமில் குடியிருந்த யூதப்புத்திரர், எபூசியரை துரத்தி விடக்கூடாமல் இருந்தது. ஆனால் இந்நாள் வரைக்கும் எபூசியர் யூதபுத்திரரோட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.  

பிரியமானவர்களே கிறிஸ்துவோடு உள்ள நித்திய விவாகத்தின் திருஷ்டாந்தமும், மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய மணவாட்டியின் அனுபவம், நீர்பாய்ச்சலான தோட்டமாகவும், அவ்விதம் நம்முடைய உள்ளமாகிய எருசலேமில் புறஜாதிகளின் கிரியைகளாகிய எபூசியனுடைய கிரியைகள் அழிக்கப்படாமல் இஸ்ரவேலர்கள் காணப்படுகிறார்கள் என்பதனை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறது.  

ஆதலால் நம்முடைய உள்ளம் எல்லா அசுத்தங்களையும் அகற்றி பரிசுத்தப்படுத்தி, கர்த்தரின் நீர்பாய்ச்சலான தோட்டமாக மாறும்படியாக  ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.