தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எரேமியா 31:9  

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென்.  அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அவருடைய பிள்ளைகளாக, எப்போதும் அவரை காண்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதபகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா, நீர்பாய்ச்சலான தோட்டத்தை போலிருக்க வேண்டும் என்று தியானித்தோம்.  அதற்கு உதாரணமாக காலேபுடைய மகள் அக்சாளை, கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறார்.  மேலும் அவள் தந்தையினிடத்தில் நீர்பாய்ச்சலான இடத்தை தர வேண்டும் என்று கேட்டதற்கு, அவளுக்கு மேற்புறத்திலும், கீழ்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான இடத்தை கொடுத்தான்.  இதனை திருஷ்டாந்தப்படுத்துவது என்னவென்றால் பரலோகத்திலும், பூலோகத்திலும், கர்த்தரின் தோட்டமாக நாம் இருப்போம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

யோசுவா 16:1-10    

யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று,

பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,

மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.

இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.

எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.

மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,

யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.

தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.

பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.

அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

மேற்க்கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்கின் வீதமாவது யோர்தானிலிருந்து, அதற்கு கிழக்கான தண்ணீருக்கு போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று, பெத்தேலிலிருந்து லூசுக்கு போய்,  அதன் எல்லையை கடந்து, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.  இதை யோசேப்பின், புத்திரராகிய மனாசேயும், எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.  இதன் விளக்கம் என்னவெனில்,  யோசேப்பு கனிதரும் செடி.  இந்த கனிகள் எப்படி வருகிறது என்றால் நம் ஒவ்வொருவருடைய உள்ளமும், பெத்தேலாகவும், அது பலதரப்பில் வாழ்ந்து கடைசியில் சமுத்திரம் வரைக்கும் போய் முடியும். சமுத்திரம் என்பது துன்மார்க்கமான இச்சைகளில் நடக்கிற பரிகாசக்காரர்களின் கூட்டத்தைக் காட்டுகிறது. அவர்கள் சமுத்திரத்தின்  அலைகளை போல அமைதியும், சமாதானமும் இல்லாமல் காணப்படுவார்கள். 

இதனை சுதந்தரிப்பவர்கள் மனாசேயும், எப்பிராயீமரும்.  எப்பிராயீமருக்கு உள்ள சுதந்தரம் கொடுக்கப்படுகிறது.  ஆனால் எப்பிராயீம் புத்திரருக்கு பிரத்தியேகமாக கொடுக்கப்பட்ட பட்டணங்களும், அவைகளுன் கிராமங்களும் மனாசே புத்திரரின் சுதந்தரத்தின் நடுவிலிருக்கிறது.    ஆனால் அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரை துரத்தி விடவில்லை.    ஆதலால் கானானியர் இந்நாள் மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதி கட்டுகிறவர்களாய் சேவிக்கிறார்கள்.  பிரியமானவர்களே எப்பிராயீமர் திருப்பிப்போடாத அப்பம் என்று கர்த்தர் சொல்கிறார்.  

இதன் காரணம் என்னவென்றால் எப்பிராயீமராகிய இஸ்ரவேலர், முழுமையான இரட்சிப்பை அடையாத படி, தங்கள் உள்ளத்தில் கானானியனாகிய பிசாசின் கிரியைகளை செய்து வருகிறதால் அவர்களால் இரட்சிப்பு அடைய முடியவில்லை.  அதனால் அவர்கள் உள்ளம், பெருமைகளால் நிறையப்பட்டிருக்கிறது.  அதனைக்குறித்து 

ஓசியா 5:3-6  

எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.

அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள்.

இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான்.

அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.

 மேற்க்கூறப்பட்ட வசனங்களில் உள்ள கிரியைகள், நம் உள்ளத்தில் இடம் பெறாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.  அவ்வித கிரியைகள் நம் உள்ளத்தில் வைத்து விட்டு கர்த்தரை தேடினால், எத்தனை பலி செலுத்தினாலும் நாம் கர்த்தரை காணமுடியாது. நம்மை விட்டு அவர் விலகி செல்வார்.  ஆனால் எப்பிராயீமை குறித்து கர்த்தர் சொல்வது 

எரேமியா 31:20 

எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

 ஆதலால் பிரியமானவர்களே மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானித்து முழு இருதயத்தோடு தேவனை தேடுவோமானால் அவரை நாம் காண்போம்,  அவர் நம்மை விட்டு விலகமாட்டார்.  அவ்விதமாக நாம் யாவரும் அவருடைய பிள்ளைகளாகும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.